கோலம் #ganeshamarkalam
சிலவருஷங்களுக்கு முன்னால், 0630க்கு வேலைக்கு போரச்சே MDLB காலனியும் RP ரோடும் சேர்ர இடத்தில் ஒரு ஆத்தில் அமோகமா ஒரு கோலம் பாப்பேன். அதை கடக்கும்போது இதை யார் போட்டான்னு வியப்பா இருக்கும்.
ஒரு நாள் நான் சீக்கிரமா அல்லது அவா லேட்டான்னு தெரியலை, ஒரு 60 மதிக்கத்தக்க பிராமணர் தாடியோட கோலம் போட்டுண்டிருந்தார். பாதி புள்ளி சேக்கலை இருந்தாலும் அப்பவே அதுமுடிஞ்சப்புரம் எப்படி வரும்னு சொல்லித்து. அவரை அப்புரம் சந்தித்து அவர் திறமைக்கு என் வாழ்த்துக்களை சொன்னேன். கொலம் அவரோட பொழுதுபோக்காம், எந்தாத்துல தூங்கினாலும் அடுத்த நாள் அவாத்தில் கோலம்போட்டுடுவாராம்.
கோலம் பெண்களோட சாம்ராஜ்ஜியம், அப்படித்தான் இருக்கணும், இந்த மனிதர் ஒரு விதிவிலக்கு. அவர்போல இன்னும் சிலர் இருக்காளான்னு தெரியலை. சென்னையில் கோலம் போட்டிகள் நடக்கும், சுந்தரம் ஃபைனான்ஸ், தினமலர் போட்டின்னு நூத்துக்கணக்கில் பங்கு கொள்வா. திண்ணை மெம்பர்ஸும் கலந்துண்டிருக்கலாம். எவ்வளவுதான் மாடெர்னா இருந்தாலும் பெண்கள் கோலத்துலே ஈடுபாட்டோடத்தான் இருக்கிரதை பார்க்கிரேன். அதனால் கோலம் போடுவதில் ஏதொ சூட்சுமம் இருக்கு.
என் அம்மா அவர் காலத்தில் நன்னா கோலம் போடுவா. மதுரை காமராஜ் நகரில், 4ஆவது தெருவில், தல்லாகுளத்தில் வெள்ளீக்கிழமை வந்தா பெண்களுக்கிடையே கோலத்தில் மௌனமா ஒரு பனிப்போர் நடக்கும். முதலில் வீட்டுக்கு முன்னாடி இடத்தை சாணித்தண்ணி தெளிச்சு தயார் பண்ணுவா. அப்புரம் அரிசிமாவில் பெரிய கோலம் உருவாகும். அதுக்கு செம்மண் பார்டர்.
க்ரிஷ்ண ஜயந்தி வந்தா அந்த கோலம் மெல்ல சின்ன சின்ன அடி எடுத்து வீட்டுக்குள்ளே வந்துடும்.
என் மனைவியும் பிரமாதமா கோலம் போடுவா. ஒரு புஸ்தகம் வச்சுண்டு தினம் ஒரு பக்கம். விசேஷ நாட்களில் என்னையும் கூப்பிடுவா முதலில் கோடு போடுவதர்க்கு, அப்புரம் அதுலே அவளே கலர் போட. நான் உடனே ஒத்துப்பேன் என்னா இது அவளுக்கு நான் கொஸ்டீன் பேபர் செட் பண்ராப்புலேயும் அதுக்கு அவ விடை கண்டுபிடிக்கிராமாதிரியும் எனக்கு தோணும். சான்ஸை விடலாமா? இந்த பொங்கலுக்கு மாட்டு தலை, கொம்பு, பானை, கரும்பு போட்டேன். அதில் மனைவி கலர் ரொப்பினா. எதுத்தாத்து பொங்கல் கோலத்தைவிட நன்னா வந்தது. நாங்க உள்ளே வந்துட்டு ஜன்னல்லேந்து அவா போறாமையோட அதை வெறிச்சு பாக்கிரதை பாத்தோம்.
நாங்க நினைச்சதை சாதிச்ச திருப்ப்தியில் அன்னைக்கு பண்டிகை ஜோரா கொண்டாடினோம்.
இந்தகாலத்து கோலம் ரொம்ப தூரம் நகந்து வந்துடுத்து, ஆனா ரொம்ப கஷ்டமான கோலத்தையெல்லாம் சர்வ சாதாரணமா போட்டுடரா. டிஜைன் கம்ப்யூடர் செஞ்சு காமிக்கிறது. ஆனால் பாரம்பரிய அரிசிமாவிலும் செம்மண்ணிலும் போட்ட கோலங்கள் தான் மனசை சுண்டி இழுக்கிரது. சதாரணமான தினப்படி போட்ர கோலம் அதை போட்டவாளை பத்தி பல விஷயங்கள் சொல்லும், சில புள்ளிகளையும், அதை சுத்தி சின்ன வளைந்து நெளியும் கோடுகளையும் வச்சு அவா சுத்தி இருக்கிற அக்கம் பக்கத்துக்கு எப்படி நல்ல ஒரு கதை சொல்லமுடிஞ்சதுன்னு.
புள்ளிகோலம் அப்புரம் புள்ளியில்லாத கோலம். கோலம்கிரது புள்ளிகளை சேர்ப்பது மட்டும் இல்லை. சில பேண்கள் பாதீல திகைச்சு பொய் எங்கே அரம்பிக்கிறது எந்தபக்கம் திரும்பரதுன்னு நின்னுடுவா. திருவிழாவுலே தொலைஞ்சுபோன மாதிரி. பாக்கிரத்துக்கு சுவாரஸ்யமா இருக்கும். நம்பளாலெ உதவமுடியலையேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கும். இதுக்காகவே என் மனைவி நிறைய கோல அச்சு வச்சுருக்கா. அதில் அரிசிமாவு நிரப்பி உறுட்டினா போதும், துக்கமே வராது.
