🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🌹🌹🙏🏻🙏🏻
சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 24
மடிகரே போற வழில யார் பேச்சையோ கேட்டு யானை முகாம்னு எறங்கி நிக்கறோம். அத்துவான காடுன்னாலும் பச்ச பசேல்னு பாக்க திவ்யமா இருக்கு. ஆனா ஆனையத்தான் காணம். எதிர வர ஆளப்பாத்து ஆநே எல்லிங்கறார். அவன் கன்னடத்துல கடகடன்னு ஐதோ சொல்லி தூரமா கை காட்டறான். இவர் ஙே னு முழிச்சிண்டு போய்தான் பார்ப்பமேங்கறார். ஏற்கனவே தோள்ல மாட்டிண்டு வர பேக் வெய்ட்ல தோள்பட்டைல வலி விண்விண்ணுங்கறது. நான் இங்கயே ஒக்காந்து ஒங்க பேகையும் பாத்துக்கறேன் நீங்க போய்ட்டு வாங்கங்கறேன்
இவராலயும் முடியல போல திரும்பி பஸ் ஏறலாங்கறார்.
ஆநே ஆநேன்னு கத்திண்டு ஒரு ஷேர் ஆட்டோ வரது. நிறுத்தி பின் சீட்ல சைட் பர்த்ல (சீட்டுக்கு எதிர அரை அடி பலகை)எடம் இருக்குன்னு ஏற சொல்றார்
என்னால முடியல இவர் பேசட்டும்
மைசூர் தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளில் ஒரு பகுதி தங்கி பயிற்சி பெறும் இடமாம் இது. . (தற்பொழுது தசராவில் பங்கேற்கும் யானைகள் நாகர்ஹோளே தேசிய பூங்காவில் வசிக்கறதாம்
இப்பொழுது துபாரே ஒரு சுற்றுலா தளமாக உருமாறி இருக்கு. . காவிரியில் அதிக நீரோட்டம் இல்லாததால், நடந்தே நதியை கடந்து தீவை அடைய வேண்டும். அங்கு, காலையும் மாலையும், யானைகளைக் குளிப்பாட்டுகிறார்கள். நதியில் (முழங்கால் அளவே இருந்தாலும், காவிரி அல்லவா?) யானைகளைப் படுக்க வைத்து, நெகிழி நார்களால் உடலை தேய்த்து குளிபாட்டுகிறார்கள். நாமும், அருகே சென்று, தொட்டு, தடவி, யானைகளைக் குளிப்பாட்டலாம்.
குருவாயுர் கோவில் யானைகள் வாழும் ஆனகோட்டாவில் (புன்னத்துர் கோட்டாவில்) நிறைய யானைகளை ஒரே இடத்தில் பார்த்திருக்கிறேன், தொலைவிலிருந்து தான். சிறு வயதில் எப்பொழுதோ யானை சவாரி போனது நினைவிலிருக்கிறது. ஆனால், அப்பொழுதும் அம்பாரம் தாண்டி, யானையில் சருமத்தை தொட ஒருவித பயம். தொட்டதில்லை.
இங்கோ, சிறு குன்றுகளாக யானைகள் படுத்திருக்க, சுற்றிலும் மனிதர்கள். யானையின் அருகே நிற்பதே கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது
உலகிலேயே பார்க்கப் பார்க்க அலுக்காத அதிசயங்கள் இரண்டு உண்டு’ என்று எதிலேயோ படித்திருக்கிறேன்.
ஒன்று - குழந்தை; மற்றொன்று - யானை. நிஜம்தான். பிடித்த அழகி, பிடித்த உணவு, பிடித்த வாகனம் என்று எத்தனை விஷயங்களைக் கண் முன் நிறுத்தினாலும், குழந்தையின் சிரிப்பு, இளையராஜா இசைபோல நம்மை அறியாமல் மனசை இலகுவாக்கும். விஷயத்துக்கு வருகிறேன். யானைகளும் அப்படித்தான். யானைகளைப் பக்கத்தில் பார்ப்பது இருக்கட்டும்; ஒரு முறை நீங்கள் யானையில், அதுவும் காட்டுக்குள் சவாரி செய்து பார்த்தீர்கள் என்றால்.. காட்டையே கைக்குள் அடக்கியதுபோன்ற ஓர் உணர்வு கிடைக்கலாம். கும்கி யானைகளை ஆசை தீரப் பக்கத்திலேயே வைத்துப் பார்த்து... அவ்வளவு ஏன்.. குளிப்பாட்டியே விடும் பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கலாம்.
மைசூர் தசராவில் வலம் வரும் யானைகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு யானைகளின் பயிற்றுநர்கள் யானைகள் பற்றிய வரலாறு, சூழலியல், உயிரியல் பற்றியெல்லாம் விவரிக்கிறார்கள். சுற்றுலாப் பயணியர் இங்கு யானைகளின் பல நடவடிக்கைகளை காணலாம். யானைகளுக்குக் கேழ்வரகு, வெல்லம், கரும்பு. வாழைப்பழம் மற்றும் தேங்காய் போன்ற உணவினைக் கொடுக்கலாம். ஆற்றில் யானைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டுவதையும், நெற்றிக்கும் தந்தங்களுக்கும் எண்ணெய் பூசுவதையும் காணலாம்.
குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் நாமும் யானையைக் குளிப்பாட்டலாம். குளியலை முடித்துக்கொண்டு செல்லும் யானைகளுக்கு உணவு கொடுக்கப்படுகிறது. பிறகு அருகில் இருக்கும் மைதானத்தில் சிறிது நேரம் விளையாடுகின்றன.
சலசலக்கிற காவேரி , பச்சை பசேல் புல்வெளி , அமைதியாக நின்ற யானைகள், அப்பப்போ கேட்கிற ஜிப் சத்தம், ஊசிஇலை மரங்கள் அப்படி அந்த இடம் ஒரு வித்தியாசமான அனுபவம் கொடுத்தது...
இவர் மாட்டுக்கு நேரம் காலம் பாக்காம வேடிக்கை பாத்துண்டு நிக்கறார். யானையைப்பாத்தது போதும் இருட்டறதுன்னு சொல்லி திரும்பற ஆட்டோல ஏற சொல்றேன். மறுபடியும் ரோடுக்கு வரோம்..இன்னொரு பஸ் பிடிச்சு மடிகேரே போறோம். வழில குடகு மலையைப்பத்தி சொல்றார்.
No comments:
Post a Comment