Tuesday, December 8, 2020

எலிஃபன்டா

 ஒரு வாசகி கமண்ட் 


எலிஃபன்டா

. அரபிக் கடலில் இத்தீவு அமைந்துள்ளதால் படகில் சென்றோம். குகை , மலை மேல் அமைந்துள்ளததால்.தீவை அடைந்தவுடன் மலை அடிவாரம் வரை செல்ல ரயில் போக்குவரத்து இருந்தது. அதை தவிர்த்து 45 நிமிடம் நடந்தோம். 175 படிகள் என்று கூறினார்கள். 10 படிகளுக்கு மேல் ஏற முடியவில்லை. குறைந்த பட்சம் அனைத்து படிகளையும் ஏற 10 லிட்டர் தண்ணீர் தேவை.  மேலே சுனையில் நீர் பிடித்து தருவார்கள். அது சுத்தமான நீர் கிடையாது. இத்தனை படிகளையும் ஏறி தொல்லியல் துறைக்கு பணம் கட்டிவிட்டு திருமூர்த்தி நுழைவு வாயிலில் அரை மணிநேரம் உட்கார்ந்தால் தான் குகையை சுற்றி பார்க்க முடியும்.இரண்டால் உயர பிரமாண்ட சிற்பங்கள். குகையை சுற்றி எங்கு பார்த்தாலும் சிவலிங்கம். 

மிகவும் அருமையான அனுபவம்.குழந்தைகளுக்கு கொண்டாட்டம்.படியெங்கும் கைவினை பொருட்கள்,பொம்மைகள்,பாக்கெட் திண்பண்டங்கள்.

1.மலை படிகளை ஏறுவது நடுத்தர வயதினருக்கு மிகவும் கடினம்.டோலி உள்ளது.

2.ஒருவருக்கு 20லிட்டரர் தண்ணீர் தேவைபடும்.

3.சைவ உணவகம் இல்லை.

4.நிறைய கைவினை பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். மிகவும் அழகாக இருக்கும். பேரம் பேசி வாங்கலாம்.மிகவும் அற்புதமான அனுபவம். 

இளைஞர்களுக்கு அற்புதமான அனுபபவம் கிடைக்கும். 

ஆங்கிலேயர் நம் நாட்டை சூரையாட வந்த  "Gate of India" நுழைவு வாயில் வழியாக தான் படகிற்கு செல்ல வேன்டும்.

பக்கத்திலேயே தாஜ் ஹோட்டலையும் பார்க்கும் போது‌  மனம் கணக்கும். 

Unforgettable memories. Thankyou mam.🙏🏻

No comments:

Post a Comment