Sunday, January 9, 2022

பதில் தேடுகிறேன் தொடர் 11

 பதிலை் தேடுகிறேன்:--தொடர் 11ஏ.வி.பிரேமா...

நாதனின் இரண்டாம் தாரம் பானுமதி நினைவுகள் பின்னோக்கி நகர ....

அந்த காலத்தில் இல்லாதபட்டவர் களுக்கு கடவுள் வாரிவழங்குவது குழந்தை செல்வங்களைத்தானே?!!!அப்படித்தான் இரட்டை ப்படை வரிசையில் கடைசியாகப் பிறந்தவர்தான் பானுவின் தகப்பனார்..

மற்றவர்கள் ஏதோ வாழ்க்கை நடத்தும்போது. இவர் மட்டும்சரியான உத்யோகம் இல்லாமல்...கையில் காசுகிடைத்தால்.வெட்டி செலவு செய்ய நாட்டில் எத்தனை வழிகள் இல்லை?!!அதில் ஒன்றிரண்டு (முன்னணியில் உள்ளவற்றை),தேர்ந்தெடுத்து அதில் செலவு செய்து வந்தார்...

அம்மா அவயமோ ஐந்து குழந்தைகளை வைத்துக்கொண்டு மாமியார் மச்சினர் ஏன்று பெரிய குடும்பத்துக்கு சம்பளமில்லா வேலைக்காரி யாக!காலம்தள்ள வேண்டிய சூழல்!!இதில் பள்ளிப்படிப்பு கம்மியானாலும் அதை நன்கு நினைவில் வைத்துக்கொண்டு.....ஸமஸ்க்கிருதம்நன்கு தெரிந்து கொண்டு சாமிபக்தியுடன் வளர்ந்தவள்.தங்கைகளும் அப்படித்தான்!! இரண்டு பையன்களும் படிப்பில் சூட்டிகையானாலும் குடும்பம் இருக்கும் சூழலில் எப்படி அதிகம் படிக்க முடியும்??பெரியவன் ஏதோ உள்ளுரிலேயே வேலை!!!சின்னவனிடம் தாயாரே நீ திருடியாவது வேண்டியதை சம்பாதி என்றுதன்ஆற்றாமையை(கணவனின்பொருப்பில்லாதகாரணத்தால்)குடும்பத்தில் படும் அவமானங்கறளால்நொந்துபோய்அப்படிச்சொல்லி யாருக்கும்தெரியாமல் பெருகும் கணீரைத்துடைத்துக்கொள்வாள்!!

ச்சே... பிறந்த வீட்டில் பட்ட கஷ்டம் இங்கும் தொடரும் போலிருக்கே என்றுகவலைப்பட்டாள்!!!இனி கொஞ்சம் சாமர்த்தியமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள்!

அப்பாடி அதற்க்குள் மணி ஏகமாக ஆகிவிட்டதே என்று நித்துக்கொண்டு அடுத்த நேர வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்!!!

No comments:

Post a Comment