Saturday, December 19, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 50

 மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 49

                      லோனாவ்லா

இவர் மிலிட்ரி ஆஃபீஸர் மாமா பெண் க்வாட்ரஸில் சாயந்தரம் வாக் போறோம். பெரிய காடு மாதிரி வித விதமா மரம் செடி கொடிகள்.  இயற்கையோட ரெண்டு நாள் தங்கலாம்னாலும் லோனாவ்லா போய்ட்டு நாளை ட்ரெய்ன் ஏற சௌகரியமா இருக்கும்னு கெளம்பறோம். ட்ரெய்னுக்கு இட்லி ,புளியோதரை பண்ணித்தந்து ஓலா புக் பண்றா..(ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்ங்கறதால ஆபீஸ்கார்ல அவளே ஷாப்பிங் கூட போமாட்டாளாம்)

புனால எலக்ட்ரிக் ட்ரெய்ன் ஏறி லோனாவ்லா வரோம்...

சஹயாத்ரி மலையின் கிரீடம் என்று அழைக்கப்படும் லோனாவ்ளா மலைவாசஸ்தலம், 

சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்ச்சிகளை ஒட்டி நடக்கலாம், ஒரு மாலை நேரத்தை பசுமையான புல் தரைகளில் கழிக்கலாம் அல்லது மலை ஏற்றத்தில் ஈடுபடலாம். பிரபு மூக்கு சிகரம், புஷி அணை, லோஹகட் கோட்டை, ராஜ்மச்சி வனவிலங்கு சரணாலயம், பைரவநாத் கோயில் உள்ளிட்ட இடங்கள் லோனாவ்ளாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன

லோஹகட் கோட்டை

லோஹகட் கோட்டை என்பதன் பொருள் இரும்புக் கோட்டை என்பதாகும். 1050 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோட்டை சத்ரபதி சிவாஜியால் சிறப்பாக பயன்படுத்தப்பட்டும்; விதர்பா, மராத்தா போன்ற பல ராஜவம்சங்களுக்கு அரன்மணையாகவும் திகழ்ந்திருக்கிறது. இந்தக் கோட்டையின் பிரம்மாண்டமான நான்கு வாயிற்கதவுகளும் இன்றும் நல்ல நிலையில் உறுதியாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. 

புஷி அணை

லோனாவ்ளாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் புஷி அணை, பிரசித்தி பெற்ற மழைக் கால சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. லோனாவ்ளா மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பகுதிகள் என்றே சொல்லலாம். அதிலும் புஷி அணையின் பேரழகினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மேலும்...

ராஜ்மச்சி பாயிண்ட் லோனாவ்ளாவில் இருக்கின்ற காரணத்தினாலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் லோனாவ்ளாவைத் தேடி வருகின்றனர். 

உங்களுக்கு டிரெக்கிங் மிகவும் பிடிக்கும் எனில் நீங்கள் நேராக செல்ல வேண்டிய இடம் ராஜ்மச்சி. இது மஹாராஷ்டிர மாநிலத்திலேயே மலையேற்றத்துக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகும். எனினும் இந்த ராஜ்மச்சி மலையேற்றப்பாதை, கண்டலா மலையேற்றப்பாதை, துங்கர்லி ஏரி போன்றவை புதிதாக டிரெக்கிங் செல்பவர்களுக்கு கடினமானதாக இருக்கும். இவைத் தவிர ராஜ்மச்சியிலிருந்து கொண்டனா குகைகளுக்கு செல்லும் பாதை அல்லது உல்லாஸ் ஆற்றுக்கரைப் பாதை போன்றவற்றையும் பயணிகள் மலையேற்றத்துக்கு தேர்ந்தெடுக்கலாம்

பிரபு மூக்கு சிகரம்

ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த வெலிங்டன் பிரபுவின் மூக்கைப்போன்று இருப்பதாக இப்படி ஒரு விசித்திர பெயரினை இந்தச் சிகரம் பெற்றுள்ளது. நாகத்தின் தலையைப்போன்று இருப்பதால் இதற்கு நாக்பாணி என்ற மற்றொரு உள்ளூர் பெயரும் உண்டு (நாகம்=பாம்பு; பாணி=தலை). இதன் உச்சியை கடுமையான மலை ஏற்றத்துக்குப் பிறகே அடையமுடியும் என்றாலும், உச்சியை அடைந்த பிறகு காணக்கிடைக்கும் காட்சிகள் பிரமிக்க வைக்கும் இயல்பு கொண்டவை. படம் : Alewis2388

டைகர் பாயிண்ட் அருவி

லோனாவ்ளாவில் உள்ள டைகர் பாயிண்ட் என்ற பகுதியில் காணப்படும் இந்த அருவி, மழைக்காலத்தில் கண்கொள்ளா அழகுடன் காட்சியளிக்கும்.

பைரவநாத் கோயில்

லோனாவ்ளாவுக்கு அருகில் ராஜமச்சியில், தக் எனுமிடத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியை பின்னணியில் கொண்டு பைரவநாத் கோயில் அமைந்துள்ளது. வழுக்கக்கூடிய ஒரு பாதை வழியாக மட்டுமே இந்தக் கோயிலை அடைய முடியும். கருவறைக்கு அருகிலேயே மற்ற இந்து கடவுள்களுக்கான சிறு கோயில்களையும் பார்க்க முடிகிறது..

        மீண்டும் லோனாவ்லா ரயில்வே ஸ்டேஷட் வருகிறோம்.  பம்பாய் மெயில் ஏறி மராட்டிய மண்ணிலிருந்து தற்காலிக விடை பெறுகிறோம். 

         தொடர்வது...ஆந்திரா,பின்னர் கர்நாடகா,குஜராத்….

(நன்றி: குறிப்புகள் தந்து உதவிய கூகுள் மற்றும் ப்ளாக் நண்பர்களுக்கு)

டூர் குறித்த ஐயங்களுக்கு வெங்கடேசன் (6381369319)










No comments:

Post a Comment