Tamil Nadu Mamis
மாமிகள் என்றழைக்கப் படும் எங்களை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்! லேசான ( தேவையான என்றும் சொல்லலாம்😀)பொல்லாத்தனமும் எங்களுக்கு உண்டு ( for survival!)
தமிழ்நாட்டில் பிராமண சமுதாயத்ததைச் சேர்ந்த நடுத்தர வயது பெண்மணிகள
மாமி என்று அழைக்கப் படுகிறார்கள்.
மாமி என்பது தொன்று தொட்டு வரும் சொல்.
பக்கத்தாத்து மாமி, எதிராத்து மாமி என்றெல்லாம் நாம் நிறைய கேட்டிருக்கிறோம்,
கூப்பிட்டிருக்கிறோம்!
நம் ஊர்களில், ஆங்கிலத்தில் சொல்லுவது போல Ms. X, Ms. Y என்று கூப்பிடுவது
அவ்வளவு சகஜமாக பழக்கத்தில் வரவில்லை.
ஒரு சிறிய தயக்கம் இன்னும் இருக்கிறது.
மரியாதைக் குறைவு என்பது போல் படுகிறது!
இப்பொழுது 20 - 40 வயதினரை அக்கா என்று கூப்பிடுகிறார்கள்.
ஆன்ட்டி என்பது 40 வயதிற்கு மேற்பட்டவருக்குப் பொருந்தும்.
குழந்தைகள் கூட ஆன்ட்டி என்று சகஜமாக கூப்பிடுகிறார்கள்.
மாமி என்று கூப்பிடுவதில்லை😊
இப்பொழுது மாமிகளைப் பற்றி அலசுவோம்.
மாமி என்று அழைக்கப்பட்டால் பழைய காலம் மாதிரி மடிசார் புடவை உடுத்தியவர்கள்
என்று நினத்து விடாதீர்கள் 😅
It is just a respectful term to elderly ladies.
உறவு முறையினால் சல்வார் கமீஸ் போட்டவர்களும் அதில் அடக்கம்.
இப்பொழுது மடிசார் புடவை கட்டின மாமிகள் சற்று குறைவு தான்.
அது அவரவர் சௌகரியம்.
என் மாமியார் அடிக்கடி சொல்லுவார்:
பாந்தமாக, சரியாக்க் கட்டிக் கொண்டால் அந்தக் கட்டோடு சௌகரியத்துக்கு
ஈடு இணையே கிடையாது.
காலை சற்றே அகட்டி பஸ்ஸில் சௌகரியமாக ஏறலாம்.
தற்காலத்து உயர்ந்த கார்களில் லாவகமாக ஏறலாம்.
6 கஜம் புடவையை “ மாம்பழக் கொடுக்கு” (what a name என்று சொல்லுவார்கள்.
அது, மேற்கண்டவற்றுக்கு எப்பொழுதும் சௌகரியம் என்று சொல்ல முடியாது😁
High Car ல் ஏறுவதற்கு நான் நன்றாகவே கஷ்டப் படுகிறேன்😣
சற்றே பழைய காலத்து மாமிகளைப் பற்றி பேசலாம்.
முன்பு சமையலுக்கு தனியாக ஆள் வைத்துக் கொள்ளும் பழக்கம் ரொம்ப கிடையாது.
பெண்கள் வேலைக்குப் போகும் பழக்கம் Full swing ல் வராததால், சமையல் பண்ணுவது
அவர்களுடைய தினசரி வேலை.
(அடியேனும் அந்த category தான் என்று சொல்லவும் வேண்டுமோ?🤣)
குடித்தனம் வைத்த புதிதில் , LPG gas, வந்து விட்டதால் பிழைத்தேன்😀
கரி அடுப்பு, மண்ணெண்ணை ஸ்டவ் மூட்டுவதெல்லாம் நான் கொஞ்சம்
கஷ்டப் பட்டு , முழு மனதுடன் ஈடு படாமல் தான் செய்தேன்!
உண்மையைச் சொல்லி விடுகிறேன்.
எவர்சில்வர் பாத்திரங்கள் varieties வர ஆரம்பித்த புதிது.
அதில் அபரிமிதமான மோகம்!
அம்மா கொடுத்திருந்த வெண்கல உருளி, பித்தளை அடுக்கு, மதுரை புது மண்டபத்தில்
பார்த்து பார்த்து வாங்கின இலுப்பச் சட்டி, சைஸ்வாரியான கற்சட்டிகள், ரசத்துக்கு
ஈயச்செம்பு, தயிர் உறைகுத்த மங்குப் பாத்திரம் எல்லாவற்றையும் எடுத்து
உள்ளே வைத்தேன்.
அப்பொழுது வந்த ஸ்டில் பாத்திரங்களை ஆசையாக வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தேன்.
இத்தனை வருடங்கள் கழித்து திரும்ப ஏன் Traditional vessels க்கு வந்து விட்டாய்
என்று கேட்டு விடாதீரகள்😟
அதன்அருமை பெருமை அப்பொழுது தெரியவில்லை, இப்பொழுது நன்றாகவே மனதில்
உரைக்கிறது என்பதை அப்பட்டமாக ஒத்துக் கொள்ளுகிறேன்.
Life has come a full circle in the kitchen chores and I am happily back to where
I started!
My greatest regret is Amma is no more, to see me cook exactly the way I have seen her cook in my younger days!
Her instructions ( all mamis of my age follow these without fail)
சமையல் ஆரம்பிக்கும் முன்னால் கிருஷ்ணார்ப்பணம் சொல்லி விட்டு ஆரம்பிக்க வேண்டும்.
கற்சட்டியில் குழம்பு கொதி வந்ததும் உடனே அடுப்பை சின்னது பண்ணி விடு.
இல்லாட்டால் சீக்கிரம் வற்றிவிடும். புளி வாசனை போகாது.
கற்சட்டியை இடுக்கியால் இறக்காதே, விரிசல் விட்டுவிடும். நன்றாக, அரை மணி நேரமாவது கழித்து எப்பொழுதும் இரண்டு பக்கமும் துணியைப் பிடித்து கொண்டு தான் இறக்கணும்.
ரசம் சுற்றி பொங்கி வந்ததும் டக்குனு அடுப்பை அணைக்கணும், கொதிக்கக் கூடாது
Mil’s instructions
சமைச்சு முடிச்சது…
No comments:
Post a Comment