ரெட்ரோ
அந்தக் காலத்தில் மிக மிக பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட இரண்டு விஷயங்களில் ஒன்று நம் புகைப்படங்கள் குறிப்பாக அத்தனை வீடுகளிலும் ஒரு மரச்சட்டம் அடித்துக வரிசையாக கிட்டத்தட்ட ஒரு ஸ்டூடியோ போல போட்டோக்கள் அலங்கரிக்கும் முக்கியமாக தம்பதிகள் போட்டோவும் மற்றும் குழந்தைகள் தனித்தனியாக இருக்கும் போட்டோவும் கண்டிப்பாக இருக்கும்
அதற்கு அடுத்த இடத்தை பிடிப்பது இந்த கடிதங்கள் தான் ஆம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மூலையில் ஒரு நீண்ட கம்பியில் வருடக் கணக்காய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அவை கடிதங்கள் அல்ல
ஏகப்பட்ட எண்ணக் குவியல்கள் அதில்தான் எத்தனை எத்தனை சந்தோஷம் சோகம் கோபம் வெறுப்பு சண்டை சந்தேகம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் அதுவும் சில வீடுகளில் போஸ்ட் கார்டுகளுக்கு தனி தம்பியும் இன்லேண்ட் லெட்டர் காக தனிகம்பியும் இருக்கும்
பழைய டைரியை புரட்டும்போது நம் மனதில் என்னென்ன மாற்றங்கள் உருவாகும் அதே போலத்தான் இந்த கடிதங்களை என்றாவது ஒருநாள் நிதானமாகப் படிக்கையில் மனதோரம் ஒரு மகிழ்ச்சியோ அல்லது அந்த நிகழ்வோ ஞாபகத்திற்கு வரலாம்
தொலைபேசி வருவதற்கு முன்பு நாம் பேசப் பேச அதுவாகவே எழுதிக் கொள்ளும் மொபைல் தொலைபேசி வந்தாலும் நம்முடைய சொந்த கையெழுத்தில் எழுதிய மடல்களை பார்க்கையில் கண்டிப்பாக அதிகபட்ச மகிழ்ச்சி தான் கிடைக்கும்
எத்தனை தூரத்தில் இருந்தாலும் நான்கு ஓரங்களிலும் மஞ்சள் தடவிய கார்டை பார்த்தாலே மங்களகரம் என விளங்கும்.
மே மாத இறுதியில் நம் சிறுவர்கள் அனைவரும் வழிமேல் விழி வைத்து காத்திருந்த ஒருவரை துரத்தினால் என்றால் அவர் போஸ்ட் மேன் தான்
அவர் தான் எங்களுடைய பள்ளி தேர்ச்சி முடிவை அறிவிக்கும் அந்த போஸ்ட் கார்டை சுமந்து வருபவர் நான்கு தெருவிற்கு முன்னே முன்பே நம்முடைய முடிவை தெரிந்து கொள்வதில் அத்தனை இன்பம்.
SSC
RRB
TNPSC
BSRB
போன்ற அத்தனை போட்டித் தேர்வுகளுக்கும் நம் சுய விலாசம் இட்ட கார்டுகள் தான் வரும்
அடுத்தபடியாக குறைந்த செலவிலேயே அதிகப்படியான விஷயங்களை சுமந்து வந்தது இன்லேண்ட் லெட்டர் கள்தான் ஆம் அதில் அட்ரஸ் எழுதும் இடத்தை தவிர
உள்ளே வெளியே மேலே கீழே இடப்புறம் வலப்புறம் என அஷ்ட திக்குகளிலும் நம் எண்ணங்களை வாரியிறைத்து எழுதுவோம்
குறிப்பாக கல்யாணம் ஆன புதிதில் மருமகள் தன் தாய் வீட்டிற்கு இன்லேண்ட் லெட்டரில் தான் தான் மாய்ந்து மாய்ந்து எழுதுவாள்.
மூன்றாவதாக இவர் எந்த நேரத்தில் வந்தாலும் யார் வீட்டிற்கு சென்றாலும் இவருக்கு உச்சக்கட்ட கவனிப்பு அவர்தான் தந்தி கொண்டு வருபவர் அவர் முக்கால்வாசி முறை அர்த்தஜாமத்தில் அல்லது விடியற் காலையிலோ வருவார் பிறப்பு இறப்பு இரண்டுமே இவர் கையில் இருந்ததால் இவர் ஒரு கடவுள் கூட நான்காவதாகஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டும் அதாவது மாதத்தின் முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு மட்டும் பணக்காரராக மாறிவிடும் அதிசயம் இந்த போஸ்ட்மேனுக்கு மட்டுமே நிகழும் ஆம் மற்றவர்களின் பணப் பரிமாற்றத்திற்கு மற்றும் மன பரிமாற்றத்திற்கு உறுதியாக இருந்ததுஇந்த மணி ஆர்டர் தான் இன்று எத்தனையோ போன்பே கூகுள் பே போன்றவை வந்தாலும் ஒரு நொடிக்குள் பணத்தை மாற்றம் செய்தாலும் அதை எதிர்பார்த்து இருந்த ஏழை மக்களின் தன்னிகரில்லா தலைவன் இந்த மணி ஆர்டர் தான்
எனவே
ஜனனம்
காதுகுத்து
மொட்டை அடித்தல்
பூணல் கல்யாணம்
பருவம் எய்துதல்
வேலைக்கு விண்ணப்பம் வேலை சேருவதற்கான உத்தரவு
நிச்சயதார்த்தம்
திருமணம்
தலை தீபாவளி
தலை பொங்கல்
கரு உருவான நாள்
வளைகாப்பு
பெயர் சூட்டுதல்
இப்படி எண்ணற்ற மனித வாழ்க்கையின் சந்தோஷங்களை சுமந்து சென்று அனைவரிடமும் சமர்ப்பித்த
நாம் மறந்துவிட்ட அஞ்சல் துறைக்கு என் பணிவான நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
No comments:
Post a Comment