Tuesday, January 4, 2022

பதில் தேடுகிறேன் தொடர் 9

பதில் தேடுகிறேன்:--தொடர் 9...

கால் போனபோக்கில் சிறிது நேரம் நடந்த நாதன்...ஏதோ ஒரு கோவில் தென்பட்டதும் உள்ளேபோய் சவாமி தரிசனம் பண்ணினேன் என்று பெயர் பண்ணிவிட்டு அங்கு படியில் ஓர் ஓரமாக உட்கார்ந்துகண்ணை மூடிக்கொண்டு காயத்ரி மந்திரத்தை சோல்லிக்கொண்டு தன் மனவேதனையை மாற்றிக் கொள்ளும் முயற்சியில்யோசனைகளை தவிர்த்தார்!!!

இரவு வீட்டுக்கு போய்தானே ஆகவேண்டும்...

வீட்டில் நாதன் வருகைக்காக காத்திருந்த மாமா வந்ததுமே"ஏம்ப்பா...எதுவுமே பேசாமல் இருந்தால் எப்படி "என்று ஆரம்பித்தார்...குடும்பத்தில் எல்லோருக்குமே மாமாவிடம்  மதிப்பு மரியாதை பயம் எல்லாமேஅதிகம்...

நடந்ததை எல்லாம் அப்படியே மாமாவிடம்ஒன்றுவிடாமல் கூறினார்!!

",பெண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளை" என்று சீதாலட்சுமி கத்தி சாபமிட்டுக்கொண்டேமாங்கல்யத்தை தூக்கிவீசியதைச் சொன்னதும்!!!மாமா ரொம்பவே வேதனைப்பட்டார்!!!

பெண்டாட்டி இறந்துவிட்டாள் என்று. தந்தி வந்ததும் எப்படி குலுங்கி குலுங்கி நாதன் அழுதான்!அவனை சமாதான படுத்தி மேலே காரியங்களைச் செய்யச் சொல்லி அனுப்புவதற்கு இங்கு எல்லோரும் பட்டபாடு யாருக்கு தெரியும்????எல்லாம் தலையெழுத்து!!! அந்த பெண்சச்சு என்னவோ ரொம்ப சாதுதான்!!

அவளைப் பற்றியும் அந்த குடும்பத்தைப் ற்றியும் எல்லோருக்குமே தெரியும்!!!

அன்று இரவு யாருக்குமே தூக்கமில்லை!!!!

தாயில்லாக் குழந்தைகள் என்று எத்தனை ஆதங்கப்பட்டாலும் நடப்பது எதையும் மாற்ற முடியாதே!!!!

அடுத்த கட்டமாக கல்யாணத்துக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டுமே!!!

இதுவரை இரண்டு சின்ன பெண்குழந்தைகளையும்அத்தை...மாமா தாத்தா என்று பார்த்து செய்தார்கள்!!! தலைவாரி விட்டு...ஸ்கூலுக்கு கொண்டு விட்டு அழைத்து வந்து.வெள்ளி க்கிழமையானால் தலைக்கு எண்ணை வைத்து குளித்து விட்டு இன்னும் எத்தனையோ செய்யவேண்டும்....

மாமாக்கு வயசாச்சு....சின்ன அத்தை கல்யாணம் முடிந்து இன்னும் எத்தனை நாட்கள் இவர்களையே கவனிக்க முடியும்???புக்காத்துக்கு அனுப்பவேண்டுமே!!!!!

ஆனால் இரண்டு குழந்தைகளுக்கும்...சூழ்நிலைபுரியவில்லை....

அம்மா ஏதோ உடம்பு என்று ஊருக்குப்போனாலும் அத்தைக்கு கல்யாணம் நடந்தது!!!!மற்ற அத்தைகள் வந்தார்கள்!!கொஞசினார்கள் சாப்பிட ஏதேதோ பக்ஷணங்கள் நல்லநேரத்துக்கு சாப்பாடு!! அம்மா இறந்த உடன் பாட்டி வீட்டில் போனால் வந்தவர்கள் எல்லாம் ஐயோபாவம் தாயில்லா குழந்தைகள் என்று ஆதங்கப்படுவது!!!பெரியவர்கள் சேர்ந்து அழுவதை பார்க்க புரியாவிட்டாலும் ஏதோ வேடிக்கையாக பொழுது பௌகிறது!!!

ஒருமாத்துக்குமேல் பாட்டி இரண்டு பெரிய குழந்தை களையும் அப்பாகூட அனுப்பி விட்டு....சாகும் தறுவாயில் மகள் கேட்டுக் கொண்டதால் மூனறாவது குழந்தை மட்டும் இங்கேயே இருக்கட்டும் என்று ஏற்பாடு செய்துவிட்டார்கள்!!!!

ஐய்..ய்...ய்யா!!அப்பாக்கு கல்யாணம் வரும் என்கின்ற சந்தோஷமாக இரண்டும் குதித்துக்கோண்டிருந்தது!!!

என்ன அப்பா அடித்தாலும் மற்றவர்கள் தாயில்லாக் குழந்தைகள் என்று சொல்வதில் எல்லோரும் நம்மிடம் அன்பாக இருக்கின்றனர் என்று ஒரு அசைக்கமுடியாத திருப்தி!!!!

ஒர்ரிருவர் சித்தி பற்றி ஏதாவது சொன்னாலும் ஒன்றும் சரியாக புரியவில்லை!!! கல்யாணம்... சாப்பாடு...பக்ஷ்ணம்...கூட்டம் விளையாட்டு.... இது தான் நினைவில் நிற்கிறது!!!

No comments:

Post a Comment