Thursday, December 10, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 40

 மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 41

நாசிக்,பஞ்சவடி

இவரோட புத்தம் புது phone காணோம்னா உடனே ரொம்ப ஷாக் ஆ இருக்கு...என் போன்லேர்ந்து phone பண்ணா முதல்ல ரிங் போயி யாரும் எடுக்கல..அடுத்த தடவை ஸ்விட்ச் ஆஃப்..

இப்ப என் போன் அடிக்கறது..ஆசையா யாரோ தவறி விழுந்ததை எடுத்தவான்னு நினச்சு  எடுத்தா  கிராமத்தில் எங்க நிலத்தை ஆட்டை போட்டவன்...அப்பப்ப போன் பண்ணி நிலத்தை தன் பேருக்கு க்ரயம் பண்ணித்தர தொந்தரவு செய்வான். அவனை கட்பண்ணிட்டு  ஆட்டோக்காரன்ட யோஜனை கேட்கறோம்..பக்கத்துல போலீஸ் காரனை காட்டறான்..

போலீஸ்காரர் இது சகஜம்ங்கற மாதிரி நாசிக்ல போய் கம்ப்ளைண்ட் தரச்சொல்றார்...

நாங்க சென்னையிலேர்ந்துமும்பை,ஷீரடி வந்து  ஷீரடிலேர்ந்து ஒரு வேன்ல வந்து அதுல எறங்கி மறுபடி ஷேர் ஆட்டோல வந்து ....இங்க எதோ டூரிஸ்ட் ஸ்பாட்ல  நிக்கறோம்..இப்ப எங்க கம்ளைன்ட் தந்து யார் மீட்டுத்தரப்போறாங்க?.ஆட்டோ,வேன் எங்களுக்காக மத்த ஊர் போகாம நிப்பாங்களா?

கோதாவரில போனுக்கு ஒரு முழுக்குப்போட்டுட்டு கெளம்பறோம்...

அடுத்த படியாக காலா ராம் மந்திர் என்ற கோயிலுக்கு வந்தோம்.போன் நினைவோட மனசு கஷடமா இருக்கு. இருந்தாலும் வந்த இடத்தில பார்க்க வேண்டியதை பார்க்கத்தானே வேணும். ?

காலா ராம் மந்திர்: 1790 ஆம்வருஷம்கட்டினதாம். . கருங்கல் ராமர் இந்த கோயிலில் உள்ளதால், இந்த கோயிலின் பெயர் கருப்பு (காலா) ராமர் கோயில் என அழைக்கப் படுகிறது. நான்கு திசைகளிலும் பெரிய வாயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பம் 32 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டது. இந்த கோயிலின் கற்கள், ராம்ஷேஜ் என்னும் மலையிலிருந்து 23 லட்ச செலவில் 1930 ம் ஆண்டு வரவழைக்கப் பட்டதாம்..கோயில் சுமார் 70 அடி உயரம் கட்டப் பட்டுள்ளது. ப்ரஹாரம் விசாலமாக இருக்கிறது. இந்த கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால், இது ராமர் வனவாசம் இருந்த போது குடியிருந்த இடம்!!

ராமா என்றுரைத்தால் துன்பங்களை தீர்ப்பார்

அய்யனே எனையாளும் மெய்யனே ஸ்ரீமதே ராமானுஜாய நம:

என்ற வரிகள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. அங்கிருந்து அடுத்த படியாக தபோவனம் என்ற இடத்திற்கு வந்தோம்.

தபோவனம்: 

இதற்கு ’தண்டகாரண்ய’ ஷேத்திரம். தண்டகாரண்யம் ராமாயணம் படித்த, அறிந்த அனைவருக்கும் பரிச்சயம் உள்ள பிரசித்தி பெற்ற இடம். ராமர் மற்றும் லஷ்மணர் தியானம் செய்த இடம். சூர்ப்பனகையின் நாசியை சேதம் செய்த ’இடமும்’ இதுதான். அதனாலேயே, இந்த ஊரின் பெயரும் “நாசிக்” என அழைக்கப் படுகிறது. பஞ்சவடி, மற்றும் தபோவனதிற்கு இடையில் தான் மாரீசன் மானாக வந்தது, ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு போனது என குறிப்பு சொல்கிறது. 

இங்கு கபில – கோதாவரி நதிகளின் சங்மத்தை காணலாம். இந்தியாவில் இங்கு மட்டும் தான் லஷ்மணருக்கு கோயில் உள்ளது. இந்திரஜித்தை வதம் செய்ய 12 ஆண்டுகள் தவம் இருந்த இடம் என மற்றொரு குறிப்பு தெரிவிக்கிறது.. மிக அழகான, அமைதியான இடம். மலை குன்றின் (சுமார் 200 அடி உயரம்) மேல், தகரத்தில், ராமர், சீதை, லஷ்மணரின் சன்னியாச கோலம் அமைக்கப் பட்டுள்ளது. 

