சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 18
சாமுண்டி ஹில்….
இவர் சொல்றார்...
அட்டகாசம் செய்து வந்த எருமை தலையன் மஹிசனை அழிப்பதற்காக அன்னை சாமுண்டீஸ்வரி ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமையன்று அவதாரம் செய்திருக்கிறாளாம்..
ஆதிகாலத்தில் இந்தப் பகுதி மகிஷாசூரன் என்ற அசுர வம்ச மன்னனால் ஆளப்பட்டதாகவும், அவனது பெயரிலேயே மகிஷா ஊரு என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும், அதுவே மருவி மைசூரு என்றானதாகவும் சொல்லப்படுகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனை வதம் செய்து இந்த நகரத்தின் காவல் தெய்வமாக மாறியதாக வரலாறு கூறுகிறது
சாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள். ஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த மஹிஷாசுரனிடம் போர் தொடுத்து அவனை வதம் செய்தார். அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்கு துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று சாமுண்டிமலையில் குடிகொண்டாள்.
கோயில் எதிரில் அசுர வம்ச மன்னனான மகிஷாசுரனின் பிரம்மாண்ட சிலை அமைந்துள்ளது.
சாமுண்டி மலையில் மற்றொரு குறிப்பிடத் தக்க அம்சம் இங்கு அமைந்துள்ள நந்தி சிலை ஆகும். 5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட சிலை ஒரே ஒரு கருப்பு சலவைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது இதன் விசேஷமாகும்.
ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் ஏழு தங்கக் கலசங்கள் உள்ளன. கருவறையில் எட்டுக் கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பழமையான இச்சிலை மார்க்கண்டேய மகரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டது.
இங்கு நரபலி, மிருகபலி அளிக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் இப்பழக்கம் நிறுத்தப்பட்டது கோபுர நுழைவு வாசலில் விநாயகர் வீற்றிருக்கிறார். வாசல் கதவில், அம்மனின் வெள்ளி கவசமிட்ட சிற்பங்கள் உள்ளன. வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். கருவறை முன் கொடிமரம், அம்பிகையின் திருப்பாதம், நந்தி உள்ளன. கருவறை வாசலில் நந்தினி, கமலினி என்னும் துவாரபாலகியர் காட்சி தருகின்றனர். சந்நிதியின் வலப்புறம் பைரவர் இருக்கிறார்.
அங்க இருக்கற பக்தாள்ளாம் சமுண்டியை வணங்கும் போது வீரமுண்டி சாமுண்டி நீனு....சர்வேஸ்வரின நீனு...அச்சு பெல்ல கோட்டே கட்டி...அசி கப்பு அந்தர ஆக்கி...வீ ளுதெள கொட்டின புட்டு...கோமளவல்லி நினகே...கொலுமண்டப கட்டிரம்மா.. என்று வணங்குகின்றனர்.
நானும் ்அம்மா தாயே லோகநாயகின்னு கன்னத்தில் போட்டுக்கறேன்.
சாமுண்டி மலை உச்சியிலேர்ந்து கீழே பார்த்தால் மைசூர் நகரம் முழுசா தெரியும்..இங்கேர்ந்தே பாத்துரு ஆட்டோ செலவு மிச்சம்னுட்டு சொல்றார்.
எனக்கும் உடம்பில் தெம்பில்ல பிருந்தாவன் கார்டன் மட்டும் போய்ட்டு வரலாம்கறேன்.
No comments:
Post a Comment