Tuesday, December 8, 2020

சிற்பியர் திறம்.

 சிற்பியர்  திறம்.

௧.ஏழு நடன மாந்தர்; பன்னிரண்டு கால்கள்!

இராமப்பா கோயில் [ இராமலிங்கேஸ்வரர் கோயில்] , தெலுங்கானா மாநிலத்தின், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில், பாலம்பேட் கிராமத்தில் உள்ளது.

இராமலிங்கேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலை, கிபி 11ம் நூற்றாண்டில் கட்டியவர் காக்கத்தியர் படைத்தலைவர் ரேச்சர்ல ருத்திரன் ஆவார்.

௨.மூன்று நடன மாந்தர்; நான்கே கால்கள்! 

அருள்மிகு சித்தாம்பிகா சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில் திருச்சென்னம்பூண்டி,பூதலூர்,தஞ்சாவூர்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இக்கோயில் வழிபாட்டில் இருந்துள்ளது. பல்லவர் காலத்தில் இக்கோயில் மண் தளியாக இருந்திருக்க வேண்டும். பல்லவர் காலக் கல்வெட்டுகள் கற்றூண்களிலே காணப்படுகின்றன. திருஞானசம்பந்தர் இத்தலத்தை திருக்கடைமுடி என்று பாடியுள்ளார். 

காவிரியின் வடகரைத் தலமாகவும், கொள்ளிடத்திற்குத் தென்கரைத் தலமாகவும் சடையார் கோயில் அமைந்துள்ளது. காவிரியின் வளத்தினாலே அதன் கரையில் கட்டப்பட்டுள்ள இக்கற்றளி அதிகமான கொடைகளைப் பெற்றுள்ளது. பல்லவர் காலத்தில் மண்டளியாக இக்கோயில் இருந்திருக்க வேண்டும். முதலாம் பராந்தகன் காலத்தில் கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. 

தேவாரப் பாடல் பெற்ற பல காவிரிக் கரைத் தலங்களுள் இதுவும் ஒன்றாகும். தற்போது இக்கோயில் பிடாரி அம்மனுக்கு உரிய கோயிலாக ஊர்மக்களால் வழிபடப்படுகிறது. 

பல்லவர்கால தூண் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. நிருபதுங்க வர்மனின் அரசியார் அளித்த மாசிமக விழாவிற்கான கொடைகள் குறிப்பிடத்தக்கவை. பொன்கழஞ்சுகள் அதிகமாக கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. விளக்குக் கொடைகள் சோழர்கள் காலத்தில் அளிக்கப்பட்டுள்ளன. 

கருவறை ஏகதள விமானத்தைப் பெற்றுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் இராமாயணப் புடைப்புச் சிற்பங்களும், வேதிகையில் சிவவடிவங்களும், தாய்த் தெய்வங்களும் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. 

கோயில் தற்போது தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment