Sunday, January 9, 2022

மனதோடுமலர்கள்_40

மனதோடுமலர்கள்_40

அத்யாயம்  40

'அம்மா, நான் மாலதிய ஸ்டேஷன்ல கொண்டு விட்டு வரேன். டிக்கட் வேற ரிஸர்வ் பண்ணலைனு சொல்றா. ட்ரெயின்ல கூட்டம் இருந்தா, பஸ்ஸுல தான் ஏத்திவிடணும்'.

ஏற்கும்படியாக இருந்தது அனுவுக்கு.

'ராஜி அப்பா வண்டி வேற இன்னிக்கு இல்லை. சீக்கரம் கிளம்பினா தேவலை.'

'ஏழரை மணிக்கு கிளம்பினா போறாதா?'

பேசிக் கொண்டிருக்கும்போது சச்சு மாமி வந்தாள்.

'அண்ணு மாமி. ஒரு குட் ந்யூஸ். வர ஞாயிற்றுக்கிழமையே பெண் பார்க்கலாம்னு சொல்லிட்டா. மாமாகிட்டேயும் பொண்ணு கிட்டேயும் சம்மதம் வாங்கிட்டாளாம் ஸ்ரீமதி மாமி.

நல்ல வேளை, நான் பாகிரதியாத்திலேந்து கிளம்பறதுக்கு முன்னாடியே தகவல் கெடச்சது.'

'அப்புறம் என்னடி கவலை மாலதி?  அப்பாகிட்ட சம்மதம் வாங்கி எனக்கும் தெரியப் படுத்து. நானே நேரில் போய் ஸ்ரீமதிகிட்ட சொல்றேன்.'

மாலதி சச்சு மாமிக்கு தேங்க்ஸ் சொன்னாள். 'கவலைப் படாம போம்மா. அண்ணு மாமி எப்படியும் வரன முடிச்சுக் கொடுத்துடுவா.'

சச்சு மாமி ஒரு சில நிமிஷம் பேசிவிட்டு கிளம்பினாள்.

'டைம் ஆச்சு. சீக்கிரம், சீக்கிரம்' நம்ம ஹீரோ இது.

'இந்தாடி, ஓமபொடி இந்த டப்பால போட்டிருக்கேன். பைக்குள்ள வெச்சுக்கோ.'

மாமி நமஸ்காரம், ஸ்வாமி நமஸ்காரம் முடிந்தது. அம்மாவின் இரு கைகளையும் பற்றினாள். லேசான கலக்கம்.

பையை தோளில் சுமந்து கொண்டான். தெருக்கோடி வரை திரும்ப திரும்ப அம்மாவைப் பார்த்து கை அசைத்துக் கொண்டு திரும்ப திருப்ப பார்த்துக் கொண்டு நடந்து வந்தாள்.

தனித்து நடப்பது காதலுக்கு சுகம். நாணத்தை மறக்காமல், அள்ளி எடுக்காமல், துள்ளி விழாமல், மனதோடு மனது பேசும் வார்த்தைகளே உள்ளங்களை மயக்கிவிடும். காதல் ஸ்பரிசம் தேடும், ஆனால் கண்ணெதிரில் தெரியும் கௌரவம் அடக்கிவிடும். ஏதாவது பேசவேண்டும் என்று தோன்றும். என்ன பேசுவது என்பதிலேயே முழிக்கும். 

உரிமையோடு தொடரும் காதலுக்கு ஸ்பரிசமும் பேச்சும் தானாக விழும். ஆனால், நம்பிக்கையோடு தொடரும் காதலுக்கு பல நேரங்களில் மௌனமே பேசும். இட் இஸ் எ கைண்ட் ஆஃப் பெக்யூலியர் டெலிபதி.

கண்ணை விட்டு உருவங்கள் பிரிந்து விட்டால் நினைவுகளோடு தொடரும், அது மட்டும் சாத்தியம்.

நடக்கும் போது என்ன பேசுவது என்று நினைக்கும். உட்கார்ந்தால் விரும்பும் பேச்சு வராது.

