Friday, January 14, 2022

கரும்போ கரும்பு

 கரும்போ கரும்பு. சிறுகதை!

ஈரோடுஅ. தமிழ்க்குமரன்

"கரும்புஎன்னப்பா விலை?" என்றாள்சுதா. "ஜோடி 100 ரூபாய் " கரும்புக் கடைக்காரர் பதில் . " என்னப்பா ஜோடி 80 ரூபாய்க்கு எங்கள் வீட்டு பக்கத்தில் வீட்டுக்காரம்மா வாங்கி கொண்டு வந் தார்கள் " என்று கடைக்காரரை மடக் கினாள் சுதா . கடைக்காரன் முறைத்து பார்த்து விட்டுச் சொன்னான் " ஜோடி 100 ரூபாய் , வேண்டும் என்றால் எடுங்கள் இல்லை என்றால் இடத்தைக் காலி செய்யுங்கள் " என்றான் கடைக்காரன் . அந்தக் கடையிலிருந்து நகர்ந்தாள் சுதா .

தைப் பொங்கலுக்கு கரும்பு வாங்க வேண்டும் என்று கடை வீதிக்கு வந்து கரும்பு விலை கேட்டால் . நம்ம வீட்டு அருகில் இருக்கும் கடையின் விலைதான் ! இங்கிருந்து சுமந்து கொண்டு போகும் வேலை கொஞ்சம் மிச்சம் என்று மனதுக்குள் நினைத்தாள் சுதா . அடுத்த கரும்புக் கடைக்கு வந்து மீண்டும் விசாரித்தால் " கரும்பு என்னப்பா விலை ".

"ஜோடி100 ரூபாய்" கடைக்காரன் பதில்! என்னது, எல்லா கடையிலும் சொல்லிவைத்து வியாபாரம் செய்கிறார்களோ? என்றுஅங்கு இருந்து நகர்ந்தாள் சுதா. சுதா குடும்பத்தில் கணவர், இரண்டுஆண் குழந்தைகள், நடுத்தர குடும்பம் தான். சரி வீட்டுக்காரர் வாங்கி கொண்டு வருவார்என்று வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

சுதா வீட்டுக்கு வந்ததும் மூத்த மகன் பிரபுகேட்டான். "கடைவீதிக்குப் போய் தம்பிக்கும் எனக்கும்என்ன வாங்கி வந்தாய்?" சுதாபதில்; "வீட்டுக்குத் தேவை யான மளிகைப் பொருட்கள்வாங்கி வந்தேன். நீ கேட்ட கரும்புவிலை அதிகம் என்று வாங்கிவரவில்லை" என்று சொல்லி முடிப்பதற்குள். இளைய மகன் பாலு கையில்வெளிநாட்டு குளிர் பானத்தை 80 ரூபாய்கொடுத்து வாங்கி வந்தான். சுதாவிடம்கொடுத்தான்.

என்னடாஇது "கடையில்நீங்கள் கரும்பு வாங்கி வரவில்லை. அதுக்குத் தான். நாம் தினமும்பொருள் வாங்கும் மளிகை கடையில் கரும்புதீர்ந்து போய் விட்டது, கரும்புஇல்லை. அதனால் இந்த குளிர்பானம்வாங்கி வந்தேன்" என்றான் பாலு. அதற்கு சுதா "50 ரூபாய்செலவு செய்வதற்கு எனக்கு மனசு வரல, மூன்றாம் வகுப்பு படிக்கிற உனக்குஎப்படிடா மனசு வந்தது? இருஅப்பா வரட்டும் உனக்கு சூடு வைத்தால்தான் நீ திருந்துவே" என்றுதன் இரண்டாவது மகன் பாலுவை கண்டித்தாள்சுதா. அப்போது மூத்த மகன்பிரபு ஓடி வந்து "அம்மா அம்மா அப்பா வராங்க" என்று குரல் கொடுத்தான்.

