Thursday, December 10, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 42

 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻43🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மராட்டிய மண்ணில் ஒருபயணம்* 43

                த்ரயம்பகேஸ்வரர்

மும்மூர்த்திகளுக்கும் அருள்புரிந்த பரமேஸ்வரனுக்குத் திரிம்பகேஸ்வரர் என பேர் வந்தது.  திரிம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள இந்த கர்ப்பக்கிரகம் முக்கிய மண்டபத்தைவிட தாழ்வாக இருக்கு. மேல்மண்டபத்திலிருந்துதான் கீழிருக்கும் திரிம்பகேஸ்வரரை தரிசனம் செய்யனும்.

மும்மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப்பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. ஆவுடையார் உரல் போன்று பள்ளமா இருக்கு. இந்தப்பள்ளத்தில் மும்மூர்த்திகள்  பரம்பொருளை வணங்கியதால் அவர்களை மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளத்தில் காணப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் குசாவர்த்த தீர்த்தம்ன்னு சொல்கிறாங்க.. இங்குள்ள அம்பாள் பெயர் ஸ்ரீஜடேசுவரி

நம்ம ஊர்ல சொல்றமாதிரி சுக்குக்கு மிஞ்சின மருந்துமில்ல சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமுமில்லைன்னு சொல்றமாதிரி கோதாவரி நதிக்கு இணையான நதியுமில்ல. பிரம்மகிரி மலைக்கு நிகரான மலையுமில்ல, திரிம்பகேஸ்வரருக்கிணையான கோவிலும் இல்லைன்னு வடநாட்டில் ஒரு பழஞ்சொல் இருக்கு. அந்தளவு புனிதமானது இந்த கோவில்ன்னு சொல்றாங்க. 

இந்த இடம் திரிசந்தியா காயத்ரி என அழைக்கப்படுது. காரணம் விநாயகனின் பிறப்பு இங்கதான் நடந்ததா சொல்லப்படுது. மேலும், நாத் கெல்லாம் நாத் ஆனா கோரக்நாத்க்கு பட்டம் வழங்கிய இடம்னு   ஒரு இந்திகார அம்மா சொன்னாங்க. அதாவது, நம்மூர் பாசையிலே சித்தனுக்கெல்லாம் சித்தன்னு சொன்னாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். 

மேலும் கோரக்கர் சித்தரை பற்றி  குறிப்பிடும்போது அவரை வடநாட்டிலிருந்து வந்தவரென்றும், அவர் தவம் செய்த இடமே கோரக்நாத் என்றும் சொல்லுவாங்க. இப்ப இவங்க சொல்றதை பார்த்தா நாத் என்பதற்கு வேறு அர்த்தம் இருக்குதுபோல் தெரியுது . மொழி ஆராய்ச்சியை  தமிழ் ஆர்வலர்களிடமும், தலவரலாற்று ஆராய்ச்சியை ஆன்மீகவாதிகளிடமே விட்டுடுறேன். 

இந்த ஸ்தலம் நிவிருதிநாத் என்பவர் தன்னுடைய குருவான கஹினைநாத்திடமிருந்து மானசீகமாக உபதேசம் பெற்ற இடம் என்று சொல்லப்படுது. அதை தன்னுடன் பிறந்த சகோதர சகோதரியருக்கு உபதேசம் வழங்கி தன்னை யாரென்று உணரச்செய்து அவர்களுக்கும் முக்தி கொடுத்த ஸ்தலம் இதுவென சொல்லப்படுது. அதனால்தான் இந்த இடத்துல முன்னோர்களுக்கு செய்யப்படும் பலிகர்மம் எனப்படும் சிரார்த்தம், திவசம் போன்றவைகள் சிறப்பாக செய்விக்கப்படுது. 

நிர்ணயசிந்து என்னும் கிரந்தத்தில் சத்யத்திரின்ற இந்த மலைத்தொடரிலிருந்து வரும் கோதாவரி நதியானது இங்கிருந்து பாய்ந்து பூமியை சுத்தமாக்குவதுடன் இல்லாமல் சிரார்த்தம் மற்றும் திவசகர்மாக்களை செய்யும் ஆன்மாக்களை சுத்தப்படுத்துகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது .

மேலும், இங்குதான் இராமபிரான் தன்னுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ததாகவும், அவர்களுடைய முன்னோர்கள் மனமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு நம்பிக்கை இருப்பதால் இங்கு சிரார்த்த பலிகர்ம பூஜைகள் இன்றும் சிறப்பாக செய்விக்கப்படுகின்றது.

 இந்த கோவிலானது பிரம்மகிரி,  நீலகிரி  மற்றும் காலகிரின்ற மூன்று மலைகளின் சங்கமத்தின் அடிவாரத்தில் இருக்குது.  ஆகையால் அறுகோணவடிவ தீர்த்த யாத்திரைன்ற ஒரு சிறப்பு வழிபாடும் இங்க செய்யப்படுது. இது கோதாவரி நதியின் தெற்கு கரையில் ஆரம்பித்து நில்சங்கமேஸ்வர்கோவிலிருந்து,  விவாஹ விநாயக், சத்யநாராயண், தனேஸ்வர்மஹாதேவ்,  தரங்கேஸ்வர், சேதுபலேஸ்வர் கோவிலில் முடிப்பர். இது ஒருவகையான சிவாலய யாத்திரை  முறை. இந்த கோவிலில் ருத்ர பாராயணம் செய்து பழங்களை படைத்து சிறப்பு வழிபாடும்  நடைபெறுகிறது. 

இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பு  குஷ்வர்த குண்ட் தீர்த்தகுளத்தின் நான்கு மூலைகளிலும்  நான்கு கோவில்கள் இருக்கு. தென்கிழக்கு மூலையில் கேதாரேஸ்வர்  மஹாதேவ் கோவிலும், தென்மேற்கில் சாட்சி விநாயகரும், வடமேற்கில் குஸேஸ்வர் மஹாதேவ்  கோவிலும், வடகிழக்கில் கோதாவரி ஆலயமும் அமைந்திருக்கு. 

மேலும், கோவிலின் பின்பக்கம் கங்கா மந்திரும் இருக்கு. மேலும் இராமர் மற்றும் கார்புரேஸ்வர்  மஹாதேவ் சன்னதிகளை ஸ்ரீமத் பக்ஷேவார் என்ற வணிகர் கட்டியுள்ளதா சொல்லப்படுது. அஸ்வினி குமாரர்களுக்கு தனிச்சந்நிதி கங்காமாந்திருக்கு எதிரில் அமைந்துள்ளது. மேலும் ஜவரேஸ்வர்  மஹாதேவ், கஞ்சனேஸ்வர் சிலைகளும் முப்பத்துமுக்கோடி தேவர்களின் சாட்சியாக முப்பத்திமூன்று தெய்வங்களின் சிலைகளும் காணப்படுகின்றது .

இந்த ஊர் செல்ல புனா சென்று அங்குருந்து ஔரங்காபாத் செல்லலாம். அல்லது எங்களைப்போல  ஷீரடிலேர்ந்தும் செல்லலாம்...




No comments:

Post a Comment