Tuesday, December 8, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 31

மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 31

மும்பை

(சுஜாதா வெங்கடேசன்)

ஐயோ பர்ஸைத்தவிர மொத்த சொத்தும் (டூர்ல எடுத்துண்டு வந்த மூணு செட் ட்ரஸ்,டாய்லட் சாமான்கள் ,அரை ப்ளேட் ஜீரா ரைஸ்)பஸ்ல இருக்கே...ன்னு நாலு மாடியையும் நாலுகால் பாய்ச்சல்ல எறங்கி வரோம். இன்னும் யாரும் ஏறவே இல்லை. ட்ரைவர் வெயிலுக்காக நகர்த்தி நிறுத்தி இருக்கான்.  அடச்சேன்னு ஏறி ஒக்காரோம்.  

பஸ் ட்ராபிக்ல நீந்திண்டு போறது...பக்கத்துல ஒரு வடக்கத்திக்காரி வாய் ஓயாம காரே பூரேன்னு பேசின்டு போதாததுக்கு அப்பப்போ வாய்ல எதையோ அள்ளி போட்டு அரைச்சிண்டு மிக்சர் மாமியா உக்காந்து இருக்கா..எதோ நாத்தம் கொடலை புடுங்கறது..

பஸ் ஒரு வழியா சித்தி விநாயகர் கோயில் வாசல்ல நிக்கறது. 

கூகுள் பார்த்துட்டு கதை சொல்றார்.  

மும்பை வாசிகள் விநாயகர் மீது அதீத பக்தி கொண்டவர்கள் என்பதை இந்த கோயிலுக்கு வந்து பார்த்தால் தெரியும். 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறப்படுகின்றது. 

மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சித்தி விநாயக் மந்திர் 1801-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயில் முன்பு சிறிய செங்கல் கட்டிடமாக காட்சியளித்துக்கொண்டிருந்தாலும், இன்று மும்பையின் செல்வச் செழிப்பான கோயிலாக திகழ்ந்து வருகிறது.

மும்பையில் வசித்த டியூபாய் பட்டில் என்ற பெண் குழந்தை வரம் வேண்டி ஏங்கினார். தனக்கு குழந்தை பிறந்தால் விநாயகர் ஆலயம் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரின் கணவர் காலமாகி விட்டதால், அவரின் வேண்டுதல் பலிக்கவில்லை.

இருப்பினும் அவரின் விநாயகர் ஆலயம் கட்ட வேண்டும் என்ற ஆவல் மட்டும் குறையவில்லை. அவர் வைத்திருந்த நாட்காட்டியில் உள்ள விநாயகர் திருவுருவம் போல விக்ரகம் அமைய வேண்டும் என விரும்பினார். ஆனால் அது பாங்காங்கா வாக்லேஷ்வரில் உள்ள விநாயகர் விக்ரகத்தை ஒத்திருந்தது. அந்த கோயில் 500 ஆண்டு பழமையானது.

ஒருநாள் தியூபாய் பாட்டில் விநாயகரை தரிசிக்கும் போது ஒரு வேண்டுதல் உதயமானது. இந்த முறை தனக்காக அல்லாமல், தன்னைப் போன்று குழந்தை இல்லாமல் வருந்தும் பெண்களுக்கு குழந்தை வரம் அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இந்த கோயிலை காலம்சென்ற திரு லக்‌ஷ்மண் விது பாட்டில் கட்டினார்.

சித்தி விநாயகர் சிறப்புகள்:

இங்குள்ள சித்தி விநாயகர் 2 அடி, 6 அங்குல உயரம், 2 அடி அகலமும் கொண்டது. மற்ற விநாயகர் கோயிலில் உள்ளது போன்று இல்லாமல், இந்த சித்தி விநாயகர் தனது தும்பிக்கை இடது பக்கம் வைத்திருப்பதற்கு பதிலாக, வலது பக்கம் இருப்பது மிகவும் சிறப்பு.

இந்த விநாயகரின் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் தாங்கி இருக்கின்றார். கீழே உள்ள இடது கையில் ஒரு கிண்ணம் நிறைய மோதகம் உள்ளது. வலது கீழே உள்ள கையில் ஜெப மாலை வைத்துள்ளார்.

விநாயகர் பூணூலை ஒத்த ஒரு பாம்பு உருவம் பூணல் போன்று பொறிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட விநாயகரின் நெற்றியில் கண் உள்ளது மிக விசித்திரமாக பார்க்கப்படுகின்றது. நெற்றிக்கண் கொண்ட விநாயகரின் காலடியில் பளிங்கால் ஆன இரண்டு தேவியர் உள்ளனர். விநாயகரின் இருபுறமும் ரித்தி மற்றும் சித்தி என்ற இரு பெண் தெய்வங்கள் உள்ளன.

சினிமா நடிகர்கள்ளலாம் இந்தக்கோயிலுக்கு வருவாளாம். ஶ்ரீதேவிக்கு ரொம்ப இஷ்டமாம்.  

பஸ் மறுபடி கிளம்பி ஷாப்பிங் பஜார் வழியா போறது.

 வழில கடலுக்கு நடுவுல பெரிய பாலம். என்னன்னு இவர கேக்கறேன். 

மும்பையின் சமீபத்திய பெருமைக்கு மூல முதல் காரணமாக விளங்குவது பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தப் பாலத்தில் மொத்தம் 8 இடைவழிகள் இருக்கின்றன. இதுபோல இடைவழிகள் கொண்ட பாலங்கள் கட்டுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்தியாவில் அதிகமாக இவைபோன்ற பாலங்கள் கட்டப்படுவதில்லை. அப்படி இருந்தும் 8 இடைவழிகளுடன் உருவாக்க்கப்பட்டிருக்கும் மும்பை ஸீ லிங்க் ஒரு கட்டிடக் கலை அதிசயம்

மேலும், இந்தப் பாலத்தின் மூலம் வோர்லியிலிருந்து வாகனத்தில் செல்லும் ஒரு பயணி, பாந்த்ராவை பத்தே நிமிடத்தில் அடைந்துவிட முடியும். இல்லாவிடில் பல கிமீ ட்ராபிக்கை சுற்றி வர 2,3 மணி நேரம் ஆகலாம்.  ஆனால் இந்தப் பாலம் சுங்கச் சாவடியாக செயல்பட்டு வருவதால் வாகனம் ஒன்றுக்கு 75 ரூபாய் ஒருமுறை சென்று திரும்புவதற்காக வசூலிக்கப்படுகிறது.

அடுத்து பிரபலமானவர்கள் வசிக்கும் வீடுகள் வழியே பஸ் போறது..,

இது அமிதாப் பச்சன் வீடு, ஆமிர்கான் வீடு, சல்மான்கான் வீடு, ஷாருக்கான் வீடு டெண்டுல்கர் வீடு என்று சுட்டிக் காட்டியவாறே வந்தார் வழிகாட்டி. பேருந்தில் எங்களோடு வந்த வட இந்தியர்கள் அனைவரும், நடிகர், நடிகைகளின் வீடுகளைப் பார்க்கவே ஆவலாக இருந்தார்கள்.

ஜுஹூ பீச்ஐ பஸ்லேர்ந்தே காட்டறான். 

கடைசில மரீன் டிரைவ்ங்கற எடத்துல நிக்கறது

இவர் சொல்றார்.... 

மும்பையின் மரீன் டிரைவ் பகுதிக்கு நீங்கள் சென்றால் உலகின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான சௌபாத்தி பீச்சின் அழகில் உங்களையே மறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இங்கு பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச்கள், ஃபல்லூடா போன்ற முபையின் சுவைமிகு தெருவோர உணவுகளை ருசிக்கலாம்ங்கறார். 

பேல்பூரி ,பானி பேரி 

வாங்கி சாப்பிடறோம்.  , 

மரீன் டிரைவ் பகுதி கைத்தறி ஆடைகளுக்கு மிகப்பிரபலம்ங்கறார். அவரே இருட்டிடுத்து இனிமே பஸ் நிறுத்த மாட்டான். அடுத்த தடவை வாங்கித்தரேன்ங்கறார். 

பஸ் நேரே அவாஅவாள ஏத்திண்ட எடத்துல எறக்கி விட்டுண்டே வரது. இவர் எங்க எறங்கறதுன்னு புரியாம ஒரு குன்ஸா, தாதர் கிட்ட பஸ்ஸ்டாண்ட் இருக்கும்னு நெனச்சுண்டு தாதர்ல எறக்க சொல்றார். அவன் தாதர் போகாதுன்னுட்டு வேற எடம் சொல்லி அங்க எறங்கச்சொல்றான்.  மழை கொட்டோ கொட்டுனு கொட்டறது.  ஒத்தக்குடையோட இவரோட , நானும் இருட்டுல லக்கேஜையும் ஆஃப் ப்ளேட் ஜீரா ரைசையும் கைல பிடிச்சுண்டு எறங்கறேன்… 

 திக்கு திசை தெரியாமா வர்ற டாக்ஸிய கைகாட்டி “தாதர் பஸ்ஸ்டாண்ட்” ன ஒடனே என்னமோ இந்தில திட்டிட்டு போறன்.  

இவர் யாரையோ விஜாரிச்சு பக்கத்து ரோடு வரைக்கும் போனா தாதர் போக பஸ் கிடைக்கும்கறார். மழைல ரோட க்ராஸ் பண்ணி நடந்து ஸ்டாப்பிங்ல நிக்கறோம். பஸ்ஸ காணலை.  

இவரே பொறுக்க முடியாம “சொத்தை வித்தாவது (?) ஒன்னை டாக்ஸில அழைச்சிண்டு போறேன்”னு  விஜாரிக்கறார். அவன் மீட்டர்தான்கறான். 

மழைல டாக்ஸி குதிச்சிண்டு போறது. மீட்டரும் இவர் ஹார்ட்டும்தான்.  

(By சுஜாதா&வெங்கடேசன்…6381369319)

படங்கள் சித்தி விநாயகர்,ஸீ லிங்க்...






No comments:

Post a Comment