மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 40
நாசிக்,பஞ்சவடி
கார்த்தால குளிச்சிட்டு லக்கேஜை தேவஸ்தான ரூம்ல போட்டுட்டு டிஃபன் முடிச்சிட்டு நாசிக் பஞ்சவடி டூர் அழைச்சிண்டு போற வேன்ல ஏற்றோம்.
“நாசிக்,பஞ்சவடில என்ன விசேஷம்னு “இவர கேக்கறேன்.
ராமாயணத்தில் புஷ்பக விமானத்தில் சீதாதேவியை ராவணன் நாசிக் அருகே பஞ்சவடி என்ற இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது .....
ஹம்பி ( கர்நாடகா ) , லெப்பாக்ஷி ( ஆந்திரா ) வழியாக தன் தலைநகரை அடைந்தான் ....
இதில் பெரிய வேடிக்கை என்ன ? Nasik, Hampi, Lepaxi and SriLanka இன்றய வான்வழி ( விமான வழித்தடம் போல் ) நேர் கோட்டில் இருக்கிறது.
வனவாச காலத்தில் நாசிக் அருகில் இருந்த பஞ்சவடி என்ற இடத்தில் ராமர், லெட்சுமணன், சீதை இருந்தனர்.
அங்கு அவர்கள் இருந்த காலத்தில் தன்னை மணக்கச்சொன்ன சூர்ப்பனகை மூக்கை வெட்டிவிடுகிறான் லெட்சுமணன்.
அதன் காரணமாக நாசிக் ( ஹிந்தியில் நாஸி என்றால் மூக்கு ) என்று அந்த ஊர் பெயர் வர காரணமானது .
ரிஷ்யாமுக் பர்வதம் ( Hampi அருகில் ) ஹனுமன் மற்றும் அவரது வானர கூட்டாளிகள் கூட்டமாக இருந்ததை பார்த்த சீதை தனது நகைகளை கழற்றி துணியில் சுற்றி எரிகிறாள்.
இதைத்தான் கம்பர் கம்பராமாயணத்தில் அழகாக வர்ணித்திருப்பார் ....
" அணியும் வகை தெரியாமல் வானரங்கள் இடுப்பிற்கு உள்ளதை ( ஒட்டியாணம் ) கழுத்துக்கும் ..எழில் கழுத்துக்கு உரியதை இடுப்புக்கும் ...
காதுக்கு அணியவேண்டியதை மூக்கிற்கும் ...
மூக்கில் அணியும் மூக்குத்தியை காதுக்கும் மாட்டிக்கொண்டு அலைந்தன என்று .....
அடுத்ததாக பறவை அரசன் ஜடாயு ராவணனுடன் நடுவானில் போரிட்டு ராவணனின் வாளுக்கு இரையாகி கீழே விழுகிறார்.
சீதாதேவி , " ஹை பக்ஷி " என்று வருந்தி அழைத்த இடமே இன்றய ஆந்திராவின் லெப்பக்ஷி என்ற இடம்.
ராமாயண கதையை இன்று மேடையில் கலாட்சேபம் செய்யும் பெரியவர்கள் கதையை எழுதிய வால்மிகி இலங்கையில் இருந்து நாசிக்கிற்கு அல்லது நாசிக்கில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் பறந்ததாக சொல்லவில்லை.
வால்மீகியால் சொல்லப்பட்ட அத்தனை ஊர்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறது ....
“ராமாயணத்தில் சொல்லப்பட்ட அத்தனையும் உண்மைன்னு தெரியறதா?”ங்கறார்.
வேன் முதல்ல நாசிக்ல நிக்கறது.
அங்க இருக்கற பாண்டவலேனி குகையைக்காட்டி சொல்றார்.
“நாசிக்கில் உள்ள இந்த பாண்டவலேணி குகைகள் நிச்சயம் சுவாரசியமான ஒன்னு. . இந்த குகைகள் 20 நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையை கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.
ஜைன மன்னர்களால் உருவாக்கப் பட்ட மொத்தம் 24 குகைகள் இங்கு காணப்படுகின்றன. ஜைன முனிவர்கள் நிறைய இருந்து இருக்காங்க..
வேனை இப்ப கோதாவரி ஆற்றங்கரையில் நிறுத்திட்டு “இனிமே வேன் போக முடியாது. அஞ்சஞ்சு பேர் சேர்ந்து ஷேர் ஆட்டோ ஏற்பாடு பண்ணின்டு உள்ள சுத்திப்பார்த்துட்டு இரண்டு மணி நேரத்துல வாங்கோன்”றான்.
