Tuesday, January 4, 2022

ஜெய்_ஆஞ்சநேயா

 #ஜெய்_ஆஞ்சநேயா

இன்று காலை ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிருந்தேன்!! எனக்கு தெரியாது இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி என்று!! நேற்று வேற சனிக்கிழமை அதனால சுத்தமா நினைவு இல்லை!!

நானும் யோசித்தேன் என்னடா வழக்கத்தவிட நம்ம பார்ட்னர் (அதான் ஆஞ்சு தான்) ஜெகஜோதியா இருக்காரேன்னு!! பிறகுதான் தெரியவந்தது இன்னைக்கு பார்ட்னருக்கு பிறந்தநாள்ன்னு!! ஐயர் பிஸியாக இருந்தார்!! ஒரு தந்தை தனது சின்ன வயது மகனுடன் அர்ச்சனைக்கு வந்திருந்தார்!!!

இந்த நேரத்தில் கோவிலுக்கு  முன்னால்  ஒரு ஆள் தீடிரென்று இரண்டு டேபிளை விரித்து அதன்மேல் துளசி மாலைகளை அடுக்க தொடங்கினார்!!! வாசலை பகுதி மறைத்தவாரே அவர் டேபிளை போட்டிருந்ததை ஐயர் கவனித்து வெளியே வந்தார்!! 60 வயதை கடந்த மனிதராகதான் எனக்கு தெரிந்தார்!!

ஐயர் : ஐயா டேபிளை கொஞ்சம் தள்ளி போடுங்கோ!! இன்னைக்கு ஆட்கள் அதிகமாக வருவா!!

கடைக்காரர்: இனி எங்க தள்ளிபோடுறது!! இங்கதான் போடுவேன்!!

ஐயர் : நான் சொல்லவேண்டியத சொல்லியாச்சு!! EO வந்து கேட்டா நீங்க பாத்துகிடுங்க!!

இதை சொல்லிவிட்டு அவர் வந்திருந்த சிறுவனின் குலம் கோத்திரம் நட்சத்திரம் என்று அர்ச்சனையை தொடங்கி விட்டார்!! எவ்விதமான சலனமும் இல்லாமல் அவர் தனது வேலையை, பணியை தொடங்கிவிட்டார்!!

எனது சிந்தனை ஓடத் தொடங்கியது!!

//இந்த ஐயர் அவனிடம் சண்டை போட்டிருக்கலாம்!! ஏன் அவரும் அந்த கோவிலின் ஊழியர்தானே!!! வருகின்ற பக்தர்களுக்கு செளகரியம் செய்ய வேண்டியது அவரது பணியும் அல்லவா!!அவரது கோரிக்கையும் ஞாயமாகவே இருந்தது  பிறகு ஏன் இவர் கோபிக்கவில்லை!!//

எல்லாம் முடிந்து ஐயரிடம் கேட்டேன் எனது சந்தேகத்தை!!

ஐயர் : இல்ல தம்பி சண்டை போடலாம்!!  ஆனா நான் இறைவனுக்கு அருகில் நின்று தொண்டு செய்றவன்!! நீங்களும் அந்த குழந்தையும் அல்லது இங்கு வர்ற பக்தர்களும் நான் சண்டைபோடுறத பார்த்தா நல்லாவாயிருக்கும்!! அதுவும் இல்லை நான் சண்டைபோட்டு என்னோட மூடு அவுட்டானா,, என்னை நம்பி அர்ச்சனை பண்ண வந்தவங்களுக்கு சரியாக அர்ச்சனை கூட பண்ண முடியாம போயிடும்!! எனக்கும் நிம்மதி போயிரும் வர்றவங்களுக்கும் நிம்மதி போயிரும்!! அதனால தான் பொறுமையா இருக்கேன்!! 

நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தேன்!!

No comments:

Post a Comment