சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 25
நல்ல வேளையா பஸ் அரை மணி நேரத்துல கெளம்பிடறது. மறுபடி இருட்டுலயும் இயற்கைய ரசிச்சிண்டு வரேன்.
ஊட்டி மாதிரி ஏதோ ஒரு டீ அல்லது காபி எஸ்டேட் என்றுதான் கூர்க்கை எனக்கு அறிமுகப்படுத்தி இருந்தார்கள். ஆனால், கூர்க்கில் அதைத் தாண்டி அனுபவிக்க எக்கச்சக்க விஷயங்கள் இருக்கு.
. ஒரு சுற்றுலாத் தலத்துக்கு முக்கியமான விஷயங்கள் என்னென்ன? போட்டிங், ட்ரெக்கிங், ஷாப்பிங், சைட் சீயிங், அருவி பாத்திங், த்ரில்லிங்... இது எல்லாவற்றுக்குமே கூர்க் கேரன்ட்டி தருகிறது. தமிழில் குடகுமலை.
மன ஸ்டீரியோவில் ‘குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டு’ என்று இளையராஜாவை இசைக்கவிட்டு
இவர் சொல்லிண்டு வரவர காபித்தோட்டம் வரிசையா வரது. அப்பதான் இவர்கூட அங்க இங்க ஓடினதுல மத்யானம் காஃபி சாப்பிடாதது நெனவுல வந்து லேசா தலைய வலிக்கறது.
அப்பாடா! மலைப்பாதை தொடங்கியது. நல்லவேளையாக - இங்கே ஸ்பீடு பிரேக்கர்கள் இல்லை. ரொம்பவும் வளைவுகள் இல்லை; ரொம்பவும் ஏற்றங்கள் இல்லை. திடீரென காபி வாசம் காற்றில் கலந்தடிக்க ஆரம்பித்தது. கூர்க் வந்துவிட்டது. கூகுளில் ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து’ என்று டைப் செய்தால், கூர்க்தான் வருகிறது. ‘வேலை செஞ்சா வியர்க்கும்’ என்று யாரும் இங்கே டபாய்க்க முடியாது. அதாவது, கூர்க்கில் வியர்க்கவே இல்லை.
அதுக்குள்ள மடிகேரே ஊர் வந்துடறது..வழக்கமா என்னை பஸ்ஸ்டாண்ட்ல ஒக்கார வச்சுட்டு லாட்ஜ் தேட போறார்.
எதோ அம்பிகா ஹோம் ஸ்டேங்கற எடத்துல ரூம் னு சொல்லி குறுக்கு வழின்னு ஊட்டி மாதிரி ஏத்த எறக்கமா ரோடுல அழச்சிண்டு போய் விடறார்.
நடிகை அம்பிகா ரேஞ்சுக்கு நெனச்சிண்டு போனா சிதம்பரம் அம்பீஸ் ஓட்டல் ரேஞ்சுக்குதான் இருக்கு.
எதோ ஓட்டலுக்கு போய் டிபன் சாப்ட்டு காபி குடிச்சப்பறம்தான் தலைவலி போறது.
கார்த்தால முழிப்பு வர்றது
ரூம் வாசலில் அதிகாலை வெரைட்டியாக பறவைகள் கண்காட்சி நடத்திக் கொண்டிருந்தன.
காலையில் அருவிக்குளியல் போட்டால் நன்னா இருக்கும். அருவி பற்றி விசாரித்தபோது, அபே அருவி பற்றிச் சொன்னார்கள். பிரிட்டிஷ் காலத்தில் மடிக்கேரியின் கேப்டனாக இருந்தவரின் மகள் ஜெஸ்ஸி. அவரின் நினைவாக முதலில் இதற்கு ஜெஸ்ஸி அருவி என்றுதான் பெயர் சூட்டினார்களாம். நாளடைவில் அபே என்று ஆக்கிவிட்டார்களாம். நம்ம சென்னை ஹாமில்டன் ப்ரிட்ஜை அம்பட்டன் வாராவதி ஆக்கின மாதிரி...
ஒரு ஆட்டோல அழைச்சிண்டு போறார். அபேவுக்கு சீஸனெல்லாம் பெரிசா இல்லை.
மடிகேரி நகரத்திலிருந்து 7-8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அப்பே நீர்வீழ்ச்சி கூர்க் பகுதியில் அதிகம் விரும்பி ரசிக்கப்படுகிற ஒரு நீர்வீழ்ச்சியாகும். அடர்த்தியான தனியார் காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களின் வழி செல்லும் ஒரு குறுகிய பாதையின் முடிவில் திடீரென்று தோன்றி நம்மை திடுக்கிட வைக்கின்றது..இந்த நீர்வீழ்ச்சி. அந்த பகுதியின் அமைதியைக் கிழிக்கும் அளவுக்கு ஹோ’ வென்று இது எழுப்பும் ஓசை நம்மை திகைக்கவோ அல்லது திகிலடையவோ வைக்கறது..
அப்பே அல்லது அப்பி என்றால் கொடவா மொழியில் அருவி என்பது பொருளாம். . மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த நீர் வீழ்ச்சி பல சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து உருவாகி உயரமான பாறைகள் மீது வழிந்து சிதறி நீர்ச்சிதறலுடன் படு வேகத்தில் அடியிலுள்ள அமைதியான தடாகத்தில் விழுகிறது.
கண்கொள்ளா காட்சி என்று வர்ணிக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி எழுப்பும் சத்தம் அந்த பகுதியின் அமைதியை ஊடுறுவி ஒலித்து அதன் கம்பீர இருப்பை உணர்த்துகிறது. இப்படி நீர்வீழ்ச்சியில் மேலிருந்து நீர் சரிந்து விழுவதால் எழும் சிதறலானது பனிமேகம் போன்ற ஒரு சூழலை அவ்விடத்தில் உருவாக்கி அவை மலைகளின் மீது தவழ்வது போன்ற ஒரு தோற்றத்தினை பார்வையாளர்களுக்கு தருகிறது.பொதுவாக மழைக்காலத்தில் இந்த நீர் வீழ்ச்சியின் வேகம் அதிகமாக இருக்கும்.
கோடைக்காலத்தில் நீர் வரத்து குறைவு என்பதால் நீர் வீழ்ச்சியிலும் அதிகம் வேகம் இருக்காது. நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் வசதியாக பார்க்கும் விதத்தில் ஒரு தொங்கு பாலம் ஒன்றும் அதற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மறுபுறத்தில் அமைந்துள்ள காளி மாதா கோயிலும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.
No comments:
Post a Comment