ரங்கோலி🥰🤩🥰
#குட்டிக்கதை
வீட்டு வேலை செய்யும் பேச்சி அம்மா வேலையை முடித்து விட்டு அப்போது தான் வீட்டுக்குள் வந்து ஆயாசமாக அமர்ந்தாள்..
மேஸ்திரி வேலை செய்து கொண்டிருந்த கணவன் சில வருடங்கள் முன் இறந்து விட்டார்..ஒரே பெண் தனம்..ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.எப்படியாவது அவளை நல்ல படிப்புபடிக்க வைத்து பெரிய ஆளாக்கணும் தான் ஆசை பேச்சி அம்மாவுக்கு..❤️🌹❤️
அம்மா என்று ஓடி வந்து கட்டிப் பிடித்த தனத்தைப் பார்த்து " என்னம்மா கண்ணு இம்புட்டு சந்தோசம் "கேட்டதும்
"இந்தாம்மா 200ரூபா வச்சிக்க கையில் பணத்தை திணித்த தனத்திடம் " தனம் ஏது பணம்? யாரு கொடுத்தாக?
"நீ வேலை செய்ற இல்ல அந்த வீட்டு லட்சுமி அம்மா தான் கொடுத்தாக"
"காசு இல்லன்னு கேட்டியா? கூடமாட ஒத்தாசை க்கு வேலைக்கு கூட்டிட்டு போனா காசா கேட்கற " கோபத்துடன் கேட்டாள் பேச்சி அம்மா❤️🌹❤️
"நான் கேட்கலம்மா..தீபாவளிக்கு லட்சுமி அம்மா காலனில ரங்கோலி போட்டி வச்சாக இல்லை..நா கூட கலர் பொடி வாங்கித்தா..கோலம் போடறேன்னு கேட்டேன்..நீ கூட கையில காசில்ல ன்னு சொல்லிட்டம்மா" பாவமாக பார்த்த பெண்ணிடம்❤️🌹❤️
""ஆமாடா கண்ணு..அப்பா இல்லாம உன்னை வளர்க்கறதுக்கு படாத பாடு படறேன்..நீ படிக்கணும்னு ஆசைப்பட்டே..பக்கத்தில இருக்கற கார்ப்பரேஷன் ஸ்கூல் ல சேர்த்துட்டேன்...நீயாவது பெரிய படிப்பு படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும்னு தான் என்னோட ஆசை..கனவு எல்லாம்.."
கையில காசில்லாம தான் கலர் பொடி வாங்கித் தர முடியலை..வேலை செய்ற வீடுகளல கடன் வேற வாங்கி இருக்கேன்..""
.அம்மாவின் கண்ணில் கண்ணீரைப் பார்த்ததும் பதறிப் போன தனம்" அம்மா..அழாதேம்மா..நா யாருகிட்டேயும் காசு வாங்கலை..ஆனா கோலம் போடணும்னு ஆசையா இருந்திச்சுமா..அதான் நீ கூட்டிப் பெருக்கி வச்சிருந்த இலை , பூ எல்லாத்தையும் சேர்த்து கோலம் மாதிரி போட்டேன்..♥️🌹❤️
நம்ப லட்சுமி அம்மா தான் எல்லாரையும் கூப்பிட்டு "எங்க வீட்டுப் பொண்ணு தூக்கிப் போடற குப்பையை வச்சு எவ்வளவு அழகா கோலம் மாதிரி போட்டிருக்கா பாருங்க" னு காமிச்சாங்க..என் திறமையை பாராட்டி ஆறுதல் பரிசா 200ருவா கொடுத்தாக..நம்பிக்கை இல்லன்னா நம்ப லட்சுமி அம்மா கிட்ட கேளு..அவுக தான் பணத்தை அம்மா கிட்ட குடுத்துட்டு வான்னு அனுப்பிச்சாக.."❤️🌹❤️
உன்னைப் பார்த்து இப்படி கேட்டது தப்பு தான் தனம்..ஸ்கூலுக்கும் போயிட்டு எனக்கு உதவியா வீட்டு வேலையும் செய்யறே..நீ நல்லா படிச்சு பெரிய ஆளா கண்டிப்பா வருவேடா கண்ணு❤️🌹❤️
"நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போய் உன்னை நல்லா பார்த்துப்பேன் மா..இந்த 200ரூபாயில காய்கறி அரிசி வாங்கிக்கமா..சரிம்மா..போய் பாத்திரம் தேச்சுட்டு வந்துடறேன்" சிட்டாக பறந்து ஓடிய பெண்ணைப் பார்த்து கண்ணில் வழிந்த நீரை புடவையால் துடைத்துக் கொண்டாள் பேச்சி அம்மா
No comments:
Post a Comment