Thursday, December 10, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 44

 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻45🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 43

எல்லோராவை நோக்கி இப்போது பயணம். 

எல்லோரா குகைகளை பார்க்கறதே மனசுக்கும் ஆன்மாவிற்கு உடலுக்கும் ரொம்ப ஆரோக்கியமானது. காட்சியழகும், கருத்தழகும் மிகுந்த எல்லோரா போகும் வழியில் மழைக்காலங்களில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி பச்சைப் பசேலென்று காட்சியளிக்கறது  சின்ன வயசுல சிவகாமியின் சபதம் படிக்கறச்சே அஜந்தா ,எல்லோரா ஒரு பெரிய காவிய ஊர்களா நெனச்சிருக்கேன். 

வேன்லேர்ந்து இறங்கி டிக்கட் வாங்கிண்டு உள்ள போறோம். 

பார்த்தவர்களெல்லாம் மலைக்காமல் இருக்கவே முடியாது. 

மஹாபலிபுரமெல்லாம் எல்லோராவுக்கு  உரை போட கூட காணாது .

முழு மலையை...கவனிங்க... குன்று அல்லது பாறையை அல்ல... மலையையே செதுக்கி மண்டபம் ,ஆலயம், சிலை என்று செதுக்கி இருக்கிறார்கள் .

இஸ்லாமிய பகைவர் படைஎடுத்து வர, சுத்தி இயற்கையான காட்டை உருவாக்கி அதை மறைத்து பாதுகாத்திருக்கிறார்கள் ...

இதில் கவனிக்கப்படவேண்டிய பொறியியல் அதிசயம்  இந்த கட்டுமானம் 400 ஆண்டுகளாக நடந்திருக்கிறது...

இந்த காலம்போல வரைபடங்கள் திட்டம் இல்லாத அந்த காலத்தில் எத்தனை தலைமுறையாக வேலை தொடர்ந்திருக்கும்..  ?

கட்டுமானத்தை தொடங்கியவர் தன்  காலத்தில் மட்டுமல்ல அடுத்த தலைமுறையில் கூட முடியாத  அற்புதத்தை தனக்கு பின் வரும் அடுத்த டுத்த  சந்ததிகளை எண்ணி ஆரம்பித்திருக்கிறார்..

எத்தனை பெரிய மனசு !

பார்க்க பார்க்க கண்ணை எடுக்கவே முடியல…

இந்தக் கோவிலின் அடி முதல் நுனி வரை மலையை குடைஞ்சே வடிவமச்சுருக்காங்க... மலையோட மூன்று பக்கங்களும் செங்குத்தாக வெட்டப்பட்டுள்ளன. கோவில் பிரகாரத்துக்காக அந்தக் கற்பாறையில் பெரிய பள்ளம் வெட்டப்பட்டுள்ளது. நடுவில் பெரிய பாறையை உளியால் செதுக்கி, அதில் பிரதான கோவிலை வடிவமச்சுருக்காங்க. 83 மீட்டர் நீளம், 46 மீட்டர் அகலம், 33 மீட்டர் ஆழத்தில் கோவில் உருப்பெற்றுள்ளது.

இந்த கோவில பார்த்ததுமே நமக்குள்ளான பிரம்மிப்பும் இடையே ஒரு வினாவும் எழுவது உண்மையே.இதை ஏன் உலக அதிசயங்கள்ள சேர்க்கல னு தோணும் அளவிற்கு செதுக்கிருக்காங்க.. அந்த காலத்துல வாழ்ந்த சிற்பிகள்.

ஆனா மனுஷனால கட்ட முடியாது ஏலியன் வந்து கட்டுனதா ஒரு குரூப் சொல்லிண்டு இருக்கா...

இனி இவர் பார்வையில்….

கலை மனிதனின் இருப்பை ஏதோ ஒருவகையில் இந்த உலகில்  நிரந்தரமாக்குகிறது. அதனால் தான் கலைஞர்கள் மனித வாழ்வையும் பண்பாட்டையும் தொடர்ந்து இலக்கியம், ஓவியம் சிற்பம் எனப் பல்வேறு வடிவங்களில் அதைப் பதிவு செய்கிறார்கள். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கலைவடிவங்கள் நூற்றாண்டுகளைக் கடந்தும், கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மாபெரும் சாட்சியாக நிலைபெறுகின்றன. நிகழ்கால மனிதன் பழங்கலைகளின் முன்னால் நிற்கும் போது ஒரு பூரணத்துவத்தை அடைகிறான். 

இந்தியாவின் கலைப் படைப்புகள் பழைமையும் பெருமையும் வாய்ந்தவை. இன்றளவும் உலகத்தின் கவனத்தைக் கவர்வனவாகவும், வியப்பூட்டுவனவாகவும் விளங்குகின்றன. அத்தகைய கலைப் பொக்கிஷங்களின் கூடாரமே எல்லோரா.

கி.பி. 642 ஆம் ஆண்டு சாளுக்கிய மன்னன்  இரண்டாம் புலிகேசியோடு பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் போர் தொடுத்தான். வாதாபியைத் தீக்கிரையாக்கி அழித்தான். பல்லவர்களால் ஏற்பட்ட இந்தக் களங்கத்துக்குப் பழி தீர்க்கச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்ரமாதித்யன், பல்லவர்கள் மீது கி.பி 734 ஆம் ஆண்டு போர் தொடுத்து அதில் பெரும் வெற்றி பெற்றான் . வாதாபியை நரசிம்ம வர்மன் அழித்ததுபோலவே  காஞ்சியை அழித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்ற வெறியுடன் நுழைந்தவனது கண்ணில் முதலில் பட்டது  'ராஜ சிம்ம பல்லவேஸ்வரம்' எனும் காஞ்சி கயிலாசநாதர் கோயில். அப்புறம் என்ன நடந்தது?இதான் ட்விஸ்ட்

படங்கள்...எல்லோரா பொக்கிஷங்கள்










No comments:

Post a Comment