ஒடியல் மாவு
இந்தியாவிலும் இலங்கையிலும் வெப்பம் நிறைந்த பகுதிகளில் அதிக அளவில் உண்ணப்படும் ஒரு உணவு பனங்கிழங்கு.
பனங்கிழங்கை தண்ணீர் விட்டு அவித்து பின்னர் மாவாக்கிப் புட்டு, கூழ் உள்ளிட்ட உணவு வகைகளைச் செய்யலாம்.மேலும் அவித்த கிழங்கை வெயிலில் உலர்த்திப் பெறப்படும் பொருளை "புழுக்கொடியல்" என்று தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் பயன்படுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் 'கொடியல்' என்று அழைக்கப்படுவது, ஈழத்தில் 'ஒடியல்' என்று அழைக்கப்படுகிறது. ஒடியல்கூழ், ஒடியல் புட்டு ஆகியவை ஈழ மக்களின் மிக விருப்பமான உணவுகளாகும்.
பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக் கிண்டி எடுத்துப் பயன்படுத்துவர்.
இதை பல வகைகளில் உண்ணலாம். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.
பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச் சிக்கலை தீர்க்கக் கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும்.
பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும்.
பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இத்தனை நாட்கள் பனங்கிழங்கினை விரும்பி நாம் சாப்பிட்டு வந்திருந்தாலும், இனி நாம் அதன் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களை தெரிந்துக் கொண்டு உண்டு மகிழ்வோம்.
No comments:
Post a Comment