அக்காரவடிசல் மற்றும் சுஜாதா:
இன்றைய திருப்பாவையைக் கேட்டபோது கூடாரவல்லி என்று தெரிந்தது.
இதைப் பற்றி சுஜாதா ஒரு கட்டுரையில் (கறுப்புச் சக்தி) குறிப்பிட்டிருந்தார்: இதோ அது -
‘கூடாரவல்லி’ கூடாரை வெல்லும் என்னும் திருப்பாவை 27--ம் பாசுரத்தின் மரூஉ. கோவிந்தனைப் பாடிப்பறை கொள்வதால் பெறும் சன்மானங்களை ஆண்டாள் பட்டியலிடுகிறார்.
சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் போன்ற அணிகலன்களை அணிந்து ஆடையுடுத்து பால்சோற்றில் ‘மூடநெய் பெய்து முழங்கை வழி வார’ உண்போம்' என்கிறார்.
இதனால், இந்தத் தினத்தில் ஐயங்கார் வீடுகளில் அக்காரஅடிசில் ஒரு கட்டாயம். அது நெய்யில் மிதந்தால் இன்னும் உத்தமம்!
No comments:
Post a Comment