சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 30
மறுபடியும் மடிகெரே வரோம் இனிமே பெங்களூர் தானேங்கறேன். இங்கேர்ந்து ஹாசன் போய்ட்டு கோமதீஸ்வரரை தரிசனம் பண்ணிட்டு பெங்களூர்ங்கறார். ஈஸ்வர்ர்ங்கறேளே பெருமாளா சிவனாங்கறேன். ரெண்டு பேரும் இல்ல. இவர் சமண முனிவர்ங்கறார். ஹாசன் போய் ரூம்ல ரெஸ்ட் எடுத்துண்டு பஸ் ஏறி சிரவண பெல கோல போறோம்.
எனக்கு மலை ஏறறதால மூச்சு வாங்கறது. இவர் பேசறார்.
மழைத் தூறலுக்கு இடையே 2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தை அடைந்தோம். தூரத்திலேருந்தே நமக்கெல்லாம் பப்பு ஷேமா தெரியுமாறு நின்று கொண்டிருக்கும் கோமதீஸ்வரர் தெரிகிறார். ஆனால் அனைத்தையும் துறந்தால் இறை நிலை அடைந்தால் நிர்வாணமும் ஒரு தெய்வீகமென எடுத்து சொல்லி…
இங்குதான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன் துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.
காலை 6.00 மணிக்கே இவ்விடத்திற்கு வந்து சேர்ந்த நாங்கள் நுழைவாயிலைக் கடந்து படிகளை ஏற ஆரம்பித்தபோது முதலில் வேகமாக ஏறினோம். பின்னர் அலுப்பு தெரியவே சீரான, நிதானமான நடையில் நடந்தோம்.
உடன் அதிகமான எண்ணிக்கையில் சமணர்களும், பிற பக்தர்களும் நடந்து வர, எங்களுக்கு உற்சாகம் தோன்றியது. சோர்வடையும் போது ஆங்காங்கே சிறிது நேரம் அமர்ந்து சென்றோம்.
செல்லும் வழியில் ஆங்காங்கே சிறிய கோயில்கள் சன்னதிகளைப் போலக் காணப்பட்டன. அவற்றில் இருந்த தீர்த்தங்கரர்களை வணங்கிச் சென்றோம். மலையின்மீது சென்றுகொண்டிருக்கும்போது அங்கிருந்து கீழேயிருந்த குளத்தைத் தெளிவாகக் கண்டோம். எதிரே இருந்த சந்திரகிரி மலையைப் பார்த்தபோது மிகவும் அழகாக இருந்தது.
சமணப்படுகைகளையும் ஆங்காங்கே கண்டோம். அதில் சிலவற்றில் எழுத்துக்கள் காணப்பட்டன. பாதுகாக்கும் வகையில் அதனை கண்ணாடி போட்டு வைத்திருந்ததைக் கண்டோம்.
மலையின் உச்சிப்பகுதிக்கு வந்தபின்னர் அங்கு கோயில் போன்ற அமைப்பினைக் கண்டோம். சுற்றுச்சுவர், முன்னர் ஒரு மண்டபம், திருச்சுற்று போன்ற அமைப்பு, அதற்கு எதிராக ஒரு மண்டபம் என்ற அமைப்பில் கிட்டத்தட்ட கோயிலின் அமைப்பை ஒத்திருந்தது.
பின்னர் வெளித் திருச்சுற்றினைக் கண்டோம். அங்கிருந்து முதன்முதலாக திகம்பரராகக் (திகம்பரர் – திக் + அம்பரம், திக் – திசை, அம்பரம் – சிலையினைக் கண்டோம். இந்த சிலையின் பெருமையை பின்வருமாறு கூறுகின்றனர்.
மேலைக்கங்க மன்னரின் படைத்தலைவரும், அமைச்சருமான சந்திரராயனால் கி.பி.978-993இல் நிறுவப்பட்டது.
இச்சிலை அருகரான பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்டது .
12 ஆண்டுக்கு ஒரு முறை இச்சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
2012இல் திருவிழா நடைபெற்றுள்ளது. அடுத்து 2025இல் நடக்கவுள்ளது.
சிலைக்கு கீழே அருகில் பெலகோலா என்ற பெரிய வெள்ளைக்குளம் உள்ளது.
1865ல் மைசூர், தலைமை கமிஷனர் திரு.பாபு ரங்கா என்பவர், பெரிய சாரம் கட்டி, சிலையின் சரியான அளவுகளைக் கண்டு பிடித்தார். அவர் கண்ட அளவின்படி சிலையின் உயரம் 57 அடி ஆகும்.
No comments:
Post a Comment