இதுவல்லவோ பக்தி 🌷🌷🌷🌷
சியாமளா மாமி தினம் பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு தன் வீட்டில் பூத்திருக்கும் பூக்களைத் தொடுத்து மாலையாக கொடுப்பாள்..அதில் ஆத்ம திருப்தி அவருக்கு..அன்று பூ கட்டியாகி விட்டது..தலை சுற்றல் போல இருந்தது..எழுந்திருக்க முடியவில்லை..ஆனால் மனம் முழுவதும் அந்த பூமாலை அம்பாளுக்கு போய் சேர வேண்டும் என்ற எண்ணம் தான்🙏🏿🌹🙏🏿
சரி என்று மெதுவாக எழுந்து கிளம்பினால் "அம்மா..முடியலன்னா ஒரு நாள் கொடுக்காட்டா என்னம்மா? ரெஸ்ட் எடுத்துக் கோ.." இது மகன்..அப்புறம் அம்மா முடியலன்னா டாக்டர் கிட்ட நான்தான் கூட்டிட்டு போகணும்....ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க"இது மருமகள்.. இவர்களை மீறி எப்படி போவது...வயதாகி விட்டதால் அப்பப்போ உடம்பு படுத்துகிறதே..""அம்மா தாயே..இன்னிக்கு நான் கட்டின மாலை உனக்கு போட எனக்கு கொடுத்து வைக் கலை"வருத்தப்பட்டுக்கொண்டே ரூமுக்கு சென்ற சியாமளா மாமியை "அம்மா....வாசலில் ஒரு குரல் அழைத்தது.சென்று பார்த்தால் சின்னப்பெண் நின்றிருந்தாள்..🌷🌷🌷
என்னம்மா என்று கேட்டதும் " கோவிலுக்கு போனேன்..வாசலில் பூக்கடை ஏதும் இல்லை... பக்கத்து கடைக்காரர் கொஞ்ச தூரம் போனால் பூக்கடை இருக்குன்னார்..ஆனா எதுவுமே இல்லை..அதான் உங்களுக்கு தெரியுமா?கேட்ட பெண்ணிடம் உள்ளே இருந்து "பூக்கடை இங்க இல்லை..அத்தை நீங்க உள்ளே வாங்க "என்றாள் மருமகள்..🌷🌷
உள்ளே சென்ற சியாமளா மாமி க்கு சட்டென்று தான் கட்டிய மாலை நினைவுக்கு வரவே ஓடிப் போய் எடுத்து வந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து" இந்தாம்மா..இந்த மாலையை அம்பாளுக்கு குடு என்றாள்..🌷🌷
சந்தோஷமாக அந்த பெண்ணும்" இன்னிக்கு என் அம்மாவோட பிறந்த நாள்..அம்மா ஊர்ல இருக்காங்க..அதான் அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணிட்டு போலாம்னு வந்தேன்.. எவ்வளவு பணம் தர வேண்டும் ?என்று கேட்டாள்🌷🌷🌷
பணம் வேண்டாம் என்றதும் அந்த பெண் வாங்கியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க என்ன செய்ய என்று தெரியவில்லை சியாமளா மாமிக்கு..நீ போய் மாலையை கொடுத்து அர்ச்சனை பண்ணுமா..நேரம் ஆயிடுத்து..கிளம்புமா என்றாள்🌷🌷
சிறிது நேரத்தில் அந்த பெண் மறுபடி வந்து "அம்மா...நான் நீங்க கொடுத்த மாலையை அம்பாளுக்கு போடச் சொல்லி அர்ச்சனை பண்ணிட்டேன்...திருப்தியா இருந்தது..மாலைக்கு எவ்வளவு பணம் தரணும் என்று கேட்டதும் " தினமும் அம்பாளுக்கு பூ தொடுத்து நான் கொடுப்பேன்..இன்னிக்கு உடம்பு முடியாததால போக முடியல..அம்பாளே உன் ரூபத்தில் வந்து மாலையை வாங்கிண்டு போயிருக்கான்னு தோண்றது...நீ ஏதாவது தரணும்னு நினைச்சா அம்பாள் பிரசாதம் குடு ம்மா என்றதும்"இந்தாங்க சர்க்கரைப் பொங்கல் பிரசாதம்..கோவில்ல கொடுத்தாங்க..என்று கொடுத்தாள் அந்தப்பெண்..பொங்கலின் மேல் மாமி கட்டிக் கொடுத்திருந்த மாலையிலிருந்த ஒரு பூ வும் ஒட்டிக் கொண்டுஇருந்தது..சியாமளா மாமியின் கண்களின் வழிந்த கண்ணீருக்கு அர்த்தம் புரியவில்லை அந்த பெண்ணிற்கு🌹🌹🙏🏿🙏🏿🌹🌹
.
No comments:
Post a Comment