எனது பாம்பே நினைவுகள்!!
1983 முதல் நாலைந்து வருடங்கள் பாம்பேயில், பனுவெல் என்கிற இடத்தில் ஆபீஸில் எடுத்து தரும் அபார்ட்மெண்ட்டில் தங்கின அனுபவம் உண்டு.
1)C.5. 33.1.3. வீடு அட்ரஸ். நினைவு வருகிறது.
2)அரை குறை மராட்டி, ஹிந்தி, கலவைகளில் ,
காய் பாய்ஜி,மாயித்,
கர்மே,கித்னா பச்சோன்,
ஸபயத் காடி ஆலி,
கியா படுத்தா ஹை,
மேராகர்மே பானி,
.....
இந்த மாதிரி எனக்கு தெரிந்த முக்கிய சில வார்த்தைகள் நினைவில் வருகின்றன.
3) ஊரில் இருந்து திரும்பிய பொழுது,ஜீப்பில் ரோடுகளின் வெள்ளக்காடுகளில் நீந்தி, குவார்ட்டஸ் சென்ற. அனுபவம் உண்டு. அன்று ஜூன் 8 .மழை ஆரம்பிக்கும்தினம் என்பதும் நினைவில்.
4)காந்தி மார்க்கெட்டில்
சீப்பாக புடவைகள், ரெடிமேட் சுடிதார்கள், என அள்ளிக்கொண்டு வந்ததும், என் பெண்கள் (8,6, வயதுகள்) அவைகளை
சண்டையிட்டு பகிர்ந்து கொண்டதும் நினைவு.
5)ஸபயத்து காடி ஆலி என குதித்துகொண்டு, என் பெண் பள்ளி சென்றது.
6)பாம்பேயில் ஒரு சிங்கப்பூரில் சிட்டிசனான ஒருபெண்
ஆபீஸ் ப்ரண்ட் மனைவி எனக்கு உயிர் தோழியாகி, என் பெண்களுக்கு சிங்கப்பூர் ஆன்ட்டியாகி,
அவளிடம் எனக்கும் என் உறவினர்கள் சிலருக்கும் சிங்கப்பூர் புடவைகள், விலைக்கு 200 ரூபாய் வீதம் வாங்கி கொண்ட அனுபவம்.
7மற்றபடி பாம்பே மகாலக்ஷ்மி கோயில்,
கேட்வே ஆப் இண்டியா புறாக்கள், எனக்கு பிடித்த இடமான காந்தி மார்க்கெட் பர்ச்சேஸ் இவைகள் ஆனவுடன்
நான் திருப்தியாகி போதுமென சொல்லி விட்டேன்.
எனக்கு தேவை காந்தி மார்க்கெட் பர்ச்சேஸ்.
அத்துடன் சுற்றி பார்த்தது அலுத்து விட்டது.
8) ஒரு நாள் மதியம் ஆபீஸில் இருந்து வீடு வந்தார்.இந்திரா காந்தியை சுட்டு விட்டார்கள் என்றார்.
அல்லது ராஜீவ் காந்தி பாம்? நினைவில்லை.
அவ்வளவு தான் எனதுபாம்பே நினைவுகள்.
ரமா ராஜகோபாலன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
உறுப்பினர் பதிவு
மும்பை மின்சார ரயில்கள்.. ஒரு பயணம் மற்றும் மழை காலம் ஒரு அனுபவம்.
மும்பைக்கு மொதமொதல்ல வர்ற யாருமே, ரொம்பவும் அதிசயிச்சுப்பார்க்கிறது இங்குள்ள , பரபரப்பான ஆட்களையும், மின்சார ரயில்களையும்தான். அதிலும் எங்கூர் ரயில் நிலையங்கள்ல உள்ள கூட்டத்தைப்பார்த்தா, திருவிழாக்கூட்டம் தோத்துடும் :-)). நாம சும்மா கூட்டத்துக்கு நடுவுல நின்னுக்கிட்டா போதும். அப்படியே ட்ரெயின்ல ஏத்தி, இறக்கிவிட்டுடுவாங்க. சந்தேகமா இருந்தா ஒரு நடை சத்ரபதி சிவாஜி டெர்மினல்ஸ போயி பாத்துட்டு வாங்க.இங்க உள்ளவங்களுக்கு நடக்கவே தெரியாதோன்னுதான் நினைப்பீங்க.
