Sunday, January 9, 2022

சீதாலட்சுமி

 காலையில் எழுந்து சீதாலட்சுமி க்கு நினைத்து நினைத்து மனம் ஆறவே இல்லை!

சீதாலட்சுமியின் மூன்றாவது பெண் ருக்மணியை உறவிலேயே திருமணம் செய்து கொடுத்தோம்! அந்த அண்ணன் பையனுக்கு தான் மூன்றாவது பெண் ருக்மணியை திருமணம் செய்து கொடுத்தது! திருமணம் முடிந்து 15 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் அண்ணன் மனைவி நீ போய் உன் அம்மாவிடம் 500 ரூபாய் வாங்கி வந்தால்தான் இங்கு எங்களுடன் வாழலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டாள்! இந்த குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் 500 ரூபாய் என்பது நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒன்று!

கணவர் சுந்தரேச சாஸ்திரிகள் என்னைவிட வயது கொஞ்சம் நிறைய வித்தியாசம் உள்ளவர்! ஏதோ அவர் உபாத்தியாயம் செய்து கொண்டுவரும் சொற்பமான பணத்தில் ஜீவனம் நடக்கிறது! பெரியபட்டி லட்சுமி என்பவளை அத்தை பையனுக்கு கட்டிக் கொடுத்தாச்சு! அவள் சௌகரியமாக வாழ்கிறாள்! இரண்டாவது பையன் ராமச்சந்திரன்! எஸ்எஸ்எல்சி முடித்து ஒரு புத்தகக் கடை வைத்திருக்கிறான்! அவன் கடை வைத்து வியாபாரம் ஆரம்பித்தது முதல் தன் அப்பாவை அதாவது சுந்தரேச சாஸ்திரிகளை உபாத்தியாயத் திற்கு போக வேண்டாம் என்று சொல்லிவிட்டான்! மூன்றாவது பெண் சரஸ்வதி! அவளை வெளியிடத்தில் திருமணம் செய்து கொடுத்தாச்சு! அந்த மாப்பிள்ளை அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்!அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள்!! கஷ்ட ஜீவனம் தான்!

இந்தநிலையில் நாலாவது பெண் ருக்மணியை புகுந்த வீட்டில் இருந்து ரூபாய் 500 கேட்டு அனுப்பி விட்டார்கள்!

இன்று அமாவாசை காலை காய்கறிகளை நறுக்கிக் கொண்டு சீதாலட்சுமி மனம் இத்தனை யோசனைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில்... எதிர்வீட்டில் வசிக்கும் பக்கத்தில் உள்ள பள்ளி ஹெட் மாஸ்டர் அவர் வீட்டு குழந்தையை அனுப்பி மாமா  கொஞ்சம

இன்னைக்கு எங்க ஆத்துல வந்து தற்பணம்   பண்ணிவைக்கசாசொல்லுங்கோ என்றுசோல்லிவிட்டுப் போனார்கள்!

நினைவுகலைந்த சீதாலட்சுமி வீட்டில் அடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்! மனம் என்ன சும்மாவா இருக்கு? இப்போது வேறு யோசனை ஆரம்பம்! தன் பையன் அப்பாவை வெளியே எங்கும் காசுக்காக போக வேண்டாம் என்று தடுத்து இருந்தாலும் அவனுக்கு தெரியாமல் தன் கணவரை காலை எட்டரை மணிக்கு மேல் ஒன்றிரண்டு இடங்களுக்கு அனுப்பி தற்பணம் பண்ணிவிட்டு வரச் சொல்வாள்! அந்த காலத்தில் என்ன நான் கனா தான் தருவார்கள்! அது குடும்பத்திற்கு ஏதோ ஒருவித உதவியாக இருக்கும்!

அப்படி அன்று 10 மணிக்கு கணவர் வேலை முடித்து வீட்டுக்கு வந்துவிட்டார்!

சுந்தரேச சாஸ்திரிகள் வீட்டின் உள்ளே நுழைந்ததும்... மேல் துண்டை எடுத்து நாற்காலி மீது போட்டுவிட்டு "அம்மாடி சீதா எனக்கு ரொம்ப பசிக்கிறது சமையல் ஆயிடுத்தா?"

"இன்னும் ஆகல... கொஞ்ச நேரம் ஆகும்!!

அதற்குள் எதிரில் இருக்கும் ஹெட் மாஸ்டர் வீட்டுக்கு போய் தர்ப்பணம் பண்ணிவிட்டு வந்துவிடுங்கள்... அதற்குள் சமையல் ஆகிவிடும்" என்றாள்..

"சரி அப்படி என்ன எனக்கு ஒரு டம்பளர் பாயசம் கொடு... ரொம்ப பசிக்கிறது" என்றார்...

