சொர்ணத்து மனை
குருகுல வழக்கப்படி சங்கரர் சன்னியாசி ஆனவுடன் யாசகத்திற்குப் புறப்பட்டார்.
அவர் முதல் முதல் யாசித்த வீடு படு ஏழை வீடு. “பவதி பிட்சாந்தேஹி’ என குரல் கொடுத்த பாலகனுக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண், தன்னிடமிருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். (அவள் இல்லத்தின் பின்புறம் நெல்லிமரம் ஒன்று இருந்தது.)
அவள் ஏழ்மையை உணர்ந்த பாலகன் அவளுக்கு உதவ விரும்பி, மகாலட்சு மியை நோக்கி மனம் உருகப் பாடினார்.
என்ன அதிசயம்! அவள் வீட்டு நெல்லிமரம் தங்கமழையைப் பெய்வித்தது. வீடு முழுவதும் தங்கக் கனி கள் குவிந்தன. அப்பாடல் தான் கனகதாரா ஸ்தோத் திரம்.
காலடியில் இருக்கும் அந்த தங்க மழை பெய்த வீடு சொர்ணத்து மனை என அழைக்கப்பட்டு இன்றும் இருக்கிறது.
தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த ‘சொர்ணத்து மனை’ முதலில் ஒரு சாதாரண ஒட்டுவீடாகத் தான் இருந்தது.
தற்போது இந்த வீடானது ‘சொர்ணத்து மனை’ பரம்பரையில் வந்தவர்களால் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.
மேலே உள்ள புகைப்படத்தில் நாம் பார்க்கும் இந்த வீடானது 250 ஆண்டுகள் பழமையானது. .
அன்னையின் அருளுக்கும் பால சன்னியாசியாம் சங்கரனின் கருணைக்கும் சாட்சியானது இந்த வீடு…!
இச்சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனக தாரா யாகம் செய்கின்றனர்.
சங்கரர் முக்தியடைந்தது 32-ஆம் வயதில். எனவே அன்றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1,008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்வார்கள். தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், ரட்சைகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.
No comments:
Post a Comment