அற்புதமான யாளி
🌺🌺🌺🌹🌹🌹
கற்பனை. மனிதனின் கற்பனை சக்தியின் ஆற்றல் அளவுக்கு அதிகமானது. இன்று நம் கைகளில் தவழும் ஸ்மார்ட் மொபைல்களில் இருந்து கையெழுத்திடும் குமிழ்முனை பேனாக்கள் வரையில் அனைத்துமே ஏதோவொரு காலத்தில் மனிதனின் எட்ட முடியாத கற்பனையின் வடிவங்களாக இருந்தவையே. ஆனால் இன்று அவையனைத்தும் சாத்தியப்பட்டு விட்டன. இருப்பினும் மனிதனின் அனைத்து கற்பனைகளும் சாத்தியப்படக்கூடியவை அல்ல: நோயில்லாத வாழ்வு, மரணமற்ற அமரத்துவம் மற்றும் பாடப்பட்ட புராணக்கதைகள் போல. மனிதனின் எண்ணற்ற கற்பனையின் விளைவுகள் பலவும் இன்று விவாதப்பொருட்களாக மாறியுள்ளது. அதிலொன்று யாளி.
சக்தியின் அடையாளம்
சிங்கத்தின் கால்கள், குதிரையின் உடல், யானையின் துதிக்கை, கூரிய பற்கள், பாரிய தோற்றம். வலிமையின் அடையாளமாக விளங்கும் மூன்று மிருகங்களின் சேர்க்கையே யாளி. யாளியின் தோற்றத்துக்கு விளங்கும் ஒரே ஒரு சான்று கோயில் சிற்பங்களே. யாளியின் உருவ அமைப்பை கொண்டு அதனை மூன்று வகையாக வகைப்படுத்துவார்கள்.
மகரயாளி என்பதை பெரும்பாலும் ஆட்டுத்தலையுடன் இருக்கும் யாளி என்று கருதப்படுகிறது. எனினும் மகரம் என்பது முதலையை குறிப்பதால் இது முதலையின் உடலைப்புடன் கூடிய ஒரு யாளியாக இருக்க வேண்டும்.
சிம்மயாளி- சிங்கத்தின் தலையுடன் கூடிய யாளி. அதிகமான கோயில் சிற்பங்களில் இடம்பெறும் யாளி வகை.
கஜயாளி/யானை யாளி- யானையின் துதிக்கையுடன் விளங்கும் இந்த வகை யாளி அமைப்பு தென்னிந்திய கோவிலமைப்புகளில் மிகப்பிரசித்தி பெற்றது.
அஸ்வயாளி- குதிரை முகம் கொண்டது
ஸ்வன யாளி/ஞமலி யாளி- நாய் முகம் கொண்ட யாளி
மூஷிக யாளி- எலிமுகம் கொண்ட யாளி
யாளியின் வலிமையை அவற்றை சிற்பங்களில் முன்னிலைப்படுத்தும் விதத்திலேயே நம்மால் உணரக்கூடியதாக இருக்கும். சிம்மயாளியின் உருவங்கள் பெரும்பாலும் ஒரு சிங்கத்தை பின்னங்கால்களால் மிதித்தவாறு முன்னங்கால்களை உயர்த்தி பாயும் விதத்தில் நிற்கும். யாளியின் அளவோடு ஒப்பிடும்போது சிங்கம் ஒரு சிறு எலியை ஒத்தே காணப்படும். அவ்வாறே கஜயாளியின் சிற்பங்களிலும் அவற்றின் வலிமை சிறப்பாக வெளிக்காட்டப்படும். சிம்மயாளியை போலவே பின்னங்கால்களை தூக்கி நிற்பதோடு முன்னங்கால்களால் தன்னுடைய துதிக்கையை பிடித்த வண்ணம் நிற்கும். துதிக்கையின் அந்தத்தில் ஒரு யானையை தரையில் இருந்து பிரித்திழுக்கும் வகையில் செத்துக்கப்பகிட்டிருக்கும். யாளியுடன் ஒப்பிடும்போது யானையும் கூட மிகச்சிரியதே என்பது இதன் கருத்து.
இவ்வாறாக தொல்தமிழ் நிலமானது கடல்கோளால் அழிந்த போது அதனுடன் இணைந்து யாளிகளும் அழிந்து போனதாக கருதுவோர் உள்ளனர். மேலும் சிலர் குமரி நிலம் அழிந்தும் தமிழ் மக்களுடன் இணைந்து யாளிகளும் தென்னிந்தியாவுக்கு வந்ததாகவும், புதிய நிலத்தையும் அதன்கால நிலையையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் அழிந்து போனதாகவும் கூறுவதுண்டு. சில சங்கப்பாடல்களும் யாளி மிருகம் பற்றி கூறுவதால், யாளி மிருகம் மனிதர்கள் எழுத்தறிவு பெற்று கவியெழுதும் காலத்தில் கூட வாழ்ந்துள்ளதாக ஒரு தரப்பினர் கருதுவார்கள்.
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம்
(நற்றிணை)
(இந்தபாடலில் புலியால் தாக்கப்பட்டு இறந்து கிடக்கும் யானையின் உடலை யாளி தன்னுடைய நகங்களால் பற்றியே இழுத்துச்செல்லும் என்று கூறுகிறது. இது யாளியின் ஆற்றலின் அளவை எடுத்துரைக்கிறது)
வேறொரு தரப்பு யாளிகள் டைனோசர் காலத்தில் வாழ்ந்து அவற்றுடன் இணைந்தே அழிந்து போனதாகவும் கருதுகின்றனர்.
அறிவியலின் பார்வையில் யாளி.
கிடைக்கப்பெறும் ஆதாரங்களை ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவுக்கு வருவதே விஞ்ஞானத்தின் அடிப்படை. அந்தவகையில் யாளி என்ற ஒரு மிருகம் உண்மையில் வாழ்ந்திருக்க முடியாது என்பது விஞ்ஞானவாதிகளின் கருத்து.
இந்நாட்களில் பேசப்படும் குமரிக்கண்டம் என்ற நிலப்பரப்பு என்பது கற்பனையில் உருவானதே தவிர, உண்மையில் அத்தகைய நிலப்பரப்பு ஒன்று கடலுக்கடியில் இல்லை என்பது கிடைக்கப்பெற்ற புவியியல் ஆய்வறிக்கைகளின் படியான முடிவு. ஆகவே இல்லாத ஒரு கண்டத்தில் எவ்வாறு ஒரு உயிரினம் உருவாகி இருக்க முடியும் என்பது விஞ்ஞான தரப்பின் அடிப்படை கேள்வி.
No comments:
Post a Comment