"என்ன இது புதுசா இருக்கு? ஆகாரம் ஏதாவது சாப்பிட்ட பின்பு தற்பணம் பண்ணி வைக்கக் கூடாதே... சீக்கிரம் முடித்துவிட்டு வந்துவிடுங்கள் அதற்குள் சமையல் முடிந்து விடும். சாப்பிட்டு விடலாம்"என்றாள்..

", சரி"என்று கூறிக்கொண்டே சுந்தரேச ஐயர் எதிர் வீட்டுக்கு கிளம்பி போனார்..

பாதி மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் போது அவர் வாய் மந்திரங்களை உளறலாக உச்சரிக்க ஆரம்பித்துவிட்டது.

உடனே அவரை நிமிர்ந்து ஹெட் மாஸ்டர் பார்ப்பதற்குள் அய்யரின் கண்கள் சொருகிக்கொண்டு உடலில் ஒரு தள்ளாட்டம் தெரிந்தது...

உடனேயே அந்த ஹெட் மாஸ்டர் மாமா மாமா என்று கூப்பிட்டுக் கொண்டு அவரை மடியில் சாய்த்துக் கொண்டார்...

அந்த நிமிடமே சுந்தரேச சாஸ்திரிகளின் உயிர் பிரிந்து விட்டது! கலக்கத்துடன் எதிர் வீட்டுக்கு செய்தி அனுப்பினார்...

சீதாலட்சுமி இடி விழுந்தது போல் கலங்கி விட்டார். அதன் பிறகு நடந்தது எதுவும்... சொல்லும்படியாக இல்லை..

எப்படி 15நாட்கள் ஓடியது என்றே தெரியவில்லை!!!! பிள்ளை அன்று வந்து எப்படி கோபித்துக் கொண்டான்? என்ன செய்வது?பாவம் மனிதர் பசி என்று சொன்னார்! ஒரு வாய் பாயசம் கொடுத்து அனுப்பியிருக்கலாம்!நினைத்து நினைத்து அழுது சீதாலக்ஷ்மிக்கு வேதனைதான் மிஞ்சியது!! இப்போதுஇந்தசெலவுவேறு!!

கோவையில் பிறந்த வீடு போயிருந்த மருமகள் வந்துவிட்டாள்!அவள்பிறந்தவீட்டில் மூத்த பெண்!!ரொம்ப செல்லம்!!!!அடிக்கடி மயக்கம் என்று சொல்லிக்கொண்டு பிறந்த வீட்டுக்கு கிளம்பி விடுவாள்!!

சீதாலட்சுமியும் முடிந்தவரை அவளை வேலை வாங்குவாள்!! திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியும் மருமகள் மீனாவுக்கு குழந்தை பிறக்கவில்லை!

ஆச்சு! இரண்டாவது பெண் சச்சு.. இப்போது தான் மூன்றாவது பெண் குழந்தை உடனேயே 60நாட்கள்ஆனதும் கொண்டுவிட்டு ஆகிவிட்டது!

என்ன செய்வது என்று கலங்கி நிற்கும் போது.... அடுத்த பிரச்சனை! போஸ்ட் கார்டு ரூபத்தில் வந்துவிட்டது.....

மதியம் கடையிலிருந்து வந்த மகன் ராமன் அவசரம் அவசரமாக சாப்பிட்டு அம்மாவிடம் இரண்டாவது மகளிடமிருந்து வந்த போஸ்ட் விஷயத்தை சொன்னான்!

அதில் குறிப்பிட்டிருந்த விஷயம்--"அண்ணா நீ உடனே வந்து என்னை அழைத்துப் போய் விடு இங்கு இனி நான் இருந்தால் பிழைக்க மாட்டேன்"

அதில் அவளது இயலாமையும் துக்கமும் கஷ்டமும் ஏகமாக பிரதிபலித்தது...

உடனே இராமன் தங்கையை அழைத்துவர கிளம்பிவிட்டான். பஸ்ஸில் போனால் இரண்டு மணி நேரத்தில் போய்விடலாம்.

மகன் கிளம்பிப் போனதும் சீதாலட்சுமி மனம் மீண்டும் முன்பு வந்தபோது மகள் சொன்ன விஷயங்கள் நினைவில் வந்து மோதியது...

மகளை திருமணம் செய்துகொடுத்த இடத்தில் ஆறு நாத்தனார் அதில் நான்கு பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. வீட்டில் இரண்டு பேர்.  உறவில் மாமா ஒருவர் கூட இருக்கிறார். குடும்பமே கோபக்கார குடும்பம். வாய் பேச்சே கிடையாது. எதற்கும் அடிதான். அந்த மகானுபாவர் ஓ தன் தங்கைகளையும் கொஞ்சம் அடிக்கத்தான் செய்வார். ஆனால் மனைவியை அடித்து நொறுக்கி விடுவார்.