தபோவனம் என்றால் தவங்களின் வனம் என்று பொருள்... ஒரு பெரிய அரச மரத்தின் அடியில் பகவான் லக்ஷ்மணரின் விக்ரஹமும் அவருக்கென்று ஒரு சிறிய கோயிலும் கட்டப்பட்டுள்ளது. 

அதற்கு அருகில் லக்ஷ்மணர் சூர்பனகையின் மூக்கை அறுத்ததை நினைவூட்டக்கூடிய ஒரு சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. நாசிக்கில் இருக்கக்கூடிய ஆர்வத்தைத் தூண்டும் கோயில்களாவன: சுந்தர நாராயணர் கோயில், கபாலீஷ்வரர் கோயில், நாரோ சங்கரர் கோவில், காலா இராமர் கோயில்–இக்கோயில்கள் அனைத்தும் பதினெட்டாம் நூற்றாண்டில் கருப்பு கற்களால் கட்டப்பட்டவை. இவையனைத்தும் கோதாவரி நதிக்கு அருகில் உள்ள பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ளன. பஞ்சவடி என்றால் “ஐந்து ஆலமரங்களின் இடம்” என்று பொருள், இன்றும்கூட இங்கு ஐந்து ஆலமரங்கள் இருப்பதைக் காணலாம். 

சீதா குஃபா

இந்த மரங்களுக்கு அருகில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு வீடு உள்ளது, அங்கு சீதா-குஃபா என்று அழைக்கப்படும் ஒரு சிறிய குகை உள்ளது, அந்த குகையினுள் இராம லக்ஷ்மண சீதையின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அசுரர்களின் படையானது பகவான் இராமரைத் தாக்கியபோது, சீதை இந்த குகையினுள் தஞ்சமடைந்ததாக நம்பப்படுகிறது. இராவணன் சீதையை பஞ்சவடியிலிருந்து கடத்திச் சென்ற நிகழ்ச்சியும் பகவான் இராமர் மானின் வடிவில் வந்த மாரீசனை கொன்ற நிகழ்ச்சியும் இந்த குகையைச் சுற்றித்தான் நிகழ்ந்தன.

கோரா ராம் மந்திர் 

கோரா ராம் என்றால் வெள்ளை ராமர் என்று பொருள் சீதா குகைக்கு மிக அருகில் உள்ளது கோரா ராம் மந்திர். காலா ராம் மந்திரில்  எல்லா சிலைகளுமே கருப்பாக இருக்கும் .இங்கு எல்லா சிலைகளுமே வெள்ளையாக இருக்கும் .இங்கு ராமர் சீதா லக்ஷ்மணன் பரதன் சத்ருக்னன் மற்றும் ஹனுமான் சிலைகள் உள்ளது .

கபாலீஷ்வர் மந்திர்

ராமகுண்ட் அருகில் இருக்கிறது இந்த கோவில் .சிவ பெருமான் தவறுதலாக ஒரு பசுவை கொன்று விடுகிறார் .நந்தி பகவான் சிவபெருமானிடம் அந்த பாவத்தை போக்க நாசிக் சென்று ராமகுண்டில் புனித நீராட சொல்கிறார். ராம்குண்டில் நீராடிய பின்பு சிவா பெருமான் இன்று கோவில் இருக்கும் இடத்தில் அமர்ந்து ஜபம் செய்தாராம் .மிகவும் பழமை வாய்ந்த கோவில் இது .

இந்த கோவிலுக்கு மிக அருகிலேயே  கணபதி மாருதி ,மற்றும் காயத்ரி தேவிக்கு சிறு சன்னதிகள் உள்ளது . மற்றொரு முக்கிய அம்சம் இந்த சிவன் கோவிலில் நந்தி கிடையாது .திங்கள் கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு இங்கு பிரதோஷ பூஜை செய்யபடுகிறது .இது மிகவும் விசேஷமானது .இங்கு சத்யநாராயண பூஜை செய்வதும் மிகவும் பிரசித்தம் .

 ஆட்டோக்காரர் வேன் நிக்கற இடத்துல கொண்டு விடறார்..மணி 2.00 பக்கத்து ஓட்டல்ல சாப்பிட்டு வரோம். 

த்ரயம்பேஷ்வர் கோயிலுக்கு வேன் கிளம்பறது.





No comments:

Post a Comment