Saturday, January 22, 2022

சித்தர்கள் தவம் செய்யும் வள்ளிமலை

 இன்றும் சித்தர்கள் தவம் செய்யும் வள்ளிமலை

வள்ளிமலைக்கு இப்போது உள்ளது போல அப்போது படிகள் கிடையாது. ஒரே ஒரு கல்லில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் 444 படிகள் ஏற வேண்டும்.

சுமார் 60 – 70 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது. வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளின் விருப்பத்திற்கு இணங்க, வள்ளிமலையில் படிகளை அமைக்கும் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. 

அதற்கு தலைவர் வாரியார் சுவாமிகள். வேலூர் வைத்தியபூபதி அப்பாத்துரை அவர்கள் செயலாளர். 

மலையின் பாதிவரை படிவேலை நடந்தது. மேலே போகும்போது சில இடங்களில் பக்தர்கள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக தங்கும் மண்டபம் உள்ளது. 

அந்த இடத்தில் படியமைக்கும்பொருட்டு இரண்டு கொத்தனார்கள் அதை பெயர்க்கும்போது, உள்ளே இருந்து மட்டிப்பால் சாம்பிராணி புகை குபு குபுவென வந்தது. 

அடுத்த நொடி கொத்தனார்கள் இருவரும் வாயிலும் மூக்கிலும் இரத்தம் பொங்கி மயங்கி கீழே விழுந்துவிட்டார்கள். படியமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

அருகே இருந்த சித்தாள்கள் ஓடிப்போய் வைத்தியபூபதி அப்பாத்துரை அவர்களிடம் கூறினார்கள். அவர் விரைந்து சென்று பார்த்தார். 

படியை பெயர்த்த இடத்தில பார்த்தால் உள்ளே மங்கலாக யாரோ ஒரு முனிவரின் உருவம் தெரிந்தது. அப்படியே கீழே விழுந்து வணங்கியவர், படிக்கலை எடுத்து மூடிவிட்டார்.

மேற்கொண்டு பணியை தொடர்வதா வேண்டாமா? வாரியார் சுவாமிகள் மாவட்ட ஆட்சி தலைவர் உட்பட அனைவரிடமும் ஆலோசித்தார். கடைசீயில், அந்த மண்டபத்தை மட்டும் அப்படியே விட்டுவிட்டு படிகளை அமைக்கும் பணி தொடர்ந்தது. இப்போதும் அந்த மண்டபம் அப்படியே இருக்கிறது.

சித்தர்கள் தவம் செய்யும் பூமி வள்ளிமலை என்பது இதன் மூலம் புலனாகிறது.

வாரியார் ஸ்வாமிகள் இருக்கும்போது இங்கு படி உற்சவத்தில் கலந்துகொள்வார். ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் பாடி பொருள் சொல்வார். 

அந்த மண்டபத்தில் மட்டும் விழுந்து வணங்கி, வெகு நேரம் நின்று கந்தரனுபூதி பாடுவார்.

வாரியார் ஸ்வாமிகளில் தவறாமல் நடத்தப்பட்ட இந்த படி உற்சவம் தற்போதும் ஆண்டுதோறும் வெவ்வேறு குழுக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment