Tuesday, December 8, 2020

இதுதான்வாழ்க்கை.

 இதுதான்வாழ்க்கை..

குட்டிக்கதை..

"இந்தாங்கோ.." டேபிளில் உட்கார்ந்து பேப்பரில் மூழ்கி இருந்த கோபு மாமாவின் கை அருகில் டம்ளரை வைத்தாள் மனைவி அலமு😍😍

ஒரு வாய் குடித்து விட்டு ""ம்ம்...காபி வர வர கஷாயம் மாதிரி இருக்கு."".இது மாமா..

"க்கும்...இருக்கும் இருக்கும்..கஷாயம் தான் அது..மழை யா இருக்கேன்னு இஞ்சி தட்டிப் போட்டு  எலுமிச்சம் பழம் மிளகு சீரகம் வெத்தல கற்பூரவல்லி துளசி பனங்கல்கண்டு எல்லாம் போட்டு கஷாயம் போட்டிருக்கேன்..முதல்ல இதை குடிங்கோ..சித்த கழிச்சு காபி தர்றேன்.."

மாமாவின் கேள்விக்கு

அலமு மாமியின் பதில்..

கஷாயம் குடிச்சாச்சு..காபி தரயா??

கேட்டவுடன் கையில் காபியுடன் அலமு மாமி ஆஜர்..

""காபியா இது..கஷாயம் மாதிரி தான் இருக்கு..எங்கம்மா போடற காபி மாதிரி வருமா??  தினமும் ராத்திரி காபி கொட்டை வறுத்து அரைச்சு வச்சு கார்த்தால டிகாஷன் போட்டு கறந்த பாலில அளவா டிகாஷன் விட்டு நுரை ததும்ப காபி  போட்டு இந்தாடா கண்ணா ன்னு வெங்கல டம்ளர்ல குடுப்பா பாரு."".😍😍

மாமா முணுமுணுத்த சத்தம் கேட்டு ஓடி வந்த மாமி ""ஆரம்பிச்சாச்சா..அம்மா மாதிரி காபி போட முடியுமா அப்புறம் மேல சொல்லுங்கோ‌..""

அம்மா மாதிரி கல்சட்டியில குழம்பும், ஈயச்சொம்பில ரசமும் யாரால பண்ண முடியும்?? கேட்டுக்கேட்டு அலுத்து போச்சு எனக்கு..சலித்துக் கொண்டாள் அலமு மாமி....😍😍

காலம் ஓடியது..மாமி பேர் தெரியாத நோயில் போய் சேர்ந்து விட்டாள்..கோபு மாமா பிள்ளை நாட்டுப் பெண்ணுடன் இருக்கிறார்...ரொம்ப நல்ல குணம் நாட்டுப் பெண் ராதாவுக்கு...வேலைக்கு போகிறாள்..கார்த்தால காபி பிளாஸ்கில் வைத்து விட்டு டிபன் சமையல் பண்ணி ஹாட்பேக்கில் வைத்து விட்டு ஆபீஸ் கிளம்பி விடுவாள்...பில்டர் காபி கல் சட்டி குழம்பு ஈயச் சொம்பு ரசம் எல்லாம் கனவாக போய் விட்டது கோபு மாமாவிற்கு..😍

"பாவம் ராதா..வேலைக்கு போறதால இன்ஸ்டனட் காபி தான் ஈசி." புரியாமல் இல்லை..

."பையனும் அப்பா அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ..ராதா உங்களுக்கு எல்லாம் பண்ணித்தர்றா..அம்மா கிட்ட குத்தம் சொன்ன மாதிரி இவ கிட்ட சொல்லாதீங்கோ முதலிலேயே பையன் சொல்லிட்டதால் கப்சிப் ..வாயே திறப்பதில்லை கோபு மாமா..😍

வயதாக வயதாக தனிமை வாட்டுகிறது..அன்று யதேச்சையாக பீரோவில் எதையோ தேடப் போக  பீரோவில் வைத்திருந்த மனைவி அலமுவை கல்யாண போட்டாவில்  பார்த்த கோபு மாமா"அலமு உன் அருமை இப்ப தான் புரியறது..வேளா வேளைக்கு முகம் கோணாம எனக்கு பிடிச்சதை சமைச்சுப் போட்டுண்டு  "உன் சமையல்  சுமாரா தான் இருக்கு"ன்னு நான் சொன்னதையும் சகிச்சுண்டு ..முச்சு நிக்கற நிமிஷம் வரைக்கும் " நான் போனப்பறம் அப்பாவை நீ தாண்டா பார்த்துக்கணும்..ஹோம்ல விட்டுடாதேன்னு பையன் கையை பிடிச்சுண்டு அழுதியே.." அலமு..நீ இருக்கறப்போ உன்னை புரிஞ்சுக்கல..நீ இல்லாம வாழ்ந்தது போதும்..ஆரோக்கியமா இருக்கும் போதே பகவான் அழைச்சுக்கணும்..பிள்ளை நாட்டுப் பொண்ணுக்கு தொந்தரவா இருக்க படாது..அம்பாளை வேண்டிக்கற மாதிரி அலமு உங்கிட்ட வேண்டிக்கறேன்..என்னைக் கூப்புட்டுக்கோ உன்னோட" அலமு மாமி யின் போட்டாவை கட்டி அணைத்தபடி தேம்பி தேம்பி அழுது கொண்டு இருந்தார் கோபு மாமா..தேற்றத் தான் யாருமில்லை...

No comments:

Post a Comment