அவருக்கு பதினெட்டு வயதிலும் சரஸ்வதிக்கு பதிமூன்று வயதிலும் (சாரதா சட்டம் வருவதற்கு முன்) திருமணம் ஆகிவிட்டது. சரசு பெயருக்கு ஏற்றார் போல் மிக அழகாக இருப்பாள். அவளுக்கு வெந்நீரில் குளிப்பது ரொம்ப பிடிக்கும். வெந்நீரில் குளித்தால் உடற்கட்டு குறைந்துவிடும் என்று கணவர் சம்மதிக்க மாட்டார். அதற்கு அடி. சரசுவுக்கு காப்பி ரொம்ப பிடிக்கும்.. காபிக்கும் இதே கதை அடிதான். சமையலில் பாகற்காய் கறிக்கு சர்க்கரை போட்டால் சரசுவுக்கு பிடிக்கும். அதுவும் கூடாது அடி. இன்னும் ஒரு சில பல விஷயங்கள் வீட்டில் உள்ள இரண்டு நாத்தனார்கள் மூலம் கணவரின் கோபத்தை தூண்ட ஏதுவாக இருக்கும்.

சரசுவுக்கு வாழ்க்கையில் நிம்மதியே இல்லை.

இன்றும் இப்படித்தான் சரசு நெஞ்சில் ரொம்ப வலிக்கிறது. டாக்டரிடம் காட்ட வேண்டும். முடியவில்லை என்று சொல்லி இருக்கிறாள். அதற்கு கணவரோ இந்த வயதில் எப்படி நெஞ்சு வலி வரும்?  பொய் சொல்லுகிறாய். அதற்கு செம அடி கொடுத்துவிட்டு ஆஃபீஸ் போய்விட்டார். இரண்டு நாத்தனாரும் மாமாவும் கிராமத்திற்கு போய் விட்டார்கள். சரசு முடியாமல் மயங்கி கீழே விழுந்து விட்டாள். நினைவு வந்த பின் மெதுவாக எழுந்து வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டாவது பெண் உள்ளே வந்தபோது கொஞ்சம் தண்ணி வேண்டும் என்று கேட்டாள். ஆதி விளையாட்டுப் போக்கில் போ போ என்று சொல்லிவிட்டு திரும்ப விளையாட போய்விட்டது. சிறிது நேரம் பொறுத்து பெரிய பெண் உள்ளே வந்தபோது சரசு தண்ணி வேண்டும் என்று ஜாடையால் கேட்டிருக்கிறாள். அந்தப் பெண் தண்ணி கொண்டு கொடுத்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் அண்ணனுக்கு தபால் கார்டு எழுதி போட்டு விட்டாள்!

தங்கையைப் பார்க்க வந்த அண்ணனோ சரஸ்வதி நிலைமையைப் பார்த்து உடனேயே அவளையும் 3மாத கைக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.. மற்ற பெரிய இரண்டு பெண் குழந்தைகளையும் பக்கத்து வீட்டில் சொல்லி விட்டு விட்டு வந்து விட்டார்!

அழைத்து வந்து இரண்டு நாட்களில் டாக்டரிடம் காட்டினாள் டீபி என்று சொல்லிவிட்டார்!! அந்த காலத்தில் இந்த வியாதி ரொம்ப அபாயகரமானது! மருந்து கிடையாது! ஒட்டுவாரொட்டி! எல்லோரும் பயப்படுவார்கள்! ஆகவே சரசுவை மாடியில் உள்ள தனியறையில் வைத்து பூட்டி விட்டார்கள்.

மூன்றுமாத கைக்குழந்தை தனியாக தாயிடமிருந்து பிரிக்கப்பட்டது! சீதாலட்சுமியோ சின்ன மூணாவதுபெண்ணோ மாடிபக்கம் போக மாட்டார்கள்! மகனும் மருமகளும் தான் மாடிக்குப் போய் சரசுவுக்கு ரூமை சுத்தம் செய்து அவளுக்கு தலைவாரி விட்டு அவளது துணிகளை துவைத்து கொடுத்து அவருக்கு சாப்பாடு போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்து பழங்களை ஜூஸ் செய்து கொடுப்பது என்று அவளுக்கு உள்ள அத்தனை வேலைகளையும் மகனும் மருமகளும் தான் கவனிப்பார்கள்! டாக்டர் வீட்டுக்கு வந்து அடிக்கடி பார்ப்பார்! ரத்த ரத்தமாக வாந்தி எடுப்பாள்! அதையும் சுத்தம் செய்ய வேண்டும்! அவளது கணவரோ எப்பவாவது வருவார். வரும்போது சாத்துக்குடி பழம் (அந்த காலத்தில் துணிகளே ரேஷனில் தான் கிடைக்கும்) கொஞ்சம் ஜாக்கெட் பிட் என்று ஏதோ முடிந்ததை வாங்கி வந்து சரஸ்வதி இடம் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு போய்விடுவார்! அவரைக் கண்டாலே சீதாலட்சுமிக்கு பிடிக்காது! அப்போது அவருக்கு அரசாங்க சம்பளம் 40 ரூபாய் தான்!இப்படியே எட்டு மாதங்கள் கடந்துவிட்டன?

