Friday, January 14, 2022

கருப்பட்டி_பொங்கல்

கருப்பட்டி_பொங்கல்

பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் மகிழ்ச்சியாக கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்டாடுங்க....

தேவையான பொருட்கள்:
கருப்பட்டி தூள் - 1 கப்
பச்சரிசி - 1 கப்
பால் - 3 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - அரை கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
உலர் திராட்சை - தேவைக்கு

செய்முறை:

*அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

*அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

*மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை குறைவாக வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

*பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

*பாலும் தண்ணீரும் வற்றியவுடன், காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

*மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

*அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

*அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

*எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

*முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து,  கிளறி இறக்கி பரிமாறவும். 

*சுவையான கருப்பட்டி பொங்கல் தயார். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

குறிப்பு:

* கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

* நெய் அதிகம் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.



No comments:

Post a Comment