Tuesday, December 8, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 33

 மராட்டிய மண்ணில் ஒரு பயணம்

              34ஷீரடி

பாபாவோட சமாதி மந்திர் க்யூல போகும் போது இவர கேக்கறேன். 

“நேக்கு சின்ன வயசுலேர்ந்து பெருமாள் தாயார் தான் தெரியும்..உங்களுக்கு வாக்கப்பட்டு சிதம்பரம் வந்தப்பறம் உங்களோட நடராஜாவை சேவிக்க ஆரம்பிச்சேன்..உங்களோட எல்லா ஊர் சிவன் கோயிலுக்கும் வரேன். ஸமாஸ்ரயனம் செய்துண்டவாளுக்கு  விஷ்ணுவே தெய்வம்னு ஆசார்யன் சொல்லி இருக்கார். சாய் பாபாங்கறவர் யார்? இந்துவா?முஸ்லீமா?இலட்சக்கணக்கானவா இவரை தெய்வமா இத்தனை நம்பிக்கையோட வராளே எப்படி”  ன்னு கேக்கறேன்.  .,

இவர் சொல்ல ஆரம்பிக்கறார். 

நாம போறது 108 ஷேத்திரத்துல உள்ள பெருமாளை மட்டும் சேவிக்கற அல்லது பஞ்சபூத ஸ்தலம்,மாதிரி சிவனை மட்டும் சேவிக்கற ஷேத்ராடனம் இல்லை. 

நமது பாரத ஆன்மீக பூமியின் ஒவ்வொரு மண்ணையும்,நதியையும் ,மலையையும் ஆன்மீக அதிசயங்களையும் கண்டு வணங்கற பாரத தரிசனம்இதில் குறுகின பக்தி இல்லை. 

பாபாவோட ஆத்ம சக்தியை இந்த பயணக்கட்டுரைல சொல்ல ஆரம்பிச்சா திசை திரும்பிடும்.  எங்கிருந்தோ வந்தார்.  இங்க ஷீரடில தங்கி எத்தனையோ அற்புதங்கள் நிகழ்த்தி இருக்கார்..தெய்வத்தை கண்ணால பார்க்க முடியாது. ஆனா அடுத்தவங்களுக்கு நல்லது செய்யறவங்களை நாம தெய்வமா நினைக்கறோமில்லையா?...

இந்து குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய பக்கீரிடம் வளர்ந்து, வேங்குசா என்ற மகானை குருவாக ஏற்று அவர் அரிய சக்திகள் பெற்றார்னு சொல்கிறார்கள்

சாய்பாபாவின் அவதார மூலத்தை கண்டுபிடித்து விட அன்று தொடங்கி இன்று வரை எத்தனையோ பேர் முயன்று பார்த்து விட்டனர். யாராலும் ஒரு துகள் அளவு தகவலை கூட பெற முடியவில்லை.

சாய்பாபாவின் அவதாரம் என்பது ஆழ்ந்த எல்லையற்ற பெருங்கடல் போன்றது. அந்த பெருங்கடலில் மூழ்கி நாம் பக்தி, ஞானம், மனப்பக்குவம் உள்ளிட்ட பல்வேறு முத்துக்களை எடுத்துப் பயன்பெறலாம். ஆனால் ஒரு போதும் அந்த பெருங்கடலின் கரையை காண இயலாது.

கிருஷ்ணர், ராம அவதாரக் காலங்களில் தெய்வங்கள் மனிதனோடு வாழ்ந்தனர். நம்மாழ்வார்கள், நாயன்மார்கள் காலத்தில், மனிதன் அழைத்தபோது அவர்கள்முன் தெய்வங்கள் காட்சியளித்தனர். 

அதன்பின், மனிதர்களின் செயல்களைகண்டு, அவர்கள் கற்சிலைக்குள் அடைக்கலமாகினர். ஆனாலும், மனித சமூகத்திற்கு நன்மை செய்யவேண்டும் என்ற தங்களின் உயர்ந்த சிந்தனையால், சாய்பாபா, ராமகிருஷ்ணர், அரவிந்தர் காஞ்சி முனிவர் போன்ற மகான்கள், அந்த தெய்வச் சக்தியை பெற்றனர். அந்த மகான்களின் போதனைகளை கேட்டும், அவர்கள் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை அறிந்தும் நம் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்ப நாம பார்க்கபோற சமாதி மந்திர் பத்தி பார்ப்போம். 

கோடிக்கணக்கான மக்களின் கண்கண்ட தெய்வமான சீரடி சாய்பாபாவும் அப்படிதான் 1918 அக்டோபர் 15-ல் தனது மூச்சை நிறுத்தி இருந்தார்.

பாபாவின் உடலை எவ்வாறு அடக்கம் செய்வது என்பதில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும், தங்கள் மத கோட்பாடுகள் அடிப்படையில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர்.

சீரடி கிராம அதிகாரியாக இருந்த ராமச்சந்திர பாடீல் அதை ஏற்கவில்லை. கோபால் ராவ் புட்டி தான் கட்டிவரும் தகடி வாடாவில் (தகடி என்றால் கல். வாடா என்றால் கட்டிடம்). அதாவது கல் கட்டிடத்தில் பாபா உடலை அடக்கம் செய்யலாம் என்று கூறினார்.

சீரடி மக்களிடம் நிலவிய இந்த கருத்து வேறுபாட்டால் ஒருமித்த கருத்து உருவாவதில் இழுபறி நீடித்தது. அன்றிரவு முழுவதும் அப்படியே கழிந்து விட்டது. பாபா உடல் அப்படியே உட்கார்ந்த நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் ஒரு அதிசயம் நடந்தது. ஜோஷி என்ற பக்தரின் கனவில் பாபா தோன்றினார். சமாதியான பிறகு பாபா முதன் முதலில் அவர் கனவில்தான் வந்திருந்தார்.

பாபா அவரிடம், . நீ எனக்கு வழக்கமான வழிபாடுகள் செய்து காகட் ஆரத்தியை செய்” என்று கூறினார் சிலர் அவர் பாபா உடலுக்கு ஆரத்தி காட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புகளை மீறி பாபா உடலுக்கு ஜோஷி காகட் ஆரத்தி காட்டினார். 

இப்படி பாபா உடலுக்கு ஒருபுறம் பூஜைகள் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம், அவர் உடலை எங்கு, எப்போது, எப்படி மகா சமாதி அமைக்க வேண்டும் என்ற விவாதமும் சீரடி மக்களிடையே தொடர்ந்து நடந்தபடி இருந்தது.

இந்துக்கள் பாபா கடந்த சில தினங்களாக, தன்னை கோபால்ராவ் புட்டியின் தகடிவாடாவுக்கு அழைத்து செல்லும்படியும், அங்கு தான் சுகமாக இருப்பேன் என்று கூறியதால் அங்கு சமாதி அமைக்க விரும்பினர் 

ஆனால் முஸ்லிம்கள் ஏனோ அதை விரும்பவில்லை. பாபா உடல் திறந்த வெளியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறியபடி இருந்தனர்.

விஷயம் கலெக்டருக்கு போனது. 

உடனடியாக அவர் கோபர்கவுனில் அரசின் வருவாய் துறை உயர் அதிகாரிகளில் ஒருவரான சனே என்பவரை சீரடிக்கு அனுப்பி வைத்தார். 

சனே சீரடி வந்ததும், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண, ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்தார்.

 ஓட்டெடுப்பில் என்ன ஆயிற்று?....

                               தொடரும்...

(By சுஜாதா&வெங்கடேசன்…6381369319)

படங்கள் கோயில் க்யூ



No comments:

Post a Comment