🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🌹🌹🙏🏻🙏🏻
சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 27
கார்த்தால மினி பஸ்ஸ பிடிக்கறோம். 15 ரூ டிக்கட். பஸ் பச்சை பசேல்னு மலைக்காட்டுல வலைஞ்சு வலைஞ்சு போறது. ராத்திரி பேஞ்ச மழைல குளிச்ச செடி கொடி மரம்லாம் ஃ்ரெஷ்ஷா இருக்கு. நாங்கதான் தல காவேரிலதான் குளிக்க போறமேனு தூங்கி எழுந்து வரோம். அங்கங்க குட்டி குட்டியா அருவி..
திடீர்னு மழை பொளந்து கட்டறது நாம தலைக்காவேரி போற அன்றைக்குத்தானா வருணனும் விசிட் செய்யணும்?
வருணன் கூடவே வந்தாலும் சாலையில் தண்ணீர் இல்லை!சரிவுல எறங்கி காவேரியோட சங்கமம் ஆய்டுத்து போல. பஸ் ஒரு வழியா காவேரி மாதிரி ஆடி அசங்கி ரெண்டு மணி நேரத்துல தல காவேரி அடிவாரம் வரது.
அந்த மழைலயும் கர்நாடகத்தில் கைல்போத் திருவிழானு கூட்டம். இங்கிருக்கும் விவசாயிகளுக்கு மிக முக்கியமான நாளாம் . இந்த பண்டிகை எதைப்பற்றி என்று இவர் ஆர்வமாகக் கேட்க, அவ்வூர் விவசாயி ஒருவர் பதிலளித்தார். இன்று விவசாயிகள் அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் அனைத்தையும் கழுவி, அதற்கு பூஜை செய்வார்களாம். பின் பாரம்பரிய உணவு சமைத்து குடும்பத்தினருடன் சேர்ந்தமர்ந்து அதை உண்பார்களாம். இதில் முக்கியமான ஒரு விஷயம், இப்பண்டிகையில் அவர்கள் ஏதேனும் ஒரு கடவுளை முக்கியமாக வணங்குவார்களா? என்று கேட்டதற்கு, அந்த எளிய விவசாயிசொல்றார். , "ஆம். காவேரித் தாயை"
உயரமான படிகள்ல ஏறரோம். சின்னதா கோயில்
அதற்கு முன்பாக நீச்சல் குளம்போல், தேங்கிக் கிடக்கும் இடம்தான் காவிரியின் ஆரம்பம். குளியல் தொட்டிபோல் இருக்கும் இதிலிருந்தா இத்தனை பெரிய காவிரி உருவாகிறது என்று வியப்பாக இருந்தது. எந்நேரமும் புனித பூஜைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. சிலர், குளத்தில் காசுகளை வீசி எறிந்து கொண்டிருந்தார்கள். காசு எறிந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாம்.
மடிகேரியில் இருந்து 48 கி.மீ தொலைவில் உள்ள இந்த இடம்தான் காவிரி ஆற்றின் உற்பத்தி இடம் இதுதான். குடகு மக்கள் காவிரி நதியையே பெண் தெய்வமாக வழிபடுகிறார்கள். காவிரி அம்மனுக்குக் கோயிலும் இங்கு உண்டு. இதன் எதிரில் உள்ள குளத்தில் குளித்துக் காவேரி அம்மனை வழிபடுவது இங்கு கடைப்பிடிக்கப்படும் வழக்கம். இக்கோவில் மாநில அரசால் 2007 ஆம் ஆண்டுப் புனரமைக்கப்பட்டுள்ளது.
விநாயகருக்கும் அகத்தியருக்கும் இங்கு கோவில்கள் உள்ளன. இங்கு உள்ள அகத்தீஸ்வரர் (சிவன்) கோவிலில் உள்ள இலிங்கம் மிகவும் தொன்மையானது.ஓம்காரேஸ்வரர் கோயில்” சிவன் கோயில் தான் ஆனால் பார்த்த ஏதோ இஸ்லாமிய பாணி கோயிலாட்டம் இருந்தது.
சிறந்த மலை வாசஸ்தலம். மாதந்தோறும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள மெர்க்காரா எனப்படும் மடிக்கேரியில் ஸ்ரீ ஓம்காரேஸ்வர் கோயில் உள்ளது. கோயில் வாசலில் குளம் மற்றும், சுற்றிலும் மதில் சுவர்கள் உள்ளன.
இந்தக் கோயிலை 1820ல், மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டினான். கொடுங்கோலனான அவன், தன் அரசியல் அபிலாஷைகளுக்காக, நேர்மை மிக்க ஒரு அந்தணரைக் கொன்றான்.
இன்னொரு கதை பிரகாரம் அந்தணருடைய மகளை அடைய விரும்பினான். அவர் மறுத்ததால், அவரைக் கொன்றான்.
அந்தணரைக் கொன்றதால், அரசனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. கனவில் வந்து மன்னனை உலுக்கி எடுத்தார் அந்தணர்.
No comments:
Post a Comment