ஒரு நாளைக்கு மின்சார ரயில்கள் ஓடலைன்னாலும், எங்கூரு ஸ்தம்பிச்சுப்போயிடும்,.. மும்பையின் ரத்த நாளங்கள்ன்னே இதை சொல்லலாம். ரயில்களின் முதல்வகுப்புகளை குறிவெச்சு வெடிகுண்டு சம்பவம் நடந்தப்ப மும்பையே கிடுகிடுத்துப்போச்சு :-((. ஒரு நாளைக்கு 8.9 மில்லியன் மக்கள் லோக்கல் ரெயில்களை பயன்படுத்தறதா புள்ளிவிவரங்கள் சொல்லுது. மின்சார ரயில்களை நாங்கள் லோக்கல்ன்னுதான் குறிப்பிடுவோம். மும்பை ரெயில்வேக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்தியாவின் முதல் , மற்றும் ஆசியாவின் பழமையான ரயில்வே என்ற சிறப்பு இதற்குண்டு. இந்தியாவுல முதல் ரெயில் மும்பைக்கும், ஜஸ்ட் முப்பத்து நாலே கிலோமீட்டர்ல இருக்கிற தானேக்கும் இடையில ஓடியிருக்கு.
குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் இங்கு எல்லாம் தலை கீழ்தான்.
சூடா காப்பி கேட்டு இருக்கேன் வந்த பிறகு அப்புறம் தொடரலாம்.
பயணம் தொடரும்
மும்பை ரெயில்வே ரெண்டுபிரிவுகளா இயங்குது. ஒண்ணு வெஸ்டர்ன் ரெயில்வே(WR), இன்னொண்ணு, சென்ட்ரல் ரெயில்வே(CR).இதை நாங்க வெஸ்டர்ன்,மற்றும் சென்ட்ரல் லைன்ன்னு சொல்லுவோம். மொத்தம் 183 லோக்கல் ரயில்கள் 2624 ட்ரிப்கள் அடிக்குது. ஆனாலும், மும்பையின் மக்கள்தொகைக்கு முன்னே இது யானைவாயில் சோளப்பொறிதான். அதனால, இப்போ புதுசா மெட்ரோ மற்றும் மோனோ ரயில்கள் ஓடவிடணும்ன்னு ஏற்பாடுகளெல்லாம் நடந்துக்கிட்டிருக்கு. இங்கே பஸ்களை மாதிரியே மெதுஓட்டம் மற்றும் விரைவு ரயில்கள்ன்னு ரெண்டுவகையா பிரிச்சிருக்காங்க. இதில் மெது ஓட்ட ரயில்கள் எல்லா ஸ்டேஷன்களிலும், விரைவு ரயில்கள் குறிப்பிட்ட ஸ்டேஷன்களிலும் நிற்கும். ஒவ்வொண்ணுக்கும் தனித்தனி தடங்களும் உண்டு.
இங்கே மும்பையில் C.S.T., மற்றும் சர்ச்கேட் என்று ரெண்டு முக்கியமான டெர்மினஸ்கள் இருக்குது. மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸைத்தான் நிறைய மக்களுக்கு, குறிப்பா தென்னிந்தியர்களுக்கு தெரியும். ஒரு காலத்துல V.T.ன்னு சுருக்கமா அழைக்கப்பட்ட விக்டோரியா டெர்மினஸ்தான் பலத்த போராட்டத்துக்கப்புறம் C.S.T.(சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்) ஆகியிருக்கு. முக்கியமான ரயில்களெல்லாம் இங்கிருந்துதான் புறப்படும். ஆனா, இப்பல்லாம் விரைவு ரயில்கள் ரெண்டு டெர்மினஸ்களிலும் இருந்து புறப்படுது.
இதுல, வெஸ்டர்ன் லைன்ல, சர்ச்கேட்ல இருந்து தஹானுரோட் வரைக்கும் போகிறபாதையில்,
Churchgate, Marine Lines, Charni Road, Grant Road, Mumbai Central, Mahalaxmi, Lower Parel, Elphinstone Road, Dadar,Matunga Road, Mahim Junction, Bandra, KharRoad, Santacruz, VileParle, Andheri, Jogeshwari, Goregaon, Malad, Kandivali, Borivali, Dahisar, Mira Road, Bhayandar, Naigaon, Vasai Road, Nala Sopara, Virar, Vaitarna, Saphale, Kelve Road, Palghar, Umroli, Boisar,Vangaon, Dahanu Road
முதலான ஸ்டேஷன்கள் வருகின்றன. தடித்த எழுத்துக்கள்ல குறிப்பிட்டிருக்கும் இடங்களில் மட்டுமே விரைவு ரயில்கள் நிற்கும்.
