Monday, January 3, 2022

மனதோடுமலர்கள்_23

மனதோடுமலர்கள்_23

அத்யாயம்  23

ஃபோனில் சொன்னபடியே மாலதியை வரவேற்க ராஜி தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு காரில் வந்துவிட்டாள்.

'அக்கா, எப்படி இருக்கேள்?'.

'ஃபைன் மாலதி. பிரயாணமெல்லாம் சௌகர்யமா இருந்ததா?'.

காரில் ஏறிக்கொண்டார்கள். க்ரோம்பேட்டை ராதா நகரை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. கார் சற்று நகர்ந்தவுடனேயே ராஜியின் கிண்டல் ஆரம்பம்.

'முட்ட கண்ணன் ரொம்ப வழிஞ்சானோ?'

'அக்காஆஆஆ. அழுதுடுவேன்'.

'பயங்கரமா க்லாஸ் எடுத்தியாமே. தம்பி சொல்லிச்சு.'

'எல்லாம் உங்களால தான்.'

'ஓ. பழி கடைசில என் மேலேயா.'

'அது இருக்கட்டும் அக்கா. உங்க படிப்பெல்லாம் எப்படி போயிண்டிருக்கு? எப்ப கல்யாணம் உங்களுக்கு? ஆத்துல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாச்சா?'

'அதுக்கு ஒரு வருஷம் இருக்கு. MD படிப்பு முடிஞ்சதும். எங்க மாமா பையன் Dr.விஷ்வநாத்தை தான் பண்ணிக்கப் போறேன். சின்ன வயசிலேயே ரெண்டு பேர் வீட்டிலேயும் தீர்மானிச்சாச்சு. ஹார்ட் சர்ஜன். என்னோட படிப்பு முடியறதுக்காக வெயிட் பண்றார்.'

'க்ரேட் அக்கா'.

'பயங்கர பிஸி அவர். பேசியே ஆறேழு மாசம் இருக்கும். எனக்கும் படிப்பு சரியா இருக்கு. அவரும் ப்ரொஃபஷன்ல தீவிரமா இருக்கார். எப்படியும் கல்யாண மண்டபத்துக்கு வந்துடுவார்னு நெனைக்கிறேன்.'

சிரித்தாள் மாலதி. 'உங்க கிட்டேந்து நிறைய கத்துக்கணும் அக்கா. இந்த பதினைந்து நாளிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள். மனசே சரியில்லை அக்கா.'

அவள் சொல்வதை கேட்டுவிட்டு 'ஆர் யூ டயர்ட் பை ட்ராவல்?'

'இல்லை அக்கா. நல்லா தூங்கினேன் ட்ரெயினில்'

கார் அப்போது சானடோரியம் தாண்டியிருந்தது. வண்டியை ஓரம் கட்டி, இன்ஞினை ஆஃப் செய்தாள் ராஜி.

'ஆத்துக்குப் போனா உன் மேட்டரா பேச முடியாது. அதான் பத்து நிமிஷம் பேசிட்டு ஆத்துக்கு கிளம்பலாம்னு நெனைக்கிறேன். என்ன?'

தலை அசைத்தாள் மாலதி.

'இப்ப சொல்லு, டூ யூ ரியலி லைக் ஹிம்? பீ ஃரேங்க் மாலதி, வீ ஆர் ஆல் எஜுகேட்டட்.'

'அதான் அவர் கிட்டேயே சொல்லிட்டேனே அக்கா பிடிச்சுருக்குன்னு'

'ஓகே ஃபைன். எனக்கு அவன் கூட பொறக்காத தம்பி. உன்னை நான் முதல் முதல்ல திருச்சில போன வருஷம் பார்த்த உடனேயே அவன் உன்ன கல்யாணம் பண்ணிண்டா நன்னா இருக்குமேன்னு எனக்கு பட்டுது. அவன் கிட்டேயோ உன் கிட்டேயோ சொல்லல. நேரம் வரச்சே சொல்லிக்கலாமேன்னு இருந்தேன். எதேச்சயா அவன் திருச்சி கிளம்பறேன்னான். நான் அப்போ ஏதோ விளையாட்டா பண்ண, எப்படியோ நல்லபடியா ஆனதுல சந்தோஷம்.'

'மாலதி, உங்க ரெண்டு பேர் கிட்ட இருக்கிற ஃபீலிங்கை லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி, ரேஞ்சுக்கெல்லாம் திங்க் பண்ணிண்டு மனச போட்டு குழப்பிக்க வேண்டாம். எனக்கு இவரை பிடிச்சுருக்கு, அவரோட எனக்கு லைஃப் அமஞ்சா நன்னா இருக்கும் அப்படிங்கற ஃபீலிங் தற்சமயம் இருந்தா போதும். காலம் கைகூடி வரும்போது எல்லாம் நல்ல படியா நடக்கும்.'

'முன்பின் தெரியாதவர் கூட வாழ்க்கையை அமைச்சுக்கறதை விட சற்று அறிமுகமானவரோடு அமைச்சுண்டா பெட்டர். அந்த ஆஸ்பெக்ட்டுல மட்டும் பார்த்தா போதும். ஊர் சுத்தறது காதல் இல்ல. உள் மனசோட பேசறது அது. நம்ம சாய்ஸுல கல்யாணம் பண்ணிண்டா, பின்னாடி காம்ப்ரொமைசஸ் பிகம் மச் ஈஸி.'

'சந்துருவோட அம்மா ஒரு பரோபகாரி. வெரி ரெஸ்பான்ஸிபிள் லேடி. அந்த மாமி கிட்டேந்து நான் கத்துண்டது நிறையனு கூட சொல்லலாம். ஷி இஸ் எ டேர் டெவில் ச்சாலன்ஞ்சர். யூ வில் சர்ட்டன்லி லைக் ஹர் வென் யூ ஸீ ஹர் டுடே.'

அதுவரை கேட்டுக் கொண்டிருந்த மாலதி சற்று உணர்ச்சி வசப்பட்டு ராஜி தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

'தேங்க் யூ அக்கா. கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் நீங்க எனக்கு அக்காவா கெடச்சதற்கு. ஐ அம் இன்டெட்டட் டு யூ எவர்'.

'இப்ப, உங்க ரெண்டு பேர் முன்னாடி இருக்கற பிரச்சனை உங்க அக்காக்கள் கல்யாணங்கள் தான். அதற்கு உடனே ஏதாவது செய்ய முயற்சிப்போம்'.

'ஷல் வீ கோ நௌ?'

கிளம்பினார்கள் இருவரும்.

ராஜியின் ராதா நகர் வீடு வருவதற்கு முன் வந்த சந்துரு வீட்டை அவளுக்கு காண்பித்தாள் ராஜி. 'இதாம்மா உங்க மாமியார் வீடு. இங்க தான் ஒன்னை அடைக்கப் போறோம்'.

சிரித்தாள் மாலதி. ராஜி வீடு வந்தது. பெரிய வீடு.

அம்மா வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

'நான் சொல்லல. இவதான் மாலதி. எ க்ரேட் என்டர்டெய்னர்'.

'வாம்மா...உள்ள வா'.  ராஜியின் அம்மாவின் வரவேற்போடு உள்ளே நுழைகிறாள் மாலதி.

தொடரும்

No comments:

Post a Comment