Tuesday, December 8, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 34

 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻35🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மராட்டிய மண்ணில் ஒரு பயணம் 35

                   ஷீரடி

பாபா உடலை எங்கு சமாதி வைப்பது?

பாபா உடலை எங்கு அடக்கம் செய்வது என 

சீரடியைச் சேர்ந்த 2 ஆயிரத்து 233 பேர் இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்றனர். அனைவரும் கையெழுத்திட்டனர். தகடி வாடாவில் பாபா உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று 1503 பேர் கையெழுத்திட்டிருந்தனர். வெட்ட வெளியில் சமாதி அமைக்கப்பட வேண்டும் என்று 730 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.

இதையடுத்து பாபா உடல் தகடி வாடாவில் அடக்கம் செய்யப்படும் என்று சனே அறிவித்தார்.

16-ந்தேதி (புதன்கிழமை) மாலை சாய் பாபாவின் உடலுக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன..

அவர் அமரராகி 36 மணி நேரம் கடந்தும்  விரைப்பு இன்றி பஞ்சு போல அவர் உடல் மிருதுவாக இருந்தது. இதனால் அவர் அணிந்திருந்த கம்பளி உடையை லாவகமாக கழற்றி எடுத்து விட்டு குளிப்பாட்டுவது பக்தர்களுக்கு மிகவும் எளிதாக இருந்தது. 

தகடி வாடாவை கட்டி வந்த கோபால்ராவ் அங்கு தன்குல தெய்வமான முரளிதரர் சிலை நிறுவுவதற்காக ஒரு இடத்தை விட்டு வைத்திருந்தார். அது மூலஸ்தானமாக கருதப்பட்டது. அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு பாபாவை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

சந்தனம், உதி, மலர்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை கொட்டி அந்த பள்ளத்தை பக்தர்கள் சிறப்பு செய்திருந்தனர். 

முரளீதரர் குடியேற வேண்டிய இடத்தில் பாபா குடியேறியதன் மூலம் உண்மையில் பாபாவே முரளீதரர் ஆனார். அன்று முதல் புட்டிவாடா, ஆலயமாக மாறியது. அதையே நாம் இப்போது சமாதி மந்திர் என்று அழைக்கிறோம்.

அமைதியையும், ஆனந்தத்தையும் தேடி துவாரகமாயி மசூதிக்கு சென்ற பக்தர்கள், 17-ந்தேதி முதல் புட்டி வாடாவுக்கு திரும்பினார்கள்.

கோபால் ராவ் புட்டி பெரிய கோடீசுவரர். அவருக்கு பாபா அருகில் தங்கி இருக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 

அந்த கட்டிடத்தை பார்க்கும் போதெல்லாம், “கோவில் வேலை முடிந்ததும் நான் அங்கு வந்து தங்குவேன்” என்று பாபா கூறுவதுண்டு. அவர் சொன்னது அப்படியே பலித்தது.

“புட்டியின் வாடாவினுள் நான் நிரந்தரமாகத் தங்கி பக்தர்களைக் காப்பேன்” என்ற வாக்குறுதிபடி பாபா இன்றும் அங்கு உயிர்ப்புடன் உள்ளார்.

அதற்கு உதாரணமாக சமாதி மந்திரில் உள்ள பாபாவின் சிலையை சொல்லலாம். அந்த சிலையில் பாபா இன்றும் இரண்டற கலந்து இருக்கிறார். இது சத்தியமான உண்மை. அந்த அதிசயத்தை அடுத்து பார்க்கலாம்.

 (By சுஜாதா&வெங்கடேசன்…6381369319




No comments:

Post a Comment