Tuesday, January 4, 2022

பதில் தேடுகிறேன் தொடர் 10

 🌹பதிலை தேடுகிறேன்!:--தொடர்10..

எழுதுபவர்:--ஏ.வி.பிரேமா....

அந்த காலத்துக்கு கூட்டம்.... கல்யாணம் நன்றாக நடந்தது! என்பதெல்லாம் சரிதான்!! ஆனால் இந்த காலத்தில் இருக்கும் டாம்பிகத்தை பிர்த்தால் அந்த கல்யாணம் ஒன்றுமே இல்லை!!!வெகு சாதாரணம்!!!!ஏதோ ஒப்பேத்தியாச்சு!!

மறுநாள் தெரிந்தவர்கள் கல்யாணம் விஜாரிக்க வந்துவிட்டு..",.ஏண்டிம்மா....பருப்புதேங்காமாதிரி இத்துனூண்டா இருக்கியே... இந்த வபெரிய குடும்ப பாரத்தை தாங்குவியோ?"

இந்த வேண்டாத பேச்சும் கேள்வியும் வீட்டுக்கு வந்த புதுப்பெண்ணுக்குசங்கடத்தை கொடுத்தாலும் குனிந்த தலை நிமிராமல்.;வந்தவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு.உள்ளே போய்விட்டாள்!!!

உள்ளே வந்ததும் கடைசி நாத்தனார்.. "என்ன மன்னி:அந்தவம்பி என்ன கேட்டா?அதிகம் பேச்சு வெச்சுக்காதே.. அந்த மாமிக்கு கோள் மூட்டரதேவேலை!!நம் வீட்டு வேலை உண்டு.நாம் உண்டு என்று இருக்கணும்"!!ஆட்வைஸ்,

ஆரத்தி எடுத்து உள்ளே வந்ததுமுதல் அடுத்தடுத்து வேலை சரியாக இருக்கு! இந்த சின்ன நாத்தனார் சதா ஏதாவது இப்படி அப்படி என்று சொல்லி கலங்கவைத்துக்கொணாடேஇருக்கா!!! அந்த இரண்டு சின்ன வாண்டும் பெரிய மனுஷி மாதிரி எத்தனை கேள்வி?

இரண்டும் பேசும்போது ஏதோ வீட்டுக்கு வந்த வேண்டாத விருந்தாளிகளிடம்பேசுவதுபோல்¡ஓர் அலட்சியம்..எப்படியோ ஓருவாரம் ஓடிவிட்டது!!நாள் பார்த்து சின்ன நாத்தனாரை புக்காத்தில் கோண்டுவிட்டாச்சு!

அடுத்து இரண்டு பெண் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போயாச்சு!!இனி மாலைதான் பள்ளி விட்டு வருவார்கள்!!

புதுப் பெண்ணாய் எத்தனைநாள் இருக்க முடியும்?மாமாக்கும் சாப்பாடு போட்டு தானும் சாப்பிட்டபின் பாத்திரம் தேய்த்துக் கொணடிருந்தவளிடம் மாமா கூப்பிட்டு "அம்மாடி...வேலையமுடிச்சுண்டு செத்த'தாவாரத்துக்கு வா..குடும்பத்த பத்தி உங்கிட்ட வேண்டும்"என்றார்..

கிராமத்தி கூடம் தாழ்வாரம் மித்தம் வாச ரேழி கொல்ல ரேழி காமிராஉள்(மளிகைசாமான்!...பாத்திரங்கள்.இன்னும்அதிகப்படிகளைவைக்கும் டஞ்சனான அரை) என்று எந்த வீடுமே சற்று பெரிசாகத்தான் இருக்கும்!!

வேலையை முடித்துக்கோண்டு..மாமா இருக்கும் இடத்துக்கு வந்துசுவர் ஓரமாக நின்று கொண்டு "எதற்கு கூப்பிட்டேள்",என்று பவ்யமாக குரல் கொடுத்தாள்!!!

"அம்மா பானு!!! உன்னை பற்றி..உன் குடும்பத்தை பற்றி முன்பே எனக்குத்தெரியும்!!!ஆனாலும் சொல்வதை சோல்லித்தானே ஆகணும்!!

எனக்கோவயதியுடுத்து!!எத்தனைநாள் என்று தெரியாது!!! இங்கு நாதன் இருக்கானே ரொம்ப கோவக்காரன்!எதற்கும் கைதான் அதிகம் பேசும்!!!6,நாத்தனார்களும் கெட்டிக்காரர்கள்!! ஜாக்கிரதையாக பேசணும்!! குழந்தை இரண்டும்..தாயில்லாக்குழந்தைகள்!!!கொஞ்சம் (என்ன) நிறையவே படுத்துவார்கள்!!!கவுருவமாக சமாளிக்கணும்!அக்கம் பக்கத்தில் தெரிவது போல் எப்பவும் நடந்துக்கக்கூடாது!இன்னும் ஏதேதோ சொன்னார்!!! அதற்கு மேல் அதை கேட்கும் திறன் அளுக்கு இல்லை..

வீட்டுக்கு எப்பவும் மாத்தி நாத்தனார் கள் (கொஞ்சநாள் வரைதான்) வந்து போவார்கள்!குழந்தைகளுக்கு செல்லம் கொஞ்சி எதையாவது சொல்லிவிட்டு போய்விடுவார்கள்!!இந்த இரண்டும்ஏடாகூடம்பண்ணும்!!ஆச்சு ஆறு மாதத்தில்...மாமா காலமும் முடிந்து விட்டது!இனி..... இப்போது தான் இரண்டாவது மனைவிக்கு தான் வளர்ந்த பிறந்தவீட்டு வாழ்க்கையை அசைபோட நேரம் கிடைத்தது!!!

கணவர் 6மணிக்குத்தான்வருவார்!பெண்கள் இரண்டும் பள்ளிக்கு கொஞ்சதூரம் நடந்துபோய்விட்டுவர(அந்த காலத்தில்... மணி. பள்ளிக்கு போனால். குளித்து விட்டு தான் உள்ளே வரணும்!!அதனால் வழியில் குளத்தில் குளித்துவிட்டு ஈர உடையுடன் வந்து வேறு உடை அணிவார்கள்!!!நாதனுக்கும் அரசாங்க உத்யோகமானதால் சதா மாற்றலாகிக்கொண்டே இருக்கும்!!!பள்ளிக்கூடமும் அடிக்கடி மாற்றவேண்டிவரும்!!!ஜாலிதான்...எல்லாம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களில் தான்!!!

ஊரில் அம்மா...அப்பா...தம்பிகள்... தங்கை என்ன பண்ணிக் கொண்டிருப்பார்கள்!!!எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்து!!ஏ.வி.பிரேமா...

No comments:

Post a Comment