🌺🌹🌹🌺🌹🌺
உமா ராஜ்
காலச்சக்கரம்🕰️🕰️🕰️🕰️!!
புக்ககம் வந்த புதுசுல ஒரு அத்தை இருந்தார். வெள்ளந்தியா இருப்பார். அவர் கிட்ட பயமில்லாம ஜோக் அடிச்சு பேசற வழக்கம்! தப்பா எடுத்துக்க மாட்டார்.
இளரத்தம் இல்லியா, எதுக்கெடுத்தாலும் கெக்கபிக்கனு சிரிப்பா வரும் அர்த்தமே இல்லாம!!😂😂😂 ஒரு ரூம்ல சின்னதா ஃபேனை ஓடவிட்டு கதவு திறந்து வச்சுட்டு அடுத்த ரூம்ல படுத்துப்பா அத்தை. எனக்கு விசித்திரமா இருக்கும். சிரிப்பா வரும். அங்க எப்படி அத்தை காத்து வரும்னு கிண்டலா கேப்பேன். அதுக்கு, "காத்தோட்டம் இருந்தா போறும்டியம்மா!"னு சொல்லுவா! ஆனா அது என்னமோ மனசே ஒத்துக்காது! இது இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்ன!
இப்போ நேத்திக்கு ராத்திரி இந்த மார்கழில ஃபேனை போட்டா குளுருது, அணைச்சா புழுக்கமா இருக்கு னு சொல்லிட்டு, பெடஸ்டல் ஃபேனை யாருமில்லாத பக்கமா திருப்பி வெச்சுட்டு, காத்தோட்டம் வேண்டிருக்குனு இவர் சொல்றச்சே, சட்டுனு மண்டைல அடிச்சாப்ல அத்தை ஞாபகம்!!!🙄🙄 காலம்தான் எவ்வளவு வேகமா ஓடறது!!!
அதேமாதிரி, எக்ஸ்ஹாஸ்ட் ஃபேனை போட்டுண்டும் படுத்துப்பா அத்தை! ஏன்னு கேட்டா, கொசு வராம இருக்கும்னு சொல்லுவா!! வழக்கம் போல நமக்கு சிரிப்பா வரும்!! இப்ப யோசிச்சா லாஜிக்கலா தோணறது, அந்த இடுக்கு வழியா கொசு வரமுடியாது ஃபேனை போட்டா னு!!! ஹூம்! இதுக்கெல்லாம் வயசாக வேண்டியிருக்கே!!
கொசுறு
அத்தை ஆஸ்பத்திரியில் கடைசில படுத்துண்டிருக்கறச்சே தினமும் சாப்பாடு எடுத்துண்டு போய் பாத்துப்பேன். கடைசி நாட்கள்னு மனசுக்கு தெரிஞ்சு போச்சு!😢😢 யாரும் இல்லாதப்ப நைஸா ஆரஞ்சு மிட்டாய், சூடவில்லை மிட்டாய்லாம் வாய்ல போடுவேன், மூஞ்சில அவ்ளோ சந்தோஷம் தெரியும். ஆஸ்பத்திரி சிப்பந்தி ஒருதடவை, எடை பாக்கறப்ப என்னையும் பாக்க சொன்னார் சும்மா! அதுக்கு அத்தை, "எதுவும் லேசா எடைபோடாத! அவ அம்பது கிலோவும் தங்கம்டா!" னு சொன்னப்ப கண் நிரம்பி வழிஞ்சது ஞாபகம் வரது!!!😓😓😓
No comments:
Post a Comment