சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 25
அவர் பாட்டுக்கு எதோ கதை சொல்லிண்டு வரார்.
குடகு மலையின் மேற்கு மற்றும் கிழக்குப் பக்கச் சரிவுகளில் அமைந்த ஆரவாரமில்லாத, மிதமான வேகத்தில் நகரும் சிறிய நகரங்களையும், இயற்கை அழகு கொஞ்சும் அமைதியான கிராமப்புறங்களையும் காணலாம். சர்வதேச அளவில் கொடகு பிரதேசம் சிறந்த காபி பயிர் செய்யும் பகுதியாக புகழ் பெற்று விளங்குகிறது. காபி பயிர் செய்வதற்கேற்ற பருவநிலை இங்கு காணப்படுவதே இதற்கு காரணம். ஆங்கிலேயர்களே இங்கு முதலில் காபி பயிரை அறிமுகப்படுத்தினர்.
கூர்க் இந்தியாவில் மிகப்பெரிய காஃபி உற்பத்தி செய்யும் மாவட்டமாகும். காஃபியைத் தவிரத் தேன், ஏலக்காய், மிளகு மற்றும் ஆரஞ்சு போன்றவையும் கூர்க் பகுதியின் விளைபொருட்களாக உள்ளன. கூர்க் பகுதியில் காணத்தக்க சிறந்த இடங்களில் அழகிய காஃபித் தோட்டங்களும் அடங்கும். இந்தியாவில் அதிக மழைப்பொழிவு கொண்ட இடங்களில் இதுவும் ஒன்றாகும். காஃபி பயிர் செய்வதற்கேற்ற பருவநிலை இங்கு காணப்படுவதே இதற்குக் காரணம்.கூர்க்கில் இரு வகையான காபிகள் பயிரிடப்படுகின்றன. ஒன்று அராபிகா. மற்றொன்று ரோபஸ்டா. இவை தவிர தற்போது உலக அளவில் காஸ்ட்லியான காபியான லூவா காபியும் (Kopi Luwak) தயாரிக்கப்படுகிறது.
எனக்கு எதோ அரை குறையா இவரோட கதையும் ராம ராஜன் கனகாவும் கனவுல சேர்ந்து
குடகு மலை காற்றில் வரும் கதையும் கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது.
ஒத்த வழி என் வழி தானே மானே ங்கறார்
ஆமாம் ஊருக்கெல்லாம் ஒரு வழின்னா உங்க வழி ஒத்த வழிதான்னு நெனச்சுக்கறேன்.
உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
(ஆமாம் ஊர்கோலம்தான் போறோமே)
தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன்
பூ பூத சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே...
(ஆமாம் நான் வந்த வேளை..எல்லாம் என் தலைவிதி?)
சென்னை டு பெங்களூரு தொடர்ச்சி...
மத்யானம் பூரா அலைஞ்சதும் இவர் சொன்ன குடகு கதையும் என்ன தூக்கத்துல கனகா கனா காண விட டமால்னு சத்தம்.
பஸ்ல முன் டயர் வெடிச்சு மலைப்பாதையில நிக்கறது. கண் முழிச்சு மணி பார்த்தா. ராத்திரி எட்டு. இவர் எறங்கி போய் பாத்துட்டு டயர் மாத்தி கெளம்ப ஒரு மணி நேரமாகுமாம். அப்பறம் ஊர் போக ராத்திரி பத்து மணி ஆகுமாம்.
இவர் மடிகெரேல மாமனார் வீடு இருக்கற மாதிரி சாதாரணமா சொல்றார்.
ராத்திரி விடிய விடிய மடிகெரே பஸ்ஸ்டாண்ட்ல டூயட் பாடப்போறோமான்னு ஜிலீர்ங்கறது 😡😡
No comments:
Post a Comment