C.S.T.லேர்ந்து ஆரம்பிக்கும் செண்ட்ரல் லைன் ரொம்ப முக்கியமானது. கூடுதலான கூட்டம் இந்த லைன்லதான் அள்ளும். இதுல மூணு லைன்கள் இருக்குது. ஒண்ணு, C.S.T.லேர்ந்து ஆரம்பிச்சு கல்யாண் வரைக்கும் போகுது. அதுக்கப்புறம் அது ரெண்டா பிரிஞ்சு ஒண்ணு கஸாராவுக்கும் இன்னொண்ணு கோப்போலி-க்கும் போகுது. இந்த லைன்லதான் குர்லா, தாதர், தானா, கல்யாண்ன்னு முக்கியமான நமக்கெல்லாம் ரொம்ப பரிச்சயப்பட்ட நிலையங்கள் வருது. இதில் குர்லா ஸ்டேஷனில், ட்ரெயினிலிருந்து ஏறுவதும் இறங்குவதும் ஒரு சாகசப்பயணமாகவே இருக்கும்.. கொஞ்சநாள் பழகியாச்சுன்னா அந்த பரபரப்பு உங்களுக்கும் தொத்திக்கும் :-))
இந்த லைன்ல , Chhatrapati Shivaji Terminus , Masjid Bunder, Sandhurst Road, Byculla, Chinchpokli, CurreyRoad, Parel, Dadar, Matunga, Sion, Kurla, Vidyavihar, Ghatkopar, Vikhroli, Kanjurmarg, Bhandup, Nahur, Mulund, Thane, Kalwa, Mumbra, Diwa, Kopar, Dombivli, Thakurli, Kalyan. போன்ற நிறுத்தங்கள் வரும். இதில் டிட்வாலாவுல இருக்கிற புள்ளையார் கோயிலும், 'மாத்தேரன்' என்ற மலைவாசஸ்தலத்துக்கு பக்கத்துல இருக்கிற 'நேரல்' என்ற நிலையங்களும் முக்கியமானவை. மாத்தேரனுக்கு டாய் ட்ரெயினில் போக விருப்பமிருந்தா நேரல்ல இருந்துதான் கிளம்பணும்.
சென்ட்ரல் லைனில் வரும் நிறுத்தங்கள்:
முதல்லைன்: Kalyan, Vitthalwadi, Ulhasnagar, Ambarnath, Badlapur, Vangani, Shelu, Neral, Bhivpuri Road, Karjat, Palasdari, Kelavli, Dolavli, Lowjee, Khopoli.
துணை லைன் 1:Kalyan, Shahad, Ambivli, Titwala, Khadavli, Vasind, Asangaon, Atgaon, Khardi, Kasara
துணை லைன் 2: Vasai Road, Juchandra , KamanRoad, Kharbav, Bhiwandi, Kopar, Dativali, Nilaje, Taloja, Navade Road, Kalamboli, Panvel.
இதில் இரண்டாம் துணை லைன் கிட்டத்தட்ட தொழிற்பேட்டைகளை ஒட்டியே போகுது.
சென்ட்ரல் லைனில் ஒரு பகுதிதான் ஹார்பர் லைன். இதுவும் C.S.T.லேர்ந்துதான் புறப்படுது. இது மும்பையை பன்வெலுடன் இணைக்கிறது. முக்கியமா நவிமும்பை மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதிலும் மூணு துணைலைன்கள் இருக்குது.
முக்கியமான C.S.T.லேர்ந்து பன்வெல் வரைக்குமான லைன்ல, Chhatrapati Shivaji Terminus, Masjid Bunder, Sandhurst Road, Dockyard Road, Reay Road, Cotton Green, Sewri, Wadala, Guru Tegh Bahadur Nagar, Chunabhatti, Kurla, Tilak Nagar, Chembur, Govandi, Mankhurd, Vashi, Sanpada, Juinagar, Nerul, Seawoods-Darave, CBD Belapur, Kharghar, Mansarovar, Khandeshwar,Panvel
வாஷியிலிருந்து தானா வரைக்குமான லைன்ல, Vashi, Sanpada, Turbhe, Kopar Khairane, Ghansoli, Rabale, Airoli, Thane முதலான நிறுத்தங்களும்,
பன்வெல்லில் இருந்து தானா வரைக்குமான லைன்ல, Panvel, Khandeshwar, Mansarovar, Kharghar, CBD Belapur, Seawoods-Darave, Nerul, Juinagar, Turbhe, Kopar Khairane, Ghansoli, Rabale, Airoli, Thane முதலான நிறுத்தங்களும்
வடாலாவிலிருந்து அந்தேரி வரைக்குமான லைன்ல Wadala, King's Circle, Mahim, Bandra, Khar Road, Santacruz, Vile Parle, Andheri .. முதலான நிறுத்தங்களும் வருது.
கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லாப்பாகங்களிலேர்ந்தும் வேலைதேடி தினமும் மக்கள் வந்து குவிஞ்சுக்கிட்டே இருப்பதால, எவ்ளோ ரெயில்கள் ஓடினாலும் பத்தமாட்டேங்குது. 1700பேர் இருக்கவேண்டிய ஒரு ரயில்ல கிட்டத்தட்ட 4500 பேர் பயணம் செய்யறதா சொல்றாங்க. இட நெரிசல்ல... ஜன்னல்ல, அப்புறம் கதவுலயெல்லாம் தொங்கிக்கிட்டும், சிலசமயங்களில் மேல்கூரையிலும் பயணம் செய்யறதெல்லாம் சர்வசாதாரணம். இதனாலயே விபத்துக்களும் நடக்குது. வெளிநாட்டுக்காரங்க யாராச்சும் ரயில்ல பயணம் செய்யணும்ன்னு ஆசைப்பட்டா, கூட்டமில்லாத ஞாயிற்றுக்கிழமைதான் சவுகரியப்படும். அப்படியும் உக்கார இடமிருக்காது.
நிறைய சிறுவியாபாரிகளுக்கு மும்பை ரயில்கள்தான் இலவச வியாபாரஸ்தலம்.. வெளியில் ப்ளாட்பார்மில்கூட கிடைக்காத எக்கச்சக்க சிறுசிறு பொருட்களெல்லாம் இங்கே மலிவுவிலையில் கிடைக்கும். காய்கறிகள், பழங்கள், பெண்களுக்கான ஃபேன்ஸி பொருட்கள் எல்லாம் அழகா பாக்கெட் போட்டு வெச்சிருப்பாங்க. இந்த வியாபாரத்தை நம்பியே எக்கச்சக்க குடும்பங்கள் பிழைக்குது.
ட்ரெயின் நிக்கிற சொற்ப நேரத்துல ஏறுறதையும், இறங்கறதையும்... மும்பைக்கு புதுசா வந்தவங்க மொதமொத பார்க்கிறப்ப மலைச்சுப்போயிடுவாங்க. பழக்கப்பட்டவங்களுக்கே சிலசமயம் கஷ்டமாயிடும். இப்படித்தான் கொஞ்ச வருஷங்களுக்கு முன்னே, ஒருதடவை, ரங்க்ஸும் நானும் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு தானாவுக்கு கிளம்பினோம். ரங்க்ஸும் பையரும் முதல்வகுப்பிலும், நானும் பெண்ணும் பெண்கள் பெட்டியிலும் இருந்தோம்.
தானாவில் ரங்க்ஸும் பையரும் இறங்கிட்டாங்க. நானும் பெண்ணும் இறங்கப்போகும்போது ஒரு கூட்டம் அப்படியே எங்களை உள்ளயே தள்ளிட்டுப்போயிடுச்சு. இறங்கறதென்ன!!.. அந்தக்கூட்டத்துல எங்களால அசையக்கூடமுடியலை. பொண்ணு பயத்துல கத்த ஆரம்பிச்சுட்டா.. அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு, தானாவுக்கு அடுத்து இருக்கும் முலுண்டில் இறங்கி, எதிர்ப்புறம் வந்த ட்ரெயினில் தானாவுக்கு வந்து சேர்ந்தோம். ரொம்ப நாளைக்கு அந்தபயம் இருந்துக்கிட்டேருந்தது :-))
இங்கே ட்ரெயினால நடக்குற விபத்துக்களைப்பத்தி சொல்லியே ஆகணும், ரயில் வருதுன்னு தெரிஞ்சாலும், தண்டவாளத்தை ஓடிக்கடக்கறதும், ஒரு ப்ளாட்ஃபார்மிலிருந்து இன்னொரு ப்ளாட்ஃபார்முக்கு போகணும்ன்னா, மேம்பாலத்தை உபயோகப்படுத்தாம, அப்படியே இறங்கி ஓடறதும், முக்கியமா .. சாலைகளில் கேட்டை அப்படியே குனிஞ்சு கடக்கறதும் கூடுதல். பத்தாததுக்கு தொங்கிட்டுப்போறவங்கள்ல, தள்ளுமுள்ளு காரணமா எத்தனையோ பேரு ட்ராக்ல கீழே விழுறதும் சகஜம். எவ்வளவுதான் எச்சரிக்கை செஞ்சாலும் பொறுப்பில்லாம நடந்துக்கிட்டு, 'இட் ஈஸ் த ஸ்பிரிட் ஆஃப் மும்பை'ன்னு சொல்றவங்களும் இருக்காங்க. என்ன நடந்தாலும், மும்பை ரயில் அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கு. நிற்காமல்.....
அன்புடன்,
டோம்பிவிளி
மும்பை.
No comments:
Post a Comment