Friday, January 14, 2022

மனதோடுமலர்கள்_52

மனதோடுமலர்கள்_52

அத்யாயம் 52

கதையாசிரியர்: பாஸ்கர் சத்யா 

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் எதேச்சையாக கோவிலின் வாசலுக்கு வந்த நீரஜா ஜனரஞ்சகமான அந்த உஸ்மான் சாலையை சற்று வேடிக்கை பார்க்கிறாள்.  அங்கிருந்த பூக்காரி இவள் யாரையோ தேடுகிறாள் என நினைத்து,

'யாரையம்மா தேடுறீங்க.  அந்த பெரியம்மாவையா?  அவங்கள ஆட்டோல அழைச்சுண்டு போயிடுச்சம்மா அந்த பொண்ணு.  பாவம் மார அடைக்குதுன்னு இந்த படிலதான் உட்கார்ந்திருந்துச்சி'.

சற்று அவளுக்கு தெரிந்த விவரத்தை வைத்து, அண்ணுவை தேடினாள்.  பிறகு ஆட்டோவில் சென்றது அண்ணுவே என்ற தீர்மானத்திற்கு வந்தாள்.

பதைபதைத்து மாலதியை நோக்கி ஓடி வருகிறாள்.  மாலதி அவள் அப்பா அண்ணாவுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்.

'மாலதி, உன் மாமியாரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போயிருக்கா ராஜி அக்கா.  ஏதோ மாரடைப்பாம்.'

இடம் பொருள் பார்க்காமல் நீரஜா தற்செயலாக அவளது 'மாமியார்' என்று அண்ணுவை கூறிவிட்டாள்.

காதில் வாங்கியதுதான் தாமசம்.  கையில் இருந்த தட்டை அப்படியே இறக்கி வைத்து புடவைத் தலைப்பை இடுப்பில் சொருகிக் கொண்டே வாசலுக்கு ஓடினாள்.  கூடவே அவளை பின் தொடர்ந்து நீரஜாவும்.

'மாமியாரா?  என்ன நடக்கறது அப்பா இங்க?'. அப்பாவை நோக்கி சத்தம் போட்டான் ஸ்ரீதர்.

'ஏய்.  இருடா சித்த.  எனக்கே புரியல.  மாப்பிள்ளையாத்துல யாராவது கேட்டுட போறா?  கொஞ்சம் அமைதியா இரு.  இப்ப வேற அவா நம்மள டின்னருக்கு கூப்பிடுவா.  என்ன பண்றதுன்னே எனக்கு புரியலையே!'

'ராஜு நர்ஸிங் ஹோம்னா சொன்னா பூக்காரி?'

ஆட்டோவை கூப்பிட்டாள். 

இரண்டு நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்தாள்.

அங்கு ராஜிக்கு முன் புழியப் புழிய அழுது கொண்டிருந்தான் சந்துரு.  ராஜி அவனை தேற்றிக் கொண்டிருந்தாள். 

'ஏய்.  ஃபூல்.  நான் இருக்கேனில்ல.  பயப்படாதே.  ஒண்ணுமில்ல அம்மாக்கு.'

'அக்காஆஆஆஆ'. பதறிக் கொண்டே மாலதி ராஜியை கட்டிக் கொண்டாள்.  'கூல் கூல்' அவள் முதுகை தடவிக் கொடுத்தாள்.  

'நீ ஏன் இங்கே வந்த?  உன்கிட்ட யார் சொன்னா?  மாப்பிள்ளை ஆத்துக்காராளுக் கெல்லாம் தெரியாதோண்ணோ?'

'டாக்டர் ராஜேஸ்வரி நீங்களா?  உங்கள டாக்டர் கீர்த்திவாசன் உள்ள கூப்பிடறார்.'

'ஏய் நீங்க ரெண்டு பேரும் நான் திரும்பிவரைக்கும் அழாம இந்த சேர்ல உட்கார்ந்திருங்கோ.  நீராஜா, யூ டேக் கேர் ஆஃப் தெம் டில் ஐ கம்'

டாக்டர் கீர்த்திவாசன் ராஜியோடு MBBS படித்தவர்.  நர்ஸிங் ஹோம் வந்த பிறகுதான் ராஜிக்கே தெரியும் டாக்டர் கீர்த்திவாசன் இங்கு பணிபுரிகிறார் என்று.

