பாசுரமும் அக்கார வடிசலும்…
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶.
“ இன்னிக்கு லன்ச் என்னம்மா பிளான்..?.".
“ தெனமும் சாம்பார் , ரசம்னு மாத்தி மாத்தி பண்றது போரடிக்கறது…”.
“ அதனால..இன்னிக்கு வேணா ஓட்டல்க்கு போய் சாப்ட்டுர்லாமா ? “.
“ ம்ஹூம்..இப்பல்லாம் ஓட்டல் போக வேணாம்….இந்த வைரஸ் சனியன் பூரணமா நம்ம தேசத்த விட்டு போற வரைல நோ ஓட்டல்..”.
“ அட ராமா…அது இங்கய டென்ட் அடிச்சு டேரா போட்டாப்லனா கன்டினியூ ஆயிட்ருக்கு..”.
“ அதெல்லாம் இந்த மார்கழி முடிஞ்சு தை பொறந்தா ஓடி போய்டும்..,”.
“ அப்டியா..நல்லதுதான்.. சரி , மெனு சொல்லலையே ? “.
” பிரண்ட சாதம் கலந்துட்டு , மோர் மொளகா போட்டு தயிர் சாதம் பெசைஞ்சுடறேன்…கறி என்ன வேணும்னு சொல்ங்க ? “.
“ கறி வேணாம்..அதுக்கு பதிலா சேனைய நீ தோல் சீவிக் குடுத்துடு. நா சிப்ஸூக்கு சீவி தந்துடறேன்..”.
“ அப்பாடா..நல்லதாப் போச்..”.
வூட்டம்மா சேனையோட தோல கட் பண்ணி குடுத்தாங்க. நா சீவ ஆரம்ப்ச்சேன்…
“ ஏம்மா ..வர்ற 11 ந்தேதி , நாளைக்கு அக்கார வடிசல் செஞ்சு சாப்ட்டா ரொம்ப நல்லதாமே , பண்றயா ?.”.
“ இதென்ன புதுக்கதையா இருக்கு ?. உங்களுக்கு இப்ப அக்கார வடிசல் மசக்கனு சொல்ங்க..அதுக்கென்னத்துக்கு புதுசா கதைய ஒன்னு அடிச்சு வுடறீங்க ?.”.
“ அட ராமா..கதைலாம் இல்லமா..நெஜம்மாவே இந்த மார்கழியோட 27 வது நாள்லத்தான் கூடாரவல்லி வைபவத்த நடத்துவாங்களாம்.
ஆண்டாள் அக்காரவடிசல நிவேதனமா செஞ்சு தர்றதா ரங்கன்ட்ட வேண்டிப்பாளாம். அந்த நாள்ல்லல்லாம் கோயில்ங்கள்ல இந்த மார்கழி 27 வது நாள்ம்போது 100 லிட்டர் பால் , அரைகிலோ திராட்சை , கால்கிலோ அரிசி , 10 கிலோ கல்கண்டு , நெறய முந்திரிங்களலாம் போட்டு பண்வாங்களாமே..”.
“ நெஜமாவா சொல்றீங்க ?.”
வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோ
ரெம்பாவாய்..னு பாசுரமே இருக்கேமா..? “.
“ ம்க்கும் - உங்களுக்குனு அந்தக் காலத்துலேயே பாசுரம்லாம் எழுதி வெச்ருக்கா பார்ங்க..அவாள சொல்லனும் – அது சரி , இந்த அக்கார வடிசல்னா என்னதாம் ? “.
“ நாம பண்ற சர்க்கர பொங்கலத்தான் ஐயங்கார்ஸ் அக்கார வடிசல்னு சொல்றா..”.
“ ஓ..”.
“ என்ன - ஓ..நாளைக்கு பண்றல்ல..?.”.
“ ம்க்கும்..அதான் 14 ந்தேதி பொங்கல் வர்றதே..அன்னிக்கு எப்டியும் நம்மாத்ல சர்க்கரப் பொங்கலும் பண்றது வழக்கம்தான..தனியா 11 ந்தேதி வேற பண்ணணனுமாக்கும் ? உங்க அக்கார வடிசல் மசக்கய 14 ந்தேதிக்கு தள்ளி வெச்சுக்குங்க…”.
“ ம் , அதுவும் சரிதான்..!.யூ ட்யூப்ல சுமிஸ் சேனல்ல Sumitha Ramesh இந்த அக்காரவடிசல் ரெசிபிய செஞ்சு காமிச்ருக்காங்க. நா பார்த்தாச்..அதும்படியே இந்த தரம் பண்றயாமா ?.”..
“ ஓ...நம்ம சுமிதா ரமேஷா..இப்பல்லாம் சூப்பரா ஆன்மீக கதைங்கள்லாம் ரொம்ப நல்லா சொல்றாங்க...நானும் சிலத பார்த்தேன்..சாயந்தரமா இந்த அக்கார வடிசல் ரெசிபி வீடியோவ எனக்கு காமிங்க..அதும்படியே பண்ணிட்டாப் போச்..!.”.
--மடிப்பாக்கம் வெங்கட்.
( 2021 ல எழுதினதுதான்.
).
No comments:
Post a Comment