பட்னாலு கூரா
தேவையான பொருள்கள்
பட்டாணி - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, புளி - நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லிதழை - சிறிதளவு, தாளிக்க:, கடுகு, உளுந்து, கடலைபருப்பு, சீரகம் - ஒரு தேக்கரண்டி, வெள்ளை பூண்டு - 5 பல், வர மிளகாய் - 2, வெங்காயம் - 2, தக்காளி - 2, தனியாக
அரைத்தெடுக்க:,
நிலக்கடலை - ஒரு கைப்பிடி, வெள்ளைபூண்டு - 10 பல், வர மிளகாய் - 3, தனியா - 2 தேக்கரண்டி, மிளகு - 10, பட்டை - 1, தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
செய்முறை
நிலக்கடலையை வறுத்து தோலுரிக்கவும். வெறும் வாணலியில் மிளகு, பட்டை, மிளகாய் வறுக்கவும். கடைசியாக அடுப்பை அணைத்ததும் தனியா சேர்த்து வறுக்கவும் (அதிகமாக வறுத்தால் தனியா கசந்து விடும்). அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை பாதியளவு வேகும் வரை அவித்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில் கடுகு முதல் தக்காளி வரை ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.பின் அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் கலந்து வதக்கியவற்றுடன் சேர்த்து வாசனை போக வதக்கவும்.பின்னர் உருளை மற்றும் பட்டாணியை சேர்க்கவும்.அத்துடன் புளி, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.கிரேவி பதத்தில் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி 2 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்.பொதுவாக பட்டாணி உருளை சேர்த்து குருமா செய்வது தான் வழக்கம். குருமாவை சாதத்துடன் சாப்பிட சரியாக இருக்காது. ஆனால் இந்த முறை சாதத்திற்கு குழம்பாகவும், சப்பாத்தி, பூரி, நாண், இடியாப்பம் ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
No comments:
Post a Comment