சுதாவின்கணவன் பாண்டியன் வீட்டுக்குள் வந்தான். அப்போது பாலு ஓடிவந்து "அப்பாஎன்னை அடிக்காதீங்க" என்று பாலு அப்பாவைஅணைத்துக் கொண்டான். அதற்குப் பாண்டியன். "உன்னை அடிக்க மாட்டேன்" என்று பாலுவை வாரி அணைத்துக்கொண்டான் பாண்டியன், சுதாவை பார்த்து முறைத்தான். "இவன் என்ன தப்புசெய்தான்" என்று கேட்டான் பாண்டியன். அதற்கு சுதா "கடைக்குச்சென்று குளிர்பானம் வாங்கி விட்டு வந்திருக்கிறான்" பாலுவுக்கு ஆதரவாக பாண்டியன் பேசினான். "சின்ன பையன் தெரியாமல் செய்திருப்பான்" சுதாவை பார்த்து "நம்ம பிள்ளைகளுக்கு. பொங்கலுக்கு கரும்பு வாங்கி வரவில்லையா?" என்று கேட்டான்.

"கரும்புவிலை அதிகமாக இருக்கு" என்ன வருடத்திற்கு ஒருநாள் மட்டும் தானேவிலை அதிகமாக இருந்தால் என்னவாங்கி வர வேண்டியதுதானே? நான்போய் கரும்புவாங்கி வருகிறேன்" என்றான்பாண்டியன். கடைவீதிக்கு சென்றான். அதே கரும்பு கடைக்கு "கரும்புஎன்ன விலை" என்று கேட்டான் பாண்டியன். கடைக்காரர் முன்னரே பாண்டியனுக்கு அறிமுகமானவர் "என்னபாண்டி கரும்புக் கடையில காலையில உங்கவீட்டுக்காரம்மா விலை கேட்டாங்க - இப்போநீங்க வந்து விலையை கேட்கிறீர்கள்- கேட்பதோடு சரி வாங்கும் எண்ணம்இல்லையா?" என்று கடைக்காரர் கேட்டார்.

கடைக்காரரைமுறைத்தான் பாண்டியன். "என்னகடைக்காரரே? முன்னப் பின்ன தெரியாதஆளுக்கு விலைசொல் வது போல் எங்களுக்கும்சொல்கிறீர் களா?" என்றான் பாண்டியன். கடைக்காரர் பேசத்தொடங்கினார். "பாண்டி நான் ரோட்டுல இரண்டுமூங்கில் கட்டிகரும்பு வியாபாரம் செய்கிறேன். எனக்கு அஞ்சு ரூபாய்பத்து ரூபாய் கிடைத்தால் போதும். எதிரிலேயே இருக்கும் ஜவுளிக் கடை பாருஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு பட்டு சேலை வாங்கிஅய்யா யிரம் பத்தாயிரம் என்றுவிற்பனை செய்கிறார்கள் நான் அப்படி அல்ல- வருடத்துக்கு ஒரு முறைதான் விழாவருகிறது.

அதிக லாபம் கிடையாது - என்வயிற்றிற்கு போதுமான அளவு இருந்தால்போதும் என்ற மனப் பக்குவத்துடன்விற்பனை செய்கிறேன். அதுவும் இந்தவிழா சாதாரண விழா அல்ல. தமிழர்களின் வரலாற்று விழா. இதுக்கு கணக்குபார்க் கலாமா? எந்த மத நம்பிக்கைக்கும் சொந்தமான விழா அல்ல தமிழர்திருநாள். அந்த திருநாளில் நாம்விவசாயிகளுக்கு செய்யும் உதவி. அவர்கள் வளர்ச்சிக்குநாம் தான் கரும்பு வாங்கவேண்டும். கரும்பு வாங்கும் விஷயத்தில்கணக்குப் பார்ப்பது சரியா?" என்றுகேள்வி கேட் டான் கடைக்காரன். பாண்டியன் எதுவும் பேசாமல் கடைக்காரர் சொன்ன விலைக்கு கரும்பைவாங்கிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான் தமிழர் திருநாள் என்பதுஇனிப்பு திருநாள் ஆகும். அனை வரும்"கரும்போ கரும்பு" என்று கொண்டாடுவோம் என்று மனதுக்குள் இனிமையாக நினைத் தான் பாண்டியன்.

பகிர்வு

No comments:

Post a Comment