'ராஜி, பேஷண்ட் இஸ் ஓகே க்ளினிகலி.  கொஞ்சம் அனிமிக்.  ஓவர் டென்ஷன். விரதமெல்லாம் அடிக்கடி இருப்பாங்க போல இருக்கு.  நெஞ்சுல கபமும் இருக்கு.  ஸம் கேஸ்ட்ரோ இஷ்யூஸ்.  ஷி நீட்ஸ் கம்ப்ளீட் ரெஸ்ட் ஃபார் எ வீக் அட்லீஸ்ட்'

'நாளைக்கு ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணலாம்.  இப்ப ட்ரிப்ஸ் போயிண்டிருக்கு.  நாளைக்கு கேஸ்ட்ரோலாஜிஸ்ட் ஒபினியன் வாங்கிடறேன்.  ஒரு ஃபிஸியோ தெரபிஸ்ட கூப்பிட்டு செஸ்ட் டேப்பிங் பண்ண சொல்றேன்.  ப்ளட் டெஸ்டும் எடுத்துடுவோம். மாஸ்க் போட்டிருக்கேன்.  கொஞ்ச நேரத்துக்கு ஆக்ஸிஜன் ஓடட்டும்.  லெட் ஹர் ப்ரீத் சம் ஃபரெஷ் ஏர்.  நாட் நீடட், பட் ஸ்டில் ஃபார் தி சேக் ஆஃப் கம்ஃபர்ட்.'

பிறகு வேறு டாப்பிக் சென்றார்.

'ஹௌ ஆர் யூ ராஜி.  எப்படி MD ஸ்டடிஸ் போயிகிட்டு இருக்கு?'

'நிறைய பேசலாம் கீர்த்தி.  ஆனா இப்ப எனக்கு இந்த அம்மாவோட பாசக்கார புள்ளைய சமாதானப் படுத்தற முக்கியமான வேலை இருக்கு.  அவனை உள்ள கூப்பிட்டிண்டு வரேன்.  நீயே எல்லாத்தையும் சொல்லிடு.  நான் சொன்னா அவனை சமாதானப் படுத்தறதுக்காக சொல்றேன்னு நெனெச்சுப்பான்.  ஹி இஸ் மை ப்ரதர் லைக்.  வெரி குட் பாய்.'

சிரித்துக் கொண்டே 'ஓகே.  கூப்பிடச் சொல்லட்டுமா?'

'வேணாம் வேணாம்.  ரெண்டு அடி போட்டு நானே அழச்சிண்டு வரேன்.  ஏற்கனவே அஞ்சு நிமிஷத்துல என்னோட ஒரு கர்சீஃபை நனச்சுட்டான்.'

வாசலுக்கு வந்தாள்.  எல்லாவற்றையும் பறி கொடுத்ததைப் போல ஒரு சேரில் காலை நீட்டி, தலையை சாய்த்து, காலை மேக்ஸிமம் நீட்டி, விட்டால் விழுந்துவிடும் அளவுக்கு ச்சேரின் எட்ஜில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

ஒரு ஓரத்தில் மாலதியை தேற்றிக் கொண்டிருந்தாள் நீரஜா.

'சந்துரு.  என்ன இது நேர உட்கார்.  அம்மாவுக்கு ஒண்ணுமில்லையாம்.  ஏதோ கேஸ்ட்ரிக் ப்ராப்ளமாம்.  எனிவே டாக்டர் வில் எக்ஸ்ப்ளைன் டு யூ.'

ராஜியைப் பார்த்து விட்டு மாலதி ஓடி வந்தாள்.  'என்னடி.  உன் மாமியாருக்கு ஒண்ணுமில்ல.  சந்துருவ கல்யாணம் பண்ணிண்டு உன் படுத்தல்ல ஏதாவது ஆனாத்தான் உண்டு'

'போங்கோக்கா.  இப்ப கூட ஜோக் தானா?'

'சரி.  ரெண்டு பேரும் உள்ள வாங்கோ.  டாக்டர் கிட்ட பேசலாம்.'

'அக்கா நானு?'

'நீ மட்டும் என்ன பாவம் பண்ணின.  நீயும் வா.'

டாக்டர் கீர்த்தி வாசன் அவர்களைப் பார்த்து சிரித்து வரவேற்றார்.  ராஜி அவருக்கு எதிர் ச்சேரில் அமர்ந்தாள்.  மூவரும் நின்றார்கள்.

'இவங்க யாரு?'

டாக்டர் கேட்டவுடன் ஒரு வெட்கப் பார்வை. 

'சொல்லேண்டா?' 

'இது ராஜி'

மீண்டும் கூச்சம் சந்துருவிடமிருந்து.

'போத் ஆஃப் தெம் லவ் ஈச் அதர்.  குட் பேர்.  இவங்க லவ் ஸ்டோரி வில் பி இன்டரஸ்டிங்.  வென் வீ மீட் நெக்ஸ்ட், ஷல் டெல் யூ.  நீ டயானா பின்னாடியே அலஞ்சிண்டிருந்தையே, அத விட இன்டரஸ்டிங்.'

'நீ மட்டும் மாறவே இல்ல ராஜி.  அதே ஸ்மைல், அதே குறும்பு.'

'சரி சரி, கீர்த்தி.  இவன் அம்மாவுக்கு என்ன சொல்லு.'