ஒருதடவை ஆதிகும்பேஸ்வரர் கோவில் போனப்போ அங்கே உள்ளே இருக்கிர கடையில் நிறைய வாங்கினா. அதோட ஒரு சப்பாத்தி குழவியும். அது நாதஸ்வரம் செய்யர அதே மரத்தில் செஞ்சதாம். கடைக்காரன் சொன்னான். எதுக்கு இப்படி கனமா குழவி வாங்கரான்னு கொஞ்சம் பயந்தேன்
கொல அச்சு 6 மாசத்துக்குத்தான். அது போடர டிஜைன் அலுத்துப்போயிடும். விசேஷத்தன்னைக்கு உருளாது. அப்படி ஆச்சுன்னா மெள்ள கிட்டக்க வந்து கும்பகோணம் எப்போ போகலாம்னு ஆசையா கேட்பா.
மாக்கோலம் அழகா இருக்கும் - மெல்ல காஞ்சு அதுக்கு உயிர் வரும். அதுக்கு செம்மண் போட ரொம்ப ஆசைப்படுவேன். ஈரக்கோலம் போட்டப்புரம். எல்லா கணவன்மார்களுக்கும் இது பிடிக்கும்னு நினைக்கிரேன். ஒரு துணியை செம்மண் தண்ணியில் நனைச்சுக்கணும், அப்புரம் நடு விரலை கோட்டுக்கு பக்கத்தில் நகத்திண்டே அந்த ஈரத்துணியை மெல்ல கட்டைவிரலால் அமுக்கணும், அப்போ சிவப்பு தண்ணீ கோடா வரும். இது மனசுக்கு ரொம்ப இதமான வேலை. கஷ்டமே இல்லை அனால் முழுக்கோலத்தையும் நாம போட்ட மாதிரி நம்மளே சொந்தம் கொண்டாடலாம். எங்கேயாவது சிவப்பா சிந்தியிருக்கும், அல்லது வாண்டுப்பயல் மிதிச்சுண்டு போயிருப்பான். அப்போ செஞ்ச தப்பை திருத்தி, யாரும் கலச்சுடாம பக்கத்துலேயே இருந்து காயர வரைக்கும் பாத்துக்கணும்.
இது நாம் நமது வாழ்க்கையை கவனமா கையாளணும்கிரதை சொல்கிரது. கடமை செஞ்சுட்டு அது நல்ல பலனை கொடுக்கிர வரைக்கும் பொறுமையா காத்துகிடக்கிர மாதிரின்னு எனக்கு தோணும்.
அரிசிமாவு கோலம் நமது பாரம்பரியம். அது எறும்புக்கும் மத்த அந்தமாதிரி ஜந்துக்களுக்கும் உணவு. அந்த சிறிய உயிர் உணவுக்காக வாழும் காலத்தில் எவ்வளவு தூரமும் எவ்வளவு நேரமும் தேடி அலையரதுன்னு யோசிச்சா அந்த காலத்துலே பெரியவா எவ்வளவு யோசிச்சு இந்தமாதிரி ஒரு வழக்கம் - கோலம் போடணும்னு வச்சுருக்கான்னு புரியும். இதை அனுதினமும் விடாம நம்மாத்து பெண்கள் செய்யணும்னு சொன்னது
இப்படி அவா செய்யர பல தான தர்மங்களினால் முழு குடும்பத்துக்கும் நல்லது நடக்கும்னுதான். இந்த அபூர்வ சிந்தனையையும் பழக்கத்தையும் விட்டுட்டு, ஏனோதானோன்னு ஏதொ ரஸாயனம் கலந்த கலர் போடியையோ இல்லை கல்லுப்பொடியையோ கோலம்னு தூவிட்டு வந்தா அது பல்வேறு உயிரினங்களுக்கு இழைக்கிர பாவமும் தெய்வக்குத்தமும் ஆகும்
சேலத்துலே இருந்தப்போ மார்கெட்லேந்து கோலப்பொடி வாங்கிண்டு வரச்சொன்னா. ஒரு படி வாங்கினது கனமா கனத்தது, ஆத்துக்கு வரத்துகுள்ளே கையே உடஞ்சுட்டமாதிரி ஆச்சு. அப்பா அதை பாத்துட்டு இது கருங்கல் போடின்னா.
ஆத்து மனுஷி சீக்கிரம் தூங்கி எழுந்து குளிச்சுட்டு தலையை முடிஞ்சிண்டு, பொட்டு வச்சுண்டு வந்து வாசல் தெளிச்சு பெருக்கி அரிசிமாவு கோலம் போட்டா அந்த நாள் அவாளுக்கும், அந்த குடும்பத்துக்கும் அந்த வழியா போரவாளுக்கும் நல்ல நாளாய் அமையும். இல்லை கலரடிச்ச கல்லுப்போடியைத்தான் தூவுவேன்னு கிளம்பினா, அதுக்கு கறை படிஞ்ச கசங்கிப்போன நைட்டியோ/மேக்ஸியோ, ரெண்டு நாளாய் குளிக்காத விரிஞ்ச தலைமுடியும், விளக்காத பல்வரிசையும் போதும்.
ஏன் ஒரு தாடி முளச்ச ஒத்த பிராமணனே அதுக்கு தேவலை.
No comments:
Post a Comment