Tuesday, December 8, 2020

கண்டோபா மந்திர்

சாய்பாபா உருவச்சிலையை கழுவி சுத்தம் செய்ய தேவையான வெந்நீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு சாய்பாபா சிலையை கழுவிய பிறகே, சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு, பூஜையும் நடத்தப்படுது. இதற்கு அந்த குடுபத்தினர் சொல்லும் விஷயம் சுவாரசியமானது.  அவர்களது  பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தார்களாம். ஒருநாள் இரவு, அவரது தாயின் கனவில் தோன்றிய சாய்பாபா  தனது விக்கிரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார். அன்றுமுதல் இப்போதுவரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம் என தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர் கூறினார்.


இந்த அனுமன் ஆலயம் இப்பநல்ல கட்டமைப்பில் இருக்கு. பாபா ஷீரடி வந்தப்போ அவர் இந்த கோவிலில்தான் எப்பொழுதும் அமர்ந்திருப்பாராம். அதேப்போல் இங்க ஒரு மியூசியம் ஒன்னு இருக்கு. இங்கு சாய்பாபா பயன்படுத்திய எல்லாப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாபாவின் பாதுகைகள், கண்டோபா பூசாரிக்கு பாபா கொடுத்த நாணயங்கள்லாம் காட்சிக்கு இங்கு வைக்கப்பட்டுள்ளது. சாய்பாபா மக்களுக்கு உணவளிப்பதற்காக சமைத்த கல் உபகரணங்கள், மற்றும் 50 பேர்,100 பேருக்கு சமைக்க பயன்படுத்தப்படும் அண்டாக்கள்லாம் இங்க காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு. இங்கிருக்கும் கல் அரவை எந்திரம்கூட ஒரு ஆழமான தத்துவத்தை உணர்த்துவதற்காக உபயோகப்படுத்தியதாக சொல்லுவாராம். அந்த அரவை எந்திரமே கடவுள் மீது கொண்டுள்ள பக்தியும் மக்களுக்கு உதவும் தர்மமும் ஆகும். மேல்பக்க கல் பக்தியும், கீழ்பக்க கல் தருமநெறி வாழ்க்கை என்றால் இரண்டும் சேர்ந்து ஆன்மாவை பக்குவப்படுத்தி அரைத்து இறைவனை அடைய உதவும் முயற்சியின் மாதிரியே இது என்பாராம்.


அடுத்து நாம பார்க்கப்போற முக்கியமான இடம் கண்டோபா மந்திர் கண்டோபா,  பைரவரின் அம்சம் என சொல்லப்படுது.இன்னும் சிலர் கிராம தேவதை என்றும் சொல்கிறார்கள் .நம்மூரில் இருக்கும் அய்யனார் பொல .இந்த கோயிலில் கண்டோபா, மற்றும் அவரது துணைவியர் பனாய் மற்றும் மல்சாய் போன்ற கடவுள்களின் சிலைகள் மற்றும் அவருடைய வாகனமான வெள்ளி குதிரையும்  இருக்கு. பாபா முதன்முறையாக ஷீரடிக்கு ஒரு கல்யாண குழுவுடன்தான் வந்ததாக சொல்லப்படுது. அந்த  குழுவினருடன் சாய்பாபா இவ்வழியே வந்தபோது இந்த கோயிலின் அருகிலுள்ள ஆல மரத்தடியில் அவர் அமர்ந்ததாகவும், அவரை இக்கோயிலின் பூசாரி “வர வேண்டும் சாயி” என அவரை முன்பே அறிந்தவர் போல வரவேற்றதாகவும் சொல்லப்படுது. அந்த கோவிலின் தெய்வத்தின் அருளால், அவர் முதன்முதலில் சாய் என அன்றுதான் அழைக்கப்பட்டதா சொல்லப்படுது. பாபா இந்தக்கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்தக்கோவில் ஷீரடி பஸ் நிறுத்தத்திற்கு அருகில், சற்று எதிர்பக்கமாக  உள்ளடங்கியுள்ளது இந்த கோவில்.  அதிகாலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணி வரை இக்கோவிலின் நடைதிறந்திருக்கும்.



No comments:

Post a Comment