சச்சு வின் குழந்தை பத்மா தூக்கத்திலிருந்து எழுந்து பசியினால் அழும் சத்தம் கேட்டு அவசர அவசரமாக இயற்கையை புடவை தலைப்பில் துடைத்துக்கொண்டு சீதாலட்சுமி குழந்தையை துளியிலிருந்து தூக்கினாள்!

குழந்தைக்கு 11 மாதம் ஆகிவிட்டது நன்றாக நடக்கிறது! தானாக சுவற்றை பிடித்துக் கொண்டு நடந்து போய் மாடிப்படிகளில் தவழ்ந்து தவழ்ந்து ஏரி தன் அம்மா சச்சு இருக்கும் அறையின் கதவின் அடியில் உட்கார்ந்து கொண்டு அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கும்! சச்சு குழந்தையைப் பார்த்து ஏங்கி "அம்மா பத்மா உனக்கு நான் ஆசை ஆசையாக பெயர் வைத்தேன் என்னை பிழைக்கை வைடி"என்று அழுவாள்! குழந்தை பத்மாவுக்கு ஒன்றும் புரியாது! அதற்குள் கீழே இருந்து யாராவது வந்து குழந்தையை தூக்கிப் போய் விடுவார்கள்! தாய்க்கும் மகளுக்கும் உள்ள உறவின் நெருக்கம் எட்டு மாதமாக அவ்வளவே!

குழந்தை பத்மாவுக்கு தாய்ப்பால் இல்லாததால் பசும் பால் வாங்கி கொடுக்க கட்டுபடியாகாது! ஆகவே எருமைப்பால் தான் கொடுப்பது வழக்கம்! எட்டு மாதம் முதலே சாப்பாடு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்! குழந்தையும் நடக்க ஆரம்பித்து விட்டது! ஆனாலும் பெரியவர்கள் எல்லாம் இந்தக் குழந்தை இனிப் பிழைக்காது என்றுதான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள்!

மாமி மீனாவுக்கு குழந்தை பத்மா என்றால் ரொம்ப பிடிக்கும்! இன்னும் ஒரு மாதத்தில் குழந்தைக்கு ஆண்டு நிறைவு வருகிறது!!

சச்சவுக்கு ஆகும் செலவுகளை சமாளிப்பதே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது!

எப்படி ஆனால் என்ன.... சீதாலட்சுமி குழந்தையின் அப்பாவிற்கு அதாவது பத்மாவின் அப்பாவிற்கு குழந்தையின் ஆண்டு நிறைவுக்கு பணம் அனுப்பவும் என்று தகவல் அனுப்பி விட்டாள்..

சென்னையிலிருந்து பெரிய பெண் ஒருமுறை இங்கு வந்தபோது மாடி பக்கமே கண்ணை கூட திருப்பவில்லை! வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்பி விட்டாள்! அவர்கள் குடும்பம் ரொம்ப பெரியது! அவளுக்கு மே மூன்று பிள்ளைகள் இரண்டு பெண்கள் மாமனார் நாத்தனார் வருவார் போவார் என்று ஏகப்பட்ட கூட்டம்! நாளுக்கும் பொழுதுக்கும் வேலை சரியாக இருக்கும்!

சரஸ்வதி நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறாள் என்பது அவளைத் தவிர மற்றவர்களுக்கு தெரியும்!

நாட்கள் ஓடியது! குழந்தை பத்மாவின் காது குத்து விழாவுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தான் இருக்கு!

அன்று காலை வழக்கம்போல் டாக்டர் மாடியில் போய் சச்சுவை உடல்நலம் விசாரித்துவிட்டு நாடி பிடித்துப் பார்த்து எல்லாம் வழக்கம்போல் நடந்தது!

அதேநேரம் சச்சு மிக அதிகமாக ரத்த வாந்தி எடுத்தாள்! டாக்டர் உடனே சச்சுவின் அண்ணன் ராமனை கூட்டிக்கொண்டு கீழே இறங்கிப் போனார்!!......ஏ.வி.பிரேமா!!!!


No comments:

Post a Comment