Friday, January 14, 2022

சென்னை To பெங்களூரு பகுதி 27

 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🌹🌹🙏🏻🙏🏻

சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 26

காத்தால போனமா தீர்த்தமாடிட்டு அடுத்து பாக்க வேண்டியதை பாக்கலாம்னா குளிக்கறதுக்கே இவ்வளவு தூரம் நடந்து கஷ்டப்படணுமான்னு ஒரு தடவை நெனச்சாலும். அருவிய பாத்த ஒடனே கஷ்டம்லாம் மறந்துடறது. 

‘தடால் தடால்’ எனப் பொத்துண்டு விழறது அருவி. அபே அருவிக்குச் போறது அட்வென்ச்சர் ட்ரிப்போலவே இருந்தது. சில பல ஏலக்காய் எஸ்டேட்களைக் கடந்து... தொங்கு பாலத்தைத் தாண்டி... 

செங்குத்தான மலைத் திருப்பங்களில் ஊர்ந்துண்டு ... இப்படித்தான் அபே அருவியை அடைய வேண்டியிருக்கு . குளியல் போடலாம் என்று நினைத்து ஆர்வமாகக் கிளம்பினோம். . குளிக்கத் தடை என்றார்கள். அட்டைப் பூச்சிகளின் தொந்தரவால் குளிக்கத் தடை விதித்திருந்தார்கள். சிலர் தொங்கு பாலத்திலிருந்தே அபே அருவி தெரிவது மாதிரி செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போ அருவி வந்து குளிக்கலயேங்கறேன். தலக்காவிரில போய் குளிக்கலாம்கறார்..அதுக்கு சாயங்காலம் ஆய்டும். நான் மாட்டேங்கறேன். 

திட்டிண்டே கூகுள் பார்த்து வேற அருவி எங்கன்னு பாக்கறார். 

எதையோ அறைகுறையா பார்த்துட்டு ஆட்டோ பேசி. புருடேங்கற அருவிக்கு அழைச்சிண்டு போறார்.

தெனம் காத்தால ஒரு பெருமாள் கோவிலாவது காட்டறேன்னு சொல்றிக்கேள்..இப்ப தீர்த்தாமாடாம பெருமாள நெனச்சிக்க கூட முடியாம பண்றேள்ங்கறேன். தோ அழைச்சிண்டு வந்துட்டேன். போய் குளிங்கறார். தூஊஊரத்துல அருவி விழறது. 

சுத்தம். இதிலேயும் குளிக்க முடியாது. புருடே என்ற சொல் கன்னடத்தில் மண்டையோட்டை குறிக்கிறதாம்.   சித்தாபூரிலிருந்து கம்டா செல்லும் சாலையில் இதுஇருக்கு. . குளிர்காலம் மற்றும் கோடை கால துவக்கத்தில் இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க போகணுமாம் 

. ஏன்னு கேட்டா. மழைக்காலத்தில் இடைப்பட்ட பள்ளத்தாக்கு பகுதியை தாண்டி இந்த நீர்விழ்ச்சியை அடைவது ரொம்ப கஷ்டம்கறா..

கோடைக்காலத்தில் கூட ஒரு ஓடையின் வழியாக மலையேறி இந்த நீர்வீழ்ச்சியை காணலாம். நீர் வீழ்ச்சியின் மறு புறத்தை அடைவது மிகச்சிரமமானதும் அபாயமானதும்னு பயம் படுத்தறா. 

கூகுள்ளல படிச்சுட்டு இந்த நீர்வீழ்ச்சியின் முன் நின்று பார்த்தால் சுற்றிலும் மலைகளும் இயற்கையும் உயர்ந்தோங்கி நின்று ஒரு பிரம்மாண்ட திறந்தவெளி ஆம்பிதியேட்டர் முன்பு நிற்பது போன்ற உணர்வை இப்பிரதேசம் தருகிறது. இந்த இடத்தில் பயணிகள் (மலை ஏறிகள்) அமர்ந்து அருவியின் சப்தத்தையும் நீரின் சாரலையும் அனுபவித்து மகிழலாம்ங்கறார். 

ஆம்பி தியேட்டரும்்வாண்டாம் நீங்க எதையும் காம்பிக்கவும் வேண்டாம். ரூமுக்கு போவோம். வெள்ளிக்கெழமை. ரூம் பாத்ரூம்லயே தீர்த்தமாடிக்கறேங்கறேன். 

தீரத்த மாடிட்டு பெருமாளை ப்ரார்த்திச்சிண்டு ஓட்டல் போய் இட்லி மற்றும் வடையை ருசிப்பார்த்துட்டு , ப்ரெஷ்ஷான பில்டர் காபியும் வாங்கிததரார். அடுத்து ராஜா சீட்ங்கற எடத்துக்கு போறோம். இனி இவர் பேசுவார். 

ராஜா சீட்

மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராஜா சீட் புகழ்பெற்ற வியூ பாய்ண்ட்ஆகும். மடிகேரியின் மன்னர் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையும், இயற்கை எழிலையும் இங்கிருந்துதான் கண்டு ரசிப்பாராம். ராஜா சீட் வேடிக்கை பார்ப்பதற்கென்றே உருவான இடம் போல காட்சியளிக்கிறது.இவ்விடம் மடிகேரி கோட்டைக்குத் தெற்கில் நீரூற்றுகள் நிறைந்த ஒரு அழகிய பூங்கா அமைந்துள்ளது. இது மிக முக்கியச் சுற்றுலாத் தலம்

மற்றும்பிரபல சூரிய அஸ்தமனதைக் காணும் இடமாகும்.

ராஜா சீட் என்றால் குடகு அரசர்களின் ஓய்வெடுக்கும் இடம் என்று பொருள். இப்பூங்காவின் நடுவில் சுண்ணாம்பு மற்றும் செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு அழகிய விதானம் நான்கு தூண்களையும், கூரை மற்றும் அலங்கார வளைவுகளைப் பெற்றுள்ளது. இது அரசர்களின் விருப்பதிற்குகந்த மனமகிழ் மையம் ஆகும். இங்கு அரசர்கள் தங்கள் இராணிகளுடன் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து மகிழ்வார்களாம். இன்று இங்கிருந்து மக்களும் பார்க்கிறார்கள்.

உண்மையிலேயே ராஜாவின் கண்ணோட்டம் போன்ற பிரமிக்க வைச்ச இடம் தான் அது. பனி படர்ந்த அந்த பகுதியில் ” செம இடம் லே ” என்று சிலர் அங்கலாய்க்க…

காலை பொழுது அந்த பனித்துளிகளும் , பள்ளத்தாக்கு பார்வையும் இமைகளை இறுக்கிபிடித்து இன்பமாய் இம்சித்தது.

இந்த இம்சைக்கு முன்னாடி ஒடனே தலக்காவேரி போய்ட்டு எப்ப பெங்களூர் போய் அப்பா அண்ணாவைப்பார்க்கறதுண்ணு இவ இம்சை வேற. 

உள்ளூர் கோட்டையை சுத்தி பார்துட்டு நாளைக்கு கெளம்பலாம்னு சமாதானப்படுத்தறேன்.




No comments:

Post a Comment