Sunday, January 9, 2022

பதில் தேடுகிறேன் தொடர் 13

 🙏🌹 பதிலைத் தேடுகிறேன்!!:--13.🌹🙏

எழுதுபவர்...ஏ.வி.பிரேமா!!!!

நாதன் சிலசமயம் பெண்கள் இரண்டுக்கும் லீவு விட்டால் பாட்டி வீட்டில் கொண்டு விடுவார்...இங்கு பத்மாவை அவர்கள் கொஞ்சுவதை பார்த்து இரண்டும் விம்மி வெடிக்கும்!!! இரண்டு நாள் ஆனதும் பாட்டியும் இந்த ரேஷன்காலத்தில்(அப்ப அரிசி துணி எல்லாம் ரேஷன்... சாதாரண மானவர்கள் காலம் தள்ளுவது ரொம்பவே கஷ்டம்.) "இரண்டையும் இங்கு விட்டிருக்கானே!!!நான் எப்படி சமாளிப்பேன்", என்று புலம்பி தள்ளுவாள்!!!அதுவேறு இரண்டுக்கும்...கோவம் துக்கம்...

பாட்டி சீதாலட்சுமிக்கும் எல்லா குழந்தை மீதும் ஆசைதான்!!என்ன செய்வது?மகன்...மருமகள்.... வரதட்சணை கேட்டு வீட்டுக்கு வந்திருக்கும் பெண்..குழந்தை பத்மா வேறு!ஏதாவதுவியாதிஎன்றுடாக்டர்செலவு!!!! எப்படி சமாளிப்பது????

நாதன் வீட்டுக்கு வந்தால் பத்மா கிட்டவே போகமாட்டாள்!!!பிடிக்காது!!!மாமா எப்பவாவது நாதன் வீடு போனால் இரண்டு பெண்களுக்கும்...சிலேட்டு...பல்பம்...புஸ்தகம்...நோட்டு...பென்சில்.. என்றுஅவரால் முடிந்ததை நிறைய வாங்கி கொடுப்பார்!!!

இங்கு வந்ததும் அம்மா சீதாலட்சுமியிடம்

அங்கு இரண்டு பெண் குழந்தைகளும் சித்தியிடம் கஷ்டப்படறதுகள்!!!நிறைய வேலைகள் வாங்குகிறார் என்று புலம்புவார்!!!அதை கேட்டுபத்மாக்குஅப்பா என்றால் ஓரேபயம்!!!

மேலும் இரண்டு அக்காக்களும் இங்குவரும் போதெல்லாம் .இவளை‌அழவிடுவார்கள்!!!அவர்களுக்கு பத்மா தனியாக எல்லாம் அனுபவிக்கிறாள் என்ற நினைப்பு!!!

சுபயோக சுப மூகூர்த்தத்தில் பானுவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்துவிட்டது.. பானுவிற்கு  ஒரே சந்தோஷம்!!! மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு பிறந்த ஆண் குழந்தலயல்லவா!!எல்லோருக்கும் மிகவும் சந்தோஷம்!!

ஒருவழியாக சீதாலட்சுமி ஒருநாள் மூச்சுவிடமறந்து தன்வாழ்க்கையை முடித்துக்கொணாடாள்!!!

ஆஹா!!பானுவுக்கு இனிமேல் அந்த குழந்தை பத்மாவும் இங்கு வந்து விடும்!!என்ன செய்வது என்றகேள்வி பூதாகாரமாய் எழுந்தது!!

காரியங்கள் எல்லாம் முடிந்து கொஞ்சநாள் சென்றபின் .

நாதன் ராமனிடம் வந்து குழந்தை பத்மாவை நான் அழைத்துப் போகிறேன் என்று கேட்டார்!

ஆனால் ராமனும்...மீனாவும்...வேண்டாம் இந்த குழந்தை ஏங்களுடனே வைத்துக்கொள்கிறோம் என்று சொல்லி விட்டார்கள் !!! ஆனால் மீனாவின் பிறந்த வீட்டாருக்கு இதில் துளியும் விருப்பமில்லை!!! சொல்லமுடியவில்லை!! குமுறிக் கொண்டிருந்தார்கள்!!!ஏ.வி.பிரேமா.!!!

(தொடரை படித்தமைக்கு நன்றி நாளை முடியும் பின்னர் சந்திப்போம்)

No comments:

Post a Comment