பதில் தேடுகிறேன்:--தொடர்8
வீட்டில் படி ஏறியதுமே எல்லோரும் வேறு ஏதோ வேலையை கவனிப்பதுபோல் நாதனின் முகநத்தையும் நடவடிக்கைகளையும்....(காயா..பழமா)கேட்க பயந்து நோட்டம் விட்டனர்...
வாசலில் செருப்பை கழட்டி விட்டு...குடை..பை இரண்டையும் உள்ளே பெஞ்சியின் மேல் வைத்து விட்டு...சட்டை பனியன் களை கழட்டி போட்டபின்...முற்றத்தில்உள்ள வாளிநீரை எடுத்து முகம் கைகால்களை நன்றாக தேய்த்து தேய்த்து அலம்பிக் கொண்டு அங்கு கொடியில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்துதலையை வாரி சரிசெய்து.விபூதியை நெற்றி நிறைய இட்டுக்கொண்டு மீண்டும் சட்டையை எடுத்து போட்டுக் கொண்டதும்(உங்களைப்போல் தான்)வீட்டில் எல்லோருக்கும் பொருமையாக எத்தனை நேரம் தான் இருப்பது? ஊரிலிருந்து வந்திருந்த கடைசி தங்கை சற்று பயத்துடன் அருகில் வந்து " சூடாதோசை இருக்கு சாப்பிடுரியா...(அண்ணாஎன்றவார்த்தை பயத்தில் வாய்க்குள்ளேயேநின்று விட்டது.)
"ம்"என்று ஒற்றை எழுத்துதான் பதில் வந்தது...
வேகமாக பலகை போட்டு...டம்பளரில் தண்ணி எடுத்து வைத்து..சின்ன டிஃபன் தட்டை வைத்து. சுடச்சுட தோசை போட்டு.. மிளகாய்ப்பொடி கொண்டு வந்ததும் வேண்டாம் என்று கையால் சைகை செய்தார்...எப்பவும் எது சாப்பிடும் போதும் பேசமாட்டார்... ஜாடை தான் பதில்...
இதையெல்லாம் ஒரு ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து பொருமையாக மாமா கவனித்துக் கொண்டிருந்தார்..ஆஹா!நாதன் எத்தனை அழகு?!!கட்டு குடுமி...காதில் கடுக்கன்...கண்ணும் மூக்கும் எடுப்பு....நல்ல உயரம்... நல்ல நிறம்...அவரை..பார்த்தாலே பயம் மரியாதை இரண்டும்எல்லோருக்கும் வந்துவிடக்கூடிய. ஒரு தோற்றம்!!!மாமா
நாதனை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும்போது...
சாப்பிட்டு முடித்ததும் வெளியே கிளம்ப தயாராகிவிட்டார் நாதன்!!!!மாமா அவசரமாக எழுந்து வந்து.."போனவிஷயம் என்ன ஆச்சு? என்ன சொன்னார்கள்??
எதுவும் சொல்லாமல் கிளம்பி விடால் என்ன அர்த்தம்??""என்று சற்று கோபமாக கேட்டதும்
வாயை திறக்காமல் பையில் இருந்து அந்த மாங்கல்யத்தை அவர் கையில் கொடுத்துவிட்டு அவர் அதை எடுத்து பிரித்து பார்ப்பதற்குள் குடையை எடுத்துக் கோண்டு வாசலில் இரங்கிபோய்விட்டார்!!!!உடனே எல்லோருமே அங்கு என்ன நடந்திருக்கும் என்று யூகித்து விட்டனர்!!! ஏனென்றால் சீதாலட்சுமி பொல்லாதவள் என்று நாடு நகரமெல்லாம் தெரிந்த விஷயம்!!!
நடந்ததை எப்படி சொல்லமுடியும்!!பட்ட அவமானத்தை நினைத்துத்தான் நொந்து போகலாமே தவிர வார்த்தைகளால் எப்படி சொல்லமுடியும்!!!பேச்சு வரவே இரண்டு நாள் ஆகுமே!!!!
கடவுளே வைத்யநாதா..ஏன் இப்படி சோதிக்கறே!!!!!
No comments:
Post a Comment