Friday, January 14, 2022

சைக்கிள் பாடங்கள்

 "சைக்கிள் பாடங்கள்"

--------------------

சைக்கிள் வாடகைக்கு எடுக்கப்பட்ட நேரம் மாலை 5.30.மணி.

கடை உரிமையாளர் 6.00 மணிக்கு கடையைப்பூட்டுவார்.

அரைகுறைப்பழக்கம் உள்ள நானும் அத்தை மகன் பாரதியும் டபுள்ஸ்.

பனிக்கால மாலை 6.00 மணிக்கு இருட்டி விட்டது.

நேரமானதாலும், டபுள்ஸ் தடுமாற்றத்தினாலும்,எதிரில் வந்த பெண்மணி மேல் சைக்கிள் மோதி,அவர் கைதூக்கு சட்டி கீழே விழுந்து புளியோதரை தெரு முழுதும் தெறிப்பு. சுதாரித்த என்னைப்பிடித்து நிறுத்தியது ஒரு போலீஸ்காரர் இரும்புக்கரம்.

பாரதி சிட்டாகப் பறந்து விட்டான்.

மிரட்டிய சிவப்புத்தொப்பி ,

என்னை கச்சேரிக்கு வந்து ஐயாவைப் பார்க்க சொல்லி மிரட்டியது.

கலவரமான நான் கச்சேரி என்ற வார்த்தை புரியாது 

'பே'வென்று முழித்துக் கொண்டிருந்த வேளை ,பாரதி தன் அண்ணாவோடு வந்தான்.

புளியோதரையை இழந்த பெண் மணிக்கு இழப்பீடு தொகை தர வேண்டும் என சமரசம்.

ஆனால் பெண்மணியோ ,பாவம் ;சின்னப்பையன்,பரவாயில்லை என மறுதலிப்பு.

அச்சிறுவயதிலேயே,விளையாட்டுப்புத்தியின் விபரீதம்,

அதிகாரத்தினால் ஏற்பட்ட பயம்,கருணை,மன்னிப்பு சமயத்தில் உறவுகளின்  உதவி என வாழ்க்கை ஊட்டிய பாடங்கள்-

"சைக்கிள் பயிற்சி தந்த பாடங்கள்"

1960களில் சைக்கிள் உரிமையாளர்கள் அந்தந்தநகராட்சிக்கு ஆண்டு வரி கட்டவேண்டும்.நகராட்சி ஊழியர்களிமிருந்து தப்ப எந்தெந்த வழிகளில் சுற்றி கல்லூரியை அடைந்தேன் என்பதை எண்ணி ப்பார்க்கிறேன்

No comments:

Post a Comment