Tuesday, December 8, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 36

 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻37🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 37

                   ஷீரடி

பாபா சரித்திரத்தை இவர் சொல்லி முடிக்கவும் நாங்கள் சமாதி மந்திர் உள்ள நுழையவும் சரியா இருக்கு.  

சமாதி மந்திரின் எந்த மூலையில் நின்றாலும் பாபாவின் அன்பு பொங்கும் அந்த கருணைப் பார்வை நம்மைத்தான் பார்க்கிற மாதிரி இருக்கு. 

சாயி பக்தர்கள் சமாதி மந்திரில் உள்ள சிலையில் வீற்றிருந்து பாபா ஒவ்வொருவரையும் வழி நடத்தி கொண்டிருப்பதாக பரிபூர்ணமாக நம்புகிறார்கள்.  அந்த நம்பிக்கையே அவர்களின் வாழ்க்கையை வழி நடத்துகிறது. 

இரண்டு ஹால்களும், மறுபகுதியில் பாபாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் வண்ண உருவங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஹாலின் கீழ்ப்பகுதிச் சுவர்களில் பெரிய கண்ணாடிகளில் காட்சிகள் உள்ளன. ஹாலின் இடப்புறமுள்ள அறை யில் பாபா உபயோகப்படுத்திய பொருட் களின் தொகுப்பு உள்ளது. பல்லக்கில் அவை வைக்கப்பட்டுள்ளன.

3 வித மிதி அடிகள், புகைக் குழாய்கள், சிறிதும் பெரிது மான டம்ளர், சமையல் பாத்திரங்கள், பஜனைக்கான ஜால்ரா போன்றவைகள், பாபாவின் கோல் முதலியன இதிலடங்கும். விடியற்காலை 5 , பகல் 12, மாலை 6, இரவு 10 மணி வேளைகளில் நான்கு கால ஆரத்திகள் (வழிபாடு) நடைபெறுகின்றன. சமாதி மந்திரில் பொரி, கல்கண்டு, உடைக்காத முழுத் தேங்காய், பழம் முதலியவை நிவேதனம் செய்யப்படுகின்றன.

இங்கு புனிதத்துணிகள் வாடகைக் குக் கிடைக்கும்.அவற்றை சமாதியின் மேல் சாத்தலாம். இதன் மண்டபத்தில் பஜனைகள் முதலியவை நடை பெறுகின்றன.

என்னதான் இருந்தாலும் இத்தனை நாளா கண்ணால நேரில் பார்க்க முடியாத மனசால மட்டும் உணர முடியற பெருமாள. தாயாரை  சேவிச்சுண்டு வர எனக்கு மனுஷ உருவத்துல பெருமாளை  கற்பனை பண்ண முடியல.  பாபா கூட அற்புதங்கள் நிகழ்த்தினார் னுதான் படிச்சிருக்கேன். தானே கடவுள்னு சொல்லிக்கலை. 

இராகவேந்தரரோ,பாபாவோ,காஞ்சி பெரியவாளோ, தங்களை தெய்வமா சொல்லிக்கொள்ளாத போது நாம்  தெய்வத்தை மறந்துட்டு இவாளை மட்டும் தெய்வமா கொண்டாடறது எனக்கு சரியா படலை..

இதே போல ஹரே கிருஷ்ணா இயக்கத்திலும் உண்டு. ராமனையும், கிருஷ்ணனையும், போற்றிப் பரவி ஆடிப்பாடி, உச்சிக் குடுமியுடன் தெருவில் தேர் இழுத்துவந்து, வாழ்நாள் முழுதும் முழு வெஜிட்டேரியனாக இருப்பதால் அவர்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. 

ஆனால் இத்தனைக்கும் நடுவில் சிவ பெருமானை ,மற்ற இந்து கடவுளர்களை டெமி காட்/ உப தேவதை (DEMI GOD) என்று வலிய, வம்புக்கு இழுத்துப் பேசும்போது இந்து மதத்தில் பிளவை ஏற்படுத்துவதாக ஆகிறது. 

குஜராத்தி ஸ்வாமிநாராயணன்களும் இதே போலத்தான். அவர்களுக்கு ஸ்வாமிநாராயணன் என்பவர் நீலகண்டன் என்ற பிராமணச் சிறுவன் என்பதுகூடத் தெரியாமல் அவர்தான் ஆதி தெய்வம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 ஆயினும் பல பாபாக்களும், பகவான்களும், ஆனந்தாக்களும் செய்த மிகப்பெரிய நன்மை:– வேற்று மதங்களில், இந்துக்கள் போய் விழாமலிருக்க, இவர்களுடைய கவர்ச்சி உதவுகிறது. அதுவும் சத்ய சாய்பாபா போன்றோர் செய்த பொதுநல சேவைகளும் இமயம் போல உயர்ந்தவை. அவருடைய கல்வி நிறுவனங்களும், மருத்துவ மனைகளும், குடிநீர்திட்டங்களும் அவர்தம் புகழை எந்நாளும் காப்பாற்றும், போற்றும்.

சின்மயா, சிவானந்தா ஆஸ்ரமம் போல பேஸிக் BASIC/ அடிப்படை இந்துமத தத்துவங்களைப் போதிக்க வேண்டும். ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகளின் ஆழ்ந்த தத்துவங்களையும் புனிதக் கொள்கைகளையும் போதிக்க வேண்டும். புராதன இந்துமதத்தை ‘’கரப்ட்’’ CORRUPT ஆகாமல், துருப்பிடிக்க (RUSTY) விடாமல் காப்பது நம் கடமை.

ஆதி சங்கரர், மத்வர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ரமணர் போன்றோரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும்.

அந்த வகையில் ஷீரடி பாபாவுக்கு நமஸ்காரம்! புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவுக்கு நமஸ்காரம்.

சமாதி மந்திரிலிருந்து துவாரகாமாயி போறோம். 

துவாரகாமாயி

த்வாரகாங்கற பேரைப்பார்த்த போது அது எதோ க்ருஷ்ணர் கோயில்னு நெனச்சேன்.  ஆனா அது மசூதியாம்….

துவாரகாமாயி மசூதி தான் சுமார் 60 ஆண்டு காலமாக சாய்பாபாவின் இருப்பிடமாக இருந்தது. சாய்பாபா சீரடியில் நிரந்தரமாக தங்கி விட முடிவு செய்தபோது முதலில் ஊர் எல்லையில் உள்ள கண்டோபா ஆலயத்துக்கு தான் சென்றார்.

அந்த கோவில் பூசாரியாக இருந்த மகல்சாபதி அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் பாபா, சீரடி மையப்பகுதியில் இருந்த வேப்ப மரத்தடிக்கு சென்று தங்கினார். அவர் மகிமை பற்றி தெரிய தொடங்கிய நிலையில் ஒரு நாள் சீரடியில் பலத்த மழை பெய்தது. பாபாவோ எந்த கவலையும் இன்றி மழையில் நனைந்தபடி ஸ்திதப்பிரக்ஞனாக மோன நிலையில்….



No comments:

Post a Comment