சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 32
மறுபடி ஹாசன் வரோம்..சாயங காலம் உள்ளூர் கோயில் போகறோம்
இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது. நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 9-ஆம் தேதிவரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம்.
நாங்க போனதோ நல்ல வேளை நவம்பர் 5 அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.
இது ஆதி காலத்தில், அதாவது அர்ச்சுனனின் பேரனும், பரீட்சித்து மகாராஜாவின் மகனுமான ஜனமேஜெயன் ஆட்சி செய்த இடம் என்று சொல்லப்படுகிறது. அப்போது இந்த இடம் ‘சிம்ஹாசனபுரி’ என்று அழைக்கப்பட்டது. தற்போது இந்தப் பகுதியானது ‘ஹாசன்’ என்று பெயர் பெற்று விளங்குகிறது. இங்கு ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஹாசனாம்பா தேவி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். இந்த அம்மன் இங்கு நிலைத்த பிறகே, இந்த ஊர் ‘ஹாசன்’ என்று பெயர் மாறியதாக கூறப்படுகிறது. இங்கு அம்மன், மண் புற்று வடிவில் இருள்து அருள்கிறாள்.
இந்தக் கோவிலின் கொடிமரத்தைத் தாண்டியவுடன் சித்தேஸ்வரர் என்ற திருநாமத்துடன், சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இங்கு சிவன், லிங்கவடிவில் காட்சி தருகிறார். அத்துடன் அவருடன் பாசுபதாஸ்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையில் அர்ச்சுனன் காணப்படுகிறார். உற்சவ மூர்த்தியான சிவனின் நெற்றியில், ஒளி வீசும். இதை நாம் ஆண்டுதோறும் கோவில் நடை திறக்கப்படும் வேளைகளில் கண்டு ரசிக்கலாம்.
அதுபோல் கோவிலில் கல்லப்பா குடி என்ற சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் 4 கல் சிலைகள் உள்ளன. இதற்கு ஒரு வரலாறு உண்டு. அதாவது கோவிலுக்குள் புகுந்த 4 திருடர்கள், தேவியின் கழுத்தில் கிடந்த ஆபரணங்களை திருட முயற்சித்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த தேவி, 4 பேரும் கல்லாய் போகட்டும் என்று சாபமிட்டதாகவும், அதனால் அந்த 4 பேரும் கல்லாய் நிலைத்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 4 பேரும் நிலைகொண்ட இடம் ‘கல்லப்பா குடி’
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் நாள் தவறாமல் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து வழிபட்டு கொண்டு இருந்திருக்கிறாள்.
🛕 ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் “வீட்டில் உள்ள வேலைகளை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்” என்று சொல்லி அந்தப்பெண்ணை அடித்திருக்கிறாள்.
🛕 அப்போது அப்பெண் வலியால் சத்தமிட்டாள். அப்போது அம்மன் அவள் முன்பு தோன்றி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோவிலில் காணப்படுகிறது.
🛕 இந்த கல் அம்மன் விக்ரகத்தை நோக்கி ஆண்டுதோறும் அரிசி அளவு நகர்ந்து கொண்டிருக்கிறதாம். இந்த கல் நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
ஹாசன் லேர்ந்து பேலூர் ஹளபேடு போலாமாங்கறார். அடுத்த டூர்ல பார்த்துக்கலாம். எப்ப பெங்களூர் போய்ட்டு சென்னை போறதுன்னு சொல்லி ஒரு வழியா பெங்களூர் பஸ் ஏறறோம்.
அடுத்து ஒரு ஆந்தரா தெலங்கானா கட்டுரைக்கு அப்பறம் மேற்கு கர்நாடகா உடுப்பி சிருங்கேரில சந்திப்போம்.
No comments:
Post a Comment