ஷேர் ஆட்டோல ஏறிக்கறோம்.
இவர் கூகுள் பார்த்துட்டு சொல்றார்.
இப்ப ராம குண்டம்ங்கற குளம் போறோம்.
300 வருடங்கள் பழமை வாய்ந்த இந்தக் குளம் புராண ஐதீகங்களின்படி ராமபிரானும் சீதாதேவியும் குளித்ததாக நம்பப் படுகிறது. இதல் குளித்தால் மோட்சம் அல்லது முக்தி கிட்டும் என்று ஹிந்து பக்தர்கள் நம்புகின்றனர்.
நாசிக் ஒரு விதத்தில் நம்ம கும்பகோணம் போல் தான். கோயில்கள் நிறைந்த, அழகான ஊர். பாதைகள் நல்ல அகலமாக உள்ளது.
அயோத்தியிலிருந்து தெற்கு நோக்கி சென்ற இராமனை அகத்திய முனிவர் ஐந்து ஆலமரக்கூட்டம் இருந்த இடத்திற்கு சென்று தங்குமாறு கூறுகிறார். அதுதான் பஞ்சவடி.
இதெல்லாம் இவர் சொல்லிண்டு வரவும் ஆட்டோ கோதாவரி கரையில நிற்கவும் சரியாக..ஆட்டோக்காரர் இந்தியில் சொல்றார்.
“உங்க செல்போன்,பர்ஸ்,நகைலாம் ரொம்ப பத்ரம். நிறைய திருடனுங்க இருக்காங்க” இங்க பார்த்துட்டு காலாராமர் கோயில் பார்த்துட்டு வாசல்ல நிக்கறேன்”னுட்டு செல் நம்பர் தரார்.
கோதாவரி சங்கமத்துல எறங்கறோம்.
ராமர், சீதா, லஷ்மணர் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்த போது இந்த கோதாவரி நதிக் கரையில் நீராடி இருக்கா...!! அவர்கள் பர்ணசாலையும் இங்கு இருந்துள்ளது. இங்கு, ராமர் குண்டம், லஷ்மணர் குண்டம், சீதா குண்டம் என தனித்தனியாக இருக்கு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா இங்கு மிக பிரசித்தம் ஆச்சேன்னு சொல்லிண்டு என்னை நதியில நிக்க வச்சு போட்டோ எடுக்கறார்.
ராமாயணத்தோடு ஒன்றி விட்ட ஒரு உணர்வு. அங்கிருந்த அனைத்து கோயில் சன்னதிகளையும் பார்த்தோம்.
கங்கே ச, யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி, நர்மதே, சிந்து, காவேரி, ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு
என ஜபித்து கொண்டு, ஜலத்தை ப்ரோஷணம் செய்து கொண்டோம். கோதாவரியில், புஷ்பம், நெய் விளக்கு, அடங்கிய தெப்பம் விட்டோம்..
மூணு குழிகள் இருக்கு...
இங்குள்ள மூன்று குழியில்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சீதை கடத்தப்பட்டதற்கு சாட்சியாக அமைந்தனராம். .
சூர்பனகையின் மூக்கினை லக்ஷ்மணர் வெட்டிய காட்சியானது இங்கு புடைப்புச் சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது
எங்க கூட ஷேர் ஆட்டோல வந்தவாளும் தங்களை போட்டோ எடுக்க சொல்றா...இவர் தன் செல் போனை பாக்கெட்ல வச்சுண்டு அவாளையும் போட்டோ எடுக்கறார். கசகசன்னு ஜனங்கள். குளிச்சிட்டு ஈர ட்ரெஸ்ஸோட...ஒரு மண்டபம் வழியா ஜனங்களை இடிச்சி தள்ளிண்டு கரையேறரோம்…
கரைல வந்து பாக்கெட்ட தடவறார்.” என் செல்போன் எங்கேடி”ங்கறார். ஆட்டோக்காரர் சொன்னதை அலட்சியப்படுத்திண்டு போட்டோ எடுத்துண்டு அஜாக்ரதையா இருந்ததுக்கு ஒரு மாசம் முன்னாடி வாங்கின எல்ஜி போன் அதில் இருக்கற,போட்டோ,க்களோட மாயமாயிடுத்து…
படங்கள் பஞ்சவடி
No comments:
Post a Comment