Saturday, January 22, 2022

சென்னை To பெங்களூரு பகுதி 28

சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 26

மடிகெரேல உள்ளூர் கோட்டைக்கு போறோம்.எனக்கு  நம்ம வேலூர் கோட்டை மாதிர தான் இருக்கு 

இவர்தான் கூகுள் பார்த்துட்டு என்னமோ சொல்றார் 

17ம் நூற்றாண்டின் கடைசியில் முத்துராஜா என்பவரால் முதலில் மண்ணால் இந்த கோட்டை கட்டப் பட்டிருந்தது. பின்னர் திப்பு சுல்தானால் இது ரகசிய சுரங்க பாதைகளுடன் கல்லால் புத்துருவாக்க செய்யப்பட்டது. 

1790 ம் ஆண்டு தொத்தவீர ராஜேந்திரா எனும் அரசர் இந்த கோட்டையை கையகப்படுத்தினார். (அதான் தொத்தலா இருக்கோ?)

1812-14 ம் ஆண்டில் லிங்கராஜேந்திர உடையாரால் இந்த கோட்டையில் திரும்பவும் திருத்தங்கள் செய்யப்பட்டன. இறுதியில் 1824ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் இந்த கோட்டை வந்தது.

இந்த கோட்டையில் ராஜா விஜயராஜேந்திராவின் பெயர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு ஆமை சிற்பமும், ராஜா வீர ராஜாவால் கொல்லப்பட்ட இரண்டு யானைகளின் தத் ரூப சிலைகளும் காணப்படுகின்றன. இக்கோட்டைக்குப்பின் ஒரு வீரம் பொருந்திய கதையும் சொல்லப்படுகிறது.(வேண்டாம் போரடிக்கும்)

இந்த கோட்டையின் முன்புறத்தில் வீரபத்ரர் கோயில் ஒன்று இருந்துள்ளது அதை இடித்து ஒரு கிறித்துவ தேவாலயத்தை 1855ல் ஆங்கிலேயர் கட்டியுள்ளனர்.(வழக்கமானதுதானே)

ஐரோப்பிய காத்திக் பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த செயிண்ட் மார்க் தேவாலயம் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட ஜன்னல் கண்ணாடிகளை கொண்டுள்ளது. இரண்டு முறை புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலயம் 1933ல் ஒரு கடிகார கோபுரத்தையும் கமிஷனரின் கார் நிறுத்துவதற்கான விதானத்தையும் பெற்றது. (ஓ நம்ம சந்தர பாபு மாடிக்கே கார் வர மாதிரி வீடு கட்னாராமே அத மாதிரி)

110 அடி நீள பரப்பில் இரண்டு அடுக்குகளை கொண்டதாக இந்த கோட்டை அமைந்துள்ளது.

இதன் வரலாற்று பின்னணி காரணமாக இந்த கோட்டை ஒரு அருங்காட்சியகமாக மாறி தற்சமயம் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இதன் உள்ளே பல வரலாற்று சின்னங்கள் உள்ளன. பீல்டு மார்ஷல் கரியப்பாவுக்கென்று(எனக்கு படையப்பாதான் தெரியும்) ஒரு பிரத்யேக தனி பகுதியும் உள்ளது. 

இந்த கோட்டைப்பகுதையை ஒட்டி மாவட்ட சிறை வளாகம், கோட்டே மஹா கணபதி கோயில் மற்றும் மஹாத்மா காந்தி பொது நூலகம் போன்றவை உள்ளன.

இந்த கோட்டே மஹா கணபதி கோயில் கூர்க் பகுதியின் முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். மடிகேரி தசரா உற்சவத்தின்போது இதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

கோட்டையைப்பார்ததுட்டு உடுப்பி ஓட்டல்ல சாப்பாடு சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கறோம். தல காவேரி நாளை விடிகாலம் போலாம்னும் விண்டோ ஷாப்பிங் பாத்துண்டே ஊர் சுத்தலாம்கறார். 

மேற்கு தொடர்ச்சி மலையின் பிரம்மகிரி மலைப்பகுதியில் மலை ஏற விரும்புகிறவர்களுக்கான ஒற்றையடிப்பாதைகள் நெறைய இருக்கு எனக்கு முட்டிவலி..இவருக்கு குதிகால் வலி. ஓட்டல் மாடிப்படியே ஏற முடியல. . அதனால மலை ஏறறவாள  வேடிக்கை பார்க்க போறோம். 

புஷ்பகிரி மலைகள், கொட்டேபெட்டா, இக்குதப்பா, நிஷானி மோட்டே மற்றும் தடியான்டமோல்னு நெறைய இடங்களிலும் மலை ஏற்றப் பாதைகள் இருக்கு. . இதெல்லாம் தடியான வாலிப பசங்களுக்கு எக்குதப்பா இக்குதப்பால ஏறி மாட்டிக்க போறோம்கறேன். 

சாகச பொழுது போக்குகள் மற்றும் விளையாட்டு பொழுது போக்குகளுக்கும் கொடகு பிரதேசம் ஏராளமான வாய்ப்புகளை வழங்கறதாம். . . மலை ஏற்றம், தவிர கோல்ப், தூண்டில் மீன் பிடித்தல், பரிசல் சவாரின்னு பல வெளிப்புற பொழுது போக்கு அம்சங்கள் இருக்காம்.பொண்ணு மாப்ளையை போய்ட்டு வர சொல்லிட்டு நாம க்ருஷ்ணா ராமான்னு கோயிலோட நிறுத்திப்போம்கறேன்..

மறுநாள் கார்த்தால தல காவேரிக்கு முதல்  மினி பஸ் 6.00 மணிக்குன்னு தெரிஞ்சிண்டு தூங்க போறோம். தல அஜித் தல காவேரில சண்டை போடறா மாதிரியும் இவர் மலரே குறிஞ்சி மலரேன்னு சிவாஜி சார் மாதிரி மஞ்சுளாவோட டூயட் பாடறா மாதிரி கனா வரது. கொட்டே பெட்டா மலைமேல இவர் திடீர்னு மஞ்சுளாவ கட்டி அணைக்கிறார்..முழிப்பு கொட்ட கொட்ட முழிச்சுண்டு இவர பார்க்கறேன்.



No comments:

Post a Comment