இப்படித்தான் பேசாமல் நடந்தார்கள். அதாவது மனம் விரும்பும் பேச்சுக்கள் இல்லை. அம்மாவைப் பற்றி, சச்சு மாமியை பற்றி, அக்காவுக்கான வரனைப் பற்றி, மாம்பலம் பற்றி, எதிர்பார்க்கும் போஸ்டிங் பற்றி.

விரும்பும் டாபிக்குகள் மனதிலும் டைப் அடித்துக் கொண்டுதான் இருந்தன. யதார்த்தத்துக்கு வலிமை அதிகம், ஏனெனில் வெளிப்படையான காதல் மொழிகளை அடக்கி ஆளும் குணம் அதற்கு உண்டு.

தாம்பரம் வந்தாச்சு. ஸ்டேஷனில் கூட்டம். ட்ரெயின் பிடிக்கவேண்டும். எப்படியாவது.

'இன்னிக்கு சன்டே. ரிஸர்வ் வேற பண்ணல. எப்படி போவ. பேசாம திரும்பிடலாமா ஆத்துக்கு?'

'இல்லை, இல்லை. இப்ப எஸ்.ஒ. வை பகைச்சுக்க கூடாது. மெட்ராஸ் போஸ்டிங்ல ப்ராப்ளம் வந்துடும். வேலை நிறைய இருக்கு.'

'சரி. என் ஃப்ரெண்டு ரவியோட ரிலேடிவ் இங்க ஸ்டேஷன் மாஸ்டரா இருக்கார். அவர் இருந்தா கேட்டுட்டு வரேன் எப்படியாவது ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்டுல ஏற சான்ஸ் இருக்கான்னு. அப்புறம் டிக்கெட் எடுக்கலாம். நீ இங்கேயே இரு. படிக்கட்டு ஏறி இறங்கி அவஸ்தை படவேண்டாம்.'

இரண்டு மூன்று படிக்கட்டாய் இறங்கி, S.M. அறைக்கு சென்றான்.  இருந்தார்.

'பார்க்கலாம். சீட் இல்லாட்டியும் ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்டுல பயணம் செய்யற மாதிரி ஏற்பாடு செய்கிறேன். பரவாயில்லையா?'

சம்மதித்தாள்.  வண்டி வந்தவுடன் TTE கிட்ட பேசினார். விழுப்புறம் வரைக்கும் நோ சீட். ஏற்றிவிட்டான். 

வண்டி கிளம்பியது. கம்பார்ட்மெண்ட் கதவருகில் அவள் வண்டியோடு ஓடிவரும் அவனை வேண்டாம் என்கிறாள். இருந்தாலும் கொஞ்ச நேரம் இவனுக்கு, அவளுக்காக ஓடும் சிந்தனையில்.

'ச்சே என்ன பொண்ணு இவ. ரிஸர்வ் பண்ணாம. விழுப்புரம் வரை எப்படித்தான்?' அவள் வலிகள் இவனுக்கு ரணம்.

'ஏற்கனவே அலைச்சல், வேலூர்,மெட்ராஸ், அம்மாவோடு மாம்பலம்...'

'எப்படியோ, ஒரு அக்காவுக்காவது முடியணும். அம்மா எப்படியும் முடிச்சுடுவா. அம்மாக்கு தான் என் மீது எவ்வளவு ஆசை?'

மாறி, மாறி சிந்தனைகள். தாம்பரம் ஸ்டேஷனுக்கு வெளியே வந்தான். நெடு நேரம் புகையில்லை. முடியவில்லை. சிந்தனை சிகரட்டை முடித்தான்.

கூடவே ஒரு க்ரேன் பாக்கு பொட்டலம். அம்மா கிட்ட மாட்டிக்க கூடாதே.

'அம்மாகிட்ட எப்படி பேச்சு கேட்கறது. இதுவரை சமாளிச்சிண்டு வரோம் அம்மாக்கு தெரியாம. சனியன விட முடியல. இன்னும் மாலதிக்கு தெரிஞ்சா... அதுக்கு முன்னாடி விட்டுடணும்.'

ஒரு மாசமா இதே ரிஸல்யூஷன். எங்க முடியறது?

தொடரும்

No comments:

Post a Comment