🙏🌹 பதிலைத் தேடுகிறேன்:--12 🌹🙏ஏ.வி.பிரேமா.
பானுவுக்கு மனதில் ஏகப்பட்ட கேள்விகள்!!!!தனக்குக் குழந்தைபிறக்குமா?பிறந்தால் அதுவும் பெண்ணாகப் பிறந்தால் என்ன செய்வது!? மூன்று ஆகிவிடுமே?அட..ச்சே..ஊரில் ஓன்று இருக்கே அதை அவர்கள் இங்கு தள்ளிவிட்டால் நான்கு பெண் குழந்தைகளாகிவிடுமே!!!!
பானு பிறந்த வீட்டுக்கு ஒன்றிரண்டு நாட்கள் போய்வந்தால் இந்த இரண்டு பெண்ணும் நன்றாக வீட்டை பார்த்துக்கொள்ள பழக்கி விட்டாள்!அது இரண்டும் சண்டை என்றுவந்துவிட்டால் அரிவாளும்...அருவாமணையும் எடுத்துக்கோண்டுஒன்றை ஒன்று விரட்டிக்கொண்டு வீட்டை சுற்றி சுற்றி ஓடி சண்டை அமக்களப்படும்!!சமாதானப் படுத்து வதற்குள் பானுவுக்குப் போதும் என்றாகிவிடும்!!! பானு விடம் கோபம் வந்தால் இரண்டும் சேர்ந்து அவளை எங்க வீட்டு சோத்தத் திண்ணுட்டு எங்களயே பேசினே அப்பாவிடம் உன்னை மாட்டிவிட்டு வோம் என்று பயம் காட்டும்!!!பானு ஊருக்குப் போய் விட்டால் கூட்டு சேர்ந்து கொண்டு வீட்டில் அமக்களம் பண்ணிக் கொண்டு இருக்கும்!!!
காலம் இதற்கெல்லாம்நிற்காதே!அதுஓடிக்கொண்டேதானே இருக்கும்!!
மூன்று வருடங்கள்ஓடி விட்டது! பானுவும் தாய்மை அடைந்தாள்!!!
அடடா!!!பத்மாவை பாட்டி வீட்டில் விட்டோமே!!! என்ன ஆச்சுன்னு பாக்கலாம்.!!!வாங்க!
பத்மாக்கு இரண்டு வயதில் நிமோனியா வந்து ரொம்ப பாடுபட்டார்கள்!இனி பிழைக்காது என்றுநினைத்துக் கொண்டிருந்தார்கள்!பிழைத்து வந்துவிட்டது!அடுத்து (லிவர்க்யூர்என்ற)கட்டி வந்து....கத்தரிக்காய்க்கு கை!!கால் முளைத்தது போல் உடம்பில் வயிறுதான் பெரிதாக இருந்தது!!!அதற்கு வைத்தியம்!!!இந்த தடவையும் பிழைக்காது என்றுதான் நினைத்தார்கள்!!!நினைத்தது நடக்க வில்லையே!!!!
பாட்டி செல்லம்!!பெரிய அலுமினிய தட்டு நிறைய(குழந்தை சாப்பிட ஆரம்பித்தது முதலே இப்படித்தான்)சாதத்தை பிசைந்து குழந்தை வேண்டாம் என்றாலும் பாட்டி விடாமல் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு கட்டுவாள்!!!மாமி மீனாவோ....இப்படி சாதத்தை குழந்தைக்கு அடைத்தால் எப்படி ஜீரணமாகும்?என்பாள்!!உடனே சீதாலட்சுமி பாட்டிக்கு கோவம் வந்துடும்!!!பாவம் தாயில்லாக் குழந்தை கண் வைக்காதே!!என்று மருமகளுடன் சண்டைபோடுவாள்!!வீட்டில் தோசை பண்ணினால்(அந்த காலத்தில் பெரியவர்கள் மட்டும்தான் இரவு பலகாரம் என்று தின்பார்கள்...சின்னவர்களுக்கு பாதி தோசை தான்!...அதுவும் சில சமயதாதில்தான் கொடுப்பார்கள்!!!அதுவே அமாவாசைஅன்றுதான்...மகனுக்கும் மருமகளுக்கும் பலகாரம்),பாவம் குழந்தை பத்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று அதுவும் கிடைக்காது!!!மாமி இரவு தோசை சாப்பிடும் போது குழந்தை முதுகைக் கட்டிக்கொண்டுமுகத்தை சாய்த்து சாய்த்து பார்க்கும்!!!மாமி மீனா இரண்டு வாய் தோசை கொடுத்தபின் தான் நகரும்!!!எல்லோருக்கும் குழந்தை பத்மா மீது கோபம்...ஆசை...அனுதாபம்.கலவையாக இருந்தது!!!
No comments:
Post a Comment