'சாரி.  லவ்வ பத்தி பேசினாலே எல்லாத்தையும் மறந்துடறோம்.  எஸ், சந்துரு.  யுவர் மதர் இஸ் ஃபைன்.  அப்ஸலூட்லி நார்மல்'

எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்தார்.  

அப்போது ஒரு நர்ஸ் வந்தாள்.  'அந்த பாட்டி அம்மா எப்போதும் அனத்திகிட்டே இருக்காங்க டாக்டர்.  மாஸ்க எடுக்க எடுக்க முயற்சிக்கறாங்க.  ஏதோ ராஜி, சந்தா, மால், மால்னு மாத்தி மாத்தி புலம்பிகிட்டே இருக்காங்க.'

'ராஜி, ஷல் வீ கோ அண்ட் ஸி ஹர் நௌ?'

வார்டுக்கு வெளியே மூவரையும் நிற்க வைத்து விட்டு, டாக்டர் கீர்த்திவாசன் ராஜியை மட்டும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

'என்ன பெரியம்மா, எப்படி இருக்கீங்க.  யார் வந்திருக்கா பாருங்க.

'ராஜி, ராஜி' என்று கையை தூக்கினாள்.  ராஜியும் அவள் கையை பற்றினாள்.

'அண்ணு, எப்படிடா இருக்கே. ஒண்ணுமில்லடா உனக்கு.  நாளைக்கு ஆத்துக்கு போயிடலாம் என்ன.'

'ஓ, ராஜி, பெரியவங்க கூட ஒன்னால எப்படி ஃபரெண்ட் ஆக்கிக்க முடியறது?  ஐ ரெஃபர் யுவர் ஸ்லேங் லாங்க்வேஜ் வித் ஹர்'.

'ஷி இஸ் ஸோ கைண்ட் டு எவ்வரிபடி கீர்த்தி.' சொல்லும்போதே இரண்டு சொட்டு கண்ணீர்.

'ஏய்.  யூ ஆர் எ டாக்டர்.'

'பட், ஷி இஸ் எவ்வரிதிங்க் டு மீ.  ப்ளீஸ் டேக் கேர்.'

'நீட்லெஸ் டு ஸே.  ஐ ஷல்'

'சந்தாகிட்ட சொல்லிட்டியா.' மாஸ்கை பாதியாக தானாக திறந்து கேட்டாள்.

'நர்ஸ் ரிமூவ் ஆக்‌ஸிஜன் ஃபார் எ ஒய்ல்'

'அவன் அழுதுண்டிருக்கான், ஒனக்கு என்னவோ ஏதோண்ணு.  கூப்பிடட்டுமா?  மாலதியும் வந்திருக்கா?'

வாயெல்லாம் பல் அண்ணுவுக்கு.

வந்தார்கள் இருவர் மட்டும்.  நீரஜா அனுமதிக்கப் படவில்லை.  இருவர் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர். பக்கத்தில கூப்பிட்டாள்.  இருவரையும் வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தாள்.  அவள் கண்களிலும் கண்ணீர்.

'நீ ஏன் இங்க வந்த.  நிச்சயதார்த்தம் முடிஞ்சு ஸ்ரீமதி ஆத்துல சாப்பாடுன்னாளே.  நீ இங்க வந்திருக்கவே கூடாது.  அவாள்லாம் என்ன நெனச்சுப்பா?'

'அம்மா, நீங்க தான் எனக்கு முக்கியம்.  அவாள்லாம் எனக்கு வேண்டாம்.'

'அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.  இன்னிக்கு திருச்சி போகவேண்டாம்?'

'இல்லம்மா.  நீங்க ஆத்துக்கு வந்ததுக்கு அப்புறம் தான்'

டாக்டர் கீர்த்தி, 'இட் இஸ் கோயிங் லைக் எ பிக் கான்வர்ஸேஷன்.  பேஷண்ட் நீட்ஸ் ரெஸ்ட்.  ஐ கேனாட் அலௌ எனி ஃபர்தர்.'

'கேட்டியா மாலதி.  அம்மா நீட்ஸ் ரெஸ்ட்.  ப்ளீஸ் கோ'

'அம்மா நாங்க வரோம்மா'. திரும்பத் திரும்ப அவளை பார்த்துக் கொண்டே மாலதி வார்டை விட்டு வெளியேறினாள்.

மீண்டும் மாஸ்க் பொருத்தப் பட்டது.

'ஒரு ஹாஃப் டேப்லட் காம்ப்போஸ் வேணா கொடுக்கட்டுமா ராஜி.'

'நானே சொல்லணும்னு நெனச்சேன்.  தேங்க் காட், யூ மென்ஷண்ட் இட்.'

அவர்களும் வெளியே வந்தார்கள்.

தொடரும்

No